Pages
▼
Thursday, 20 December 2012
தமிழர்களை இந்த அரசு சீண்டிப் பார்ப்பதை இனியும் அனுமதிக்க முடியாது! – செல்வம் அடைக்கலநாதன் வவுனியாவில் உரை!!
Posted by Administrator on Saturday, December 15, 2012 · Leave a Comment
இலங்கை அரசை ஆளுகின்றவர்கள் தொடர்ச்சியாக எமது இனத்தை நசுக்குகின்றவர்களாகவே காணப்படுகின்றனர். ஒருகாலத்தில் ‘தரப்படுத்தல்’ என்ற விதத்தின் அடிப்படையிலே மாணவர்களை நசுக்க நினைத்ததினால் புரட்சி வெடித்தது. இவ்வாறான நிலை காரணமாக
எங்களுடைய இனம் கிளர்ந்தெழுந்து தமது எழுச்சியையும் போராட்டத்தையும் சிறப்பாக பல தியாகங்களுக்கு மத்தியில் செய்து முடித்துள்ளது.இன்றைக்கு இந்த அரசு தமிழர்களுடைய சுய கௌரவத்தையும் சுயநிர்ணயத்தையும் தட்டிப்பார்க்கின்ற நிலைக்கு இறங்கியிருக்கின்றது. தமிழர்களை கிள்ளுக்கீரை என்று நினைக்கும் அளவிற்கும் அடிமைத்தனம் என்று நினைக்கும் தன்மையிலும் செயற்படுகின்றது. இதை நாம் உடைத்தெறியும் தன்மை கொண்டவர்களாக மாறவேண்டும்.இந்த அரசு செய்யும் அடாவடித்தனங்களுக்கு எதிராகவும் இராணுவம் செய்யும் அத்தனை கொடுமைகளுக்கும் தீர்வு காணப்படவேண்டும். எமது நிலத்தை அபகரிக்கின்ற எமது மதங்களை உடைத்தெறிகின்ற, எமது மாணவர்களை கைது செய்கின்ற தன்மைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்லும் வகையில் எமது செயற்பாடுகள் இருக்கவேண்டும்.இனியும் அரசு தமிழர்களை சீண்டிப்பார்க்கின்ற தன்மைக்கு அனுமதிக்க முடியாது. தமிழர்கள் சுயகௌரவத்துடனும் சுயநிர்ணயத்துடனும் வாழுகின்றனர் என்பதனை எமது ஜனநாயக போராட்டங்கள் மூலமாக உலக நாடுகளுக்கு காட்டுவதனூடாக நாம் சளைக்கமாட்டோம். எமது இனம் மீண்டு எழும் என்கின்ற செய்தி சென்றடைய வேண்டும் என்று தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்.
பாஸ்கரா
இந்த அரசு மிக மோசமான செயற்பாட்டை நிகழ்த்தி வருகின்றது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது அதுவும் தமது உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியவர்களை கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்பியுள்ளது. அவர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவதற்கு ஆயுதமா ஏந்தினார்கள்? எதற்காக அப்பாவி மாணவர்கள் மீது புலி சாயம் பூசப்படுகின்றது. எமது மாணவர்கள் கற்றது குற்றமா? கற்றதனால் முன்னேறியது குற்றமா? முன்னாள் போராளிகளுக்கும் புனர்வாழ்வு, கல்வி கற்கும் மாணவர்களுக்கும் புனர்வாழ்வு. என்ன சொல்கின்றது இந்த அரசு.இதேவேளை, எமக்குள் உள்ள பொது பிரச்சினைகளை சந்தியில் வைத்து பேச வேண்டிய தேவையில்லை. ஜனநாயக மக்கள் முன்னணியினராகிய நாம் இன்று வடக்கு கிழக்கில் இடம்பெறும் எமது மக்களுக்கான பிரச்சனைகளுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுக்கின்றோம் என்றால் அது ஓரணியில் நாம் நிற்பதனால் தான்.ஒவ்வொரு கட்சிக்கும் தனித்துவம் இருக்கும் அதனை இழக்கமுடியாது. எமது பிரச்சனைகளை மூடிய அறையில் இருந்து பேசி முடிவெடுப்போம். பொது இடத்தில் அவற்றை பேசி எம்மை நாமே தரம் குறைக்கும் செயற்பாடுகளை விடுத்து ஓரணியாக எமது போராட்டங்களை முன்னெடுப்போம் என்று தெரிவித்தார் ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா.
No comments:
Post a Comment