Pages

Thursday, 19 April 2012

விபத்தில் சிக்கியவர்கள் இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளர்கள் (இரண்டாம் இணைப்பு)



இன்று காலை ரம்பாவெல – மிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த சிரேஷ்ட அறிவிப்பாளர் நூரானியா ஹசன் உயிரிழந்ததோடு மேலும் அறுவர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன  தெரிவித்தார்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதன் ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று இரவு யாழ். நோக்கி பயணமாகியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பயணித்த வாகனம் இன்று காலை 4.30 மணியளவில் மிஹிந்தலை – ரம்பாவ பகுதியில் லொறியொன்றுடன் மோதியுள்ளது. இவ்விபத்தில் வானில் சென்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், ஸ்தலத்திலேயே சிரேஷ்ட ஒலிபரப்பாளர் நூரானியா ஹசன் மரணமடைந்துள்ளார்.
திரு., திருமதி யோகராஜன், ஜபீர், சந்திரகாந்தன், ஜெகன்மோகன் ஆகிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களுடன் விளம்பர பிரிவைச் சேர்ந்த சந்தன ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


(இரண்டாம் இணைப்பு)


No comments:

Post a Comment