Pages

Sunday, 15 April 2012

தம்நிலை மறந்து குரைக்கும் “ரெலோ” சிவாஜிலிங்கம்..

தம்நிலை மறந்து குரைக்கும் “ரெலோ” சிவாஜிலிங்கம்..


ANI.cat-dog.gifபாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற நிதியமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் TELO சிவாஜிலிங்கம் எழுந்த போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சபைக்குள் நுழைந்தார். அப்போது உரையாற்றிய சிவாஜிலிங்கம், அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் துரோகக் கும்பல் தமது இனத்துக்கு எதிராக செயற்படுகின்றது. பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது போல் எம்மைக் கேட்கிறார்கள். இவர்கள் மூழ்கிக் கொண்டிருக்கும் அரசுக் கப்பலில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாய் செத்த பின்னர் உண்ணிகள் கழருவது போல் இவர்களும் ஓடி வருவார்கள் என்று கூறினார்.
ஏனைய தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களும் டக்ளஸ் தேவானந்தாவை வசைபாடத் தொடங்கினர். இதையடுத்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சிலர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். இரு தரப்புகளிலுமிருந்து கூச்சல்கள், பலத்த சிரிப்பொலிகள், மேசைகளில் அடித்து ஆரவாரங்கள் ஆவேசக் கத்தல்கள் என பெரும் சத்தம் ஏற்பட்டதால் சபை 10 நிமிடங்கள் வரை அதிர்ந்தது.
பலத்த பிரயத்தனத்தின் மத்தியில் சர்ச்சை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அத்துரலிய ரத்ன தேரர் பேசுவதற்கு அழைக்கப்பட்டார். அவ்வேளை மீண்டும் டக்ளஸுக்கும் சிவாஜி லிங்கத்திற்குமிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
பின்னர் சிவாஜி லிங்கத்தை சக எம்.பி.யான ஷ்ரீகாந்தா சமாதானப்படுத்தி அமரவைத்தார். அப்போது சிவாஜிலிங்கம், உங்களின் எந்தப் பயங்கரவாதச் சட்டமும் எம்மை அசைக்க முடியாது. நீங்கள் எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும் நாம் அதனை முறியடிப்போம். பயங்கரவாத தடைச் சட்டத்தால் ஜே.வி.பி.யினர் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள். இவ்விடத்தில் அவர்கள் எம்மோடு சேர்ந்திருப்பார்கள். முடிந்தால் எம்மை கட்டுப்படுத்திப் பாருங்களென அரசுக்கு சவால்(?) விடுத்தார்.




(அமிர்தலிங்கத்தை கொன்றது யார்? TELO தலைவரைக் கொன்றது யார்? அது மட்டுமல்ல தமது அமைப்பின் பலநூற்றுக்கணக்கான போராளிகளை கொன்ற புலிகளுடனேயே மேற்படி TELO சிவாஜிலிங்கம் இணைந்திருக்கும் போது இவர் இப்படியான குற்றச்சாட்டை முன்வைப்பது என்ன நியாயமென? அரசியல் விமர்சகர்கள் அங்கலாய்க்கின்றனர். )




Thanks….WWW.ILAKKU.COM
ANI.cat-dog.gif

ShareThis

No comments:

Post a Comment