Pages

Friday, 6 April 2012

தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன், ஆகியோருக்கு மன்னார் டெலோ அலுவலகத்தில் நினைவு அஞ்சலி !

தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன், ஆகியோருக்கு மன்னார் டெலோ அலுவலகத்தில் நினைவு அஞ்சலி
Thursday, 28.07.2011, 10:30am (GMT)



1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 25 ஆம் மற்றும் 27 ஆம் திகதிகளில் கொழும்பு வெலிக்கடை வெஞ்சிறையில் படுகொலை செய்யப்பட்ட ஆரம்பத் தலைவர் தங்கத்துரை மற்றும் ஆரம்பத் தளபதி குட்டிமணி ஆகியோரது 28 ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி (27-07-2011) புதன்கிழமை காலை மன்னார் மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(டெலோ) அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(டெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். டெலோ இயக்கத்தின் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.பற்றிக் வினோ உட்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment