Pages

Thursday, 30 May 2013

புத்தர் சிலை வேண்டாம்; மட்டு.மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பரிப்பு !

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார் கிருஸ்ணபிள்ளை கோ.கருணாகரம் இரா.துரைரெட்னம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா பா.அரியநேத்திரன் சீ.யோகேஸ்வரன்  மா.நடராசா துரைராஜசிங்கம் உட்பட பொதுமக்கள் கிராம அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பொருமளவாளோர் கலந்து கொண்டனர். 



மட்டக்களப்பு மாநகரசபை வரவேற்பு பகுதிக்கு அருகில் புத்தர் சிலையினை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியும் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது.

ஊறணி பிரதேச பொதுமக்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர்.

மட்டு.பிள்ளையாரடியில் ஆரம்பமான ஊர்வலம் புத்தர் சிலை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு வரவேற்பு இடத்தை சென்றடைந்தது.

இந்த ஆப்பாட்ட பேரணியில் ஈடுபட்டோர் இந்துக்கள் வாழும் ஊரில் புத்தர் எதற்கு புத்தரின் பெயரால் இன மத சண்டைகளை உருவாக்காதே புத்த பகவானை ஆக்கிரமிப்பு சிலையாக மாற்றாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியும் புத்தர் சிலை வைப்பதற்கு எதிரான கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட மட்டக்களப்பு மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி பிரிகேடியர் சுகத்த திலகரட்ன சிலை நிறுவ மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

எனினும் ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

Saturday, 18 May 2013

மன்னாரில் 1500 சிங்கள குடும்பங்கள் குடியேற்றம் - செல்வம் MP

மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அரசாங்கம் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது 1500 சிங்கள குடும்பங்கள் அங்கு அழைத்து வரப்பட்டு குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்இ டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்  எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன் அரசாங்கம் சிங்கள குடியேற்றங்களை மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

சுமார் 5 ஆயிரம் குடும்பங்களை குடியமர்த்த நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்வுகளை சந்தித்த முசலி பிரதேசத்தில் உள்ள தமிழ் முஸ்ஸிம் மக்கள் இது வரை உரிய முறையில் மீள் குடியேற்றப்படவில்லை.

அவர்கள் காடுகளிலும் தற்காலிக கொட்டில்களிலும் தொடர்ந்தும் அகதி வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் முசலியில் சிங்கள மக்களை குடியமர்த்தும் முகமாக முதற்கட்டமாக 1500 குடும்பங்கள் பஸ்களில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் இங்கு தற்காலிக கொட்டில்களை அமைக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் மீள் குடியேற்றங்கள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரிவாக ஆராயவுள்ளது.

தமிழ் முஸ்ஸிம் மக்களின் பிரதி நிதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெகு விரைவில் அழைத்து இந்த சிங்கள குடியேற்றம் தொடர்பில் ஆராய்ந்து இக் குடியேற்றத்திற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted by on Saturday, May 18, 2013 · Leave a Comment 

அரசின் யுத்த வெற்றிவிழா தமிழ்மக்களுக்கு இரத்தக் கண்ணீரால் எழுதப்பட்ட துக்க தினம் – ஜனா

யுத்த வெற்றிவிழா இலங்கை அரசைப் பொறுத்தவரை கொண்டாட்ட நிகழ்வாக இருக்கும். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இரத்தக் கண்ணீரால் எழுத்தப்பட்ட ஒரு துக்க தினம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவிக்கிறார்.


யுத்த வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறுவது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு யுத்தமொன்றை உலக யுத்தமாக்கி வெற்றி கொண்டாடி மமதை கொண்ட உலகநாடுகளில் முதலாவதும் இறுதியுமான நாடு இலங்கையாகத்தான் இருக்கும்.

இந்த வெற்றிவிழா இலங்கை அரசசைப் பொறுத்தவரை கொண்டாட்ட நிகழ்வாக இருக்கும். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இரத்தக் கண்ணீரால் எழுதப்பட்ட ஒரு துக்க தினம். 

தமிழ் மக்களைப் பாதுகாக்க யுத்தம் நடத்திய ஸ்ரீலங்கா அரசு கொண்டாடும் யுத்த வெற்றியில், 

அவரால் மீட்கப்பட்ட எந்தத் தமிழ் மக்கள் பங்கு கொள்கிறார்கள் ?

அவ் வெற்றியால் எந்தத் தமிழ் மக்கள் பயனடைந்தார்கள் ? 

பயன்பட்டவர்கயும் பயன்படப்போகின்றவர்களும் கே.பியும். தயா மாஸ்ரரும் மட்டும் தான்.

நீண்ட காலப் போராட்டங்களின் பின் தனிநாடாக பரிணமித்த கிழக்குத் தீமோரோ தென் சூடானோ அந்நாட்டு மக்களுடள் இணைந்து தம் விடுதலை பெற்ற தினத்தை வெற்றி விழாவாக அல்லது வெற்றி மாதமாக கொண்டாடினால் அதற்கு அதற்கு ஒரு பெருமை இருக்கும்.

அதற்கு ஒரு அர்த்தமும் இருக்கும். ஆனால் இலங்கை அரசு கொண்டாடும் இந்த வெற்றி விழாவுக்கோ பெருமையும் இல்லை. அர்த்தமும் இல்லை.

மாறாக சிங்கள பேரினவாதத்தின் ஆதிக்க மனோபாவம் சிறுபான்மை இனங்கள் மீது தம் மேலாதிக்கத்தை திணிக்கும் அகம்பாவமும் மட்டுமே இவ் வெற்றி விழாவின் அர்த்தங்களாகும்.

இந்த யுத்த வெற்றி விழா தொடர்பாக கடந்த காலங்களில் சில அமைச்சரவை அமைச்சர்கள் கூட வ்வளவாக திருப்தியடையாத விதத்தில் தம்கருத்துக்களைக் கூட வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆனால் பொது ஜன ஐக்கிய மக்கள் முன்னணியின் அரசின் வெற்றிக்கான முதலீடு இந்த யுத்த வெற்றி மட்டும் தான். இந்த யுத்த வெற்றி மட்டும் தான் பேரினவாதிகளின் ஆதரவைத் தக்க வைக்கும் பலமான முதலீடு ஆகும்.

இந்த இலட்சணத்தில் நல்லிணக்கம்இ ஏற்படுத்த போகிறதாம் இவ் அரசாங்கம். 

அரசாங்கம் நினைப்பது போல நல்லிணக்கம் என்பது மேலாதிக்கத்தின் மூலம் பேரினவாத ஆக்கிரமிப்பு மூலம் சிறுபான்மையினரின் உணர்வுகளைச் சிதைப்பது மூலம் ஏற்பட்டுவிடாது. ஏற்படுத்தவும் முடியாது.

மாறாக விட்டுக் கொடுப்பு புரிந்துணர்வு சமத்துவம் என்பவற்றின் மூலமே ஏற்படுத்த முடியும். ஆனால் இலங்கை அரசாங்க நடைமுறையில் இத்தகைய செயற்பாடுகள் இல்லாத ஒன்றாகும்.

இல்லாத செயற்பாட்டின் மூலம் எப்படி இனங்களுக்கிடையேயான நல்லணக்கம் ஏற்பட முடியும் ? 

போர் வெற்றி பேரினவாதிகளைத் திருப்திப்படுத்தி பேரினவாதிகளின் வாக்கு வங்கிகளைத் தக்கவைக்கும் இந்த அரசு இந்த வருடம் மட்டுமல்ல இனித் தொடர்ந்து வரும் வருடங்களிலும் வெற்றி விழாவினைக் கொண்டாடிப் பேரினவாதிகளையும் யுத்த மேலாதிக்கத்தினையும் நினைவு படுத்துமேயொழிய இன நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் காணாத தூரத்துக்குத் தொலைக்கும் நடவடிக்கைகளாகவே அமையும்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை, 

இன நல்லிணக்கத்துக்கும் ஒருமைப்பாட்டுக்கும் 

தமிழ் மக்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நீட்டும் கரங்களை உதறித் தள்ளி பேரினவாதிகளின் ஆதிக்கக் குரலுக்குப் பின்னால் முகம் காட்டும் இந்த அரசிடமும் அரச பிரமுகர்களிடமும் இருந்து எந்த நல்லிணக்கத்தை நாம் எதிர்பார்ப்பது ?

அந்த அளவுக்கு நம் தமிழ்த் தேசியமும் தமிழ் மக்களும் கிள்ளுக்கீரையா ?

அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் தமிழ் தேசியக் கூடடமைப்பை தம் பிரதிநிதிகளாக தெரிவு செய்த தமிழ் மக்களும் பேரினவாதிகளின் பார்வையில் பகடைக்காய்களா? 

வெற்றி விழாவின் விளையு காலத்தின் கையில் என்பது மட்டும்தான் இன்று நிஜம்! இதற்கு மேல் எனக்கு ஒரு வார்த்தை இல்லை வெற்றிவிழா தொடர்பாக!

Posted by on Saturday, May 18, 2013 · Leave a Comment 

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் இம்மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம்:- சிவாஜிலிங்கம்

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன.

இதற்கான பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ரெலோவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளுக்கிடையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். கட்சிகளின் நடைமுறைகள் அமைப்பு விதிகள் தயாரிக்கப்பட்டு ஏனைய கட்சிகளிடமும் ஆலோசனைகள் கருத்துக்கள் பெறப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்படும்.

இலங்கை தமிழரசுக்கட்சி எங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வந்துள்ளமை நல்லதொரு விடயமாகும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் நியமிக்கப்படவுள்ள குழுவில் தமிழரசுக்கட்சியை சேர்ந்த எட்டுப்பேரும் அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்களும் ரெலோ அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருவரும் மற்றும் அக்கட்சியின் எம்.பி.க்களும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள்.

இதனைவிட எட்டு பேருக்கு மேலதிகமாக தாங்கள் இன்னும் சிலரை நியமிக்க வேண்டுமென்றும் அந்தவகையில் அம்பாறை திருகோணமலை வன்னி போன்ற மாவட்டங்களில் மேலும் சில பிரதிநிதிகளை நியமிக்க விரும்புவதாகவும் பெண் பிரதிநிதியொருவரையும் நியமிக்க வேண்டுமென்றும் தமிழரசுக்கட்சியின் தலைவர் சம்பந்தன் தெரிவித்த கருத்தை நாம் ஏகமனதாக ஏற்றுக்கொண்டோம்.

அதுமாத்திரமன்றி அமைக்கப்படும் குழுவில் 25 பிரதிநிதிகள் பரந்துபட்ட அளவில் ஏனைய கட்சிகள் உள்ளடங்களாக குறிப்பாக கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளும் தமது பிரதிநிதிகளை நியமிக்க வாய்ப்பளிக்கும் விதத்தில் பரந்துபட்ட பிரதிநிதித்துவத்தை நாம் ஏற்றுக்கொண்டோம் என்று தெரிவித்தார்.


Posted by on Saturday, May 18, 2013 · Leave a Comment 

Sunday, 12 May 2013

கூட்டமைப்பை பதிவுசெய்யும் முனைப்பில் முன்னேற்றம் இல்லை !


தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவுசெய்வது தொடர்பில் மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய ஜோசப் ராயப்பு தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
இந்தநிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவுசெய்யவேண்டும் என்று தாம் வலியுறுத்தவில்லை என்று குறிப்பிட்ட ஆயர், எனினும் வடக்கு மாகாணசபைத்தேர்தலில் ஐந்துக்கட்சிகளும் ஒன்றுமையுடன் செயற்படவேண்டும் என்று கோரியுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.




கூட்டமைப்பை பதிவுசெய்வது தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுக்கள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன், தமது கூட்டமைப்பு கட்சிகள் மத்தியில் பிளவுகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்பை பதிவுசெய்வது தொடர்பி;ல் கலந்துரையாடல்கள் தொடரும்; என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted by on Sunday, May 12, 2013 · Leave a Comment 

தலைவர் சிறிசபாரத்தினத்தின் 27ஆவது ஆண்டு நினைவாஞ்சலி ! சுவிஸ்

தமிழீழ விடுதலை இயக்க தலைவர் சிறிசபாரத்தினத்தின் 27ஆவது ஆண்டு நினைவாஞ்சலி நிகழ்ச்சி எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை காலை 10மணிக்கு Eusebiusho Sall, 2540  Granchen, swiss, என்னுமிடத்தில் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தமிழீழ விடுதலை இயக்க (ரெலோ) சுவிஸ் கிளை ஏற்பாடு செய்துள்ளது.


Tuesday, 7 May 2013

சிறி சபாரத்தினம் யார் ?

86 மே 6ம் தேதி, ஈழ விடுதலயை வைத்திருந்த அந்த இதயம் தோட்டக்களால் சுக்குநூறாக சிதறடிக்கபட்டது, ஒன்றல்ல இரண்டல்ல, புலிகள் நிராயுதாபாணியாக நின்ற அந்த போராளியின் உடலை 20க்கும் அதிகமான குண்டுகள் சல்லடையாக்கின, சுட்டது எதிர்த்த சிங்களவன் அல்ல , தன் ரத்தம் பகிர்ந்த சகோதரன். தவறே செய்யாத சபாவுக்கு இந்த தண்டனை, அதற்க்கு என்ன காரணம், எந்த தரப்பில் இருந்து சொல்லபட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.அன்று சரிந்து விழுந்தது சபாவின் சடலம் மட்டுமல்ல, ஈழம் என்கிற ஒரு தேசத்தின் நம்பிக்கை.

Photo: சிறி சபாரத்தினம் யார் ?

1986 மே 6ம் தேதி, ஈழ விடுதலயை வைத்திருந்த அந்த இதயம் தோட்டக்களால் சுக்குநூறாக சிதறடிக்கபட்டது, ஒன்றல்ல இரண்டல்ல, புலிகள்  நிராயுதாபாணியாக நின்ற அந்த போராளியின் உடலை 20க்கும் அதிகமான குண்டுகள் சல்லடையாக்கின, சுட்டது எதிர்த்த சிங்களவன் அல்ல , தன் ரத்தம் பகிர்ந்த சகோதரன். தவறே செய்யாத  சபாவுக்கு இந்த தண்டனை, அதற்க்கு என்ன காரணம், எந்த தரப்பில் இருந்து சொல்லபட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.அன்று சரிந்து விழுந்தது சபாவின் சடலம் மட்டுமல்ல, ஈழம் என்கிற ஒரு தேசத்தின் நம்பிக்கை.

நடராஜன் தங்கதுரை மற்றும் யோகசந்திரன்(குட்டிமணி) என்பவரால் உருவாக்கபட்ட ஒரு சிறு குழு தான் பின்னாளில் தமிழிழ விடுதலை இயக்கமாக(டெலொ) மாறியது.அப்பொழுது அவர்களுடன் களத்தில் தளபதியாக செயல்பட்டவர் சிறி சபாரத்தினம். இந்தியாவிற்க்கு தப்ப முயன்ற தலைவர்கள் இருவரும் இலங்கை ராணுவத்தால் கைது செய்யபட, இடைக்கால தலைவராக பொறுப்பேற்று இயகத்தை வழி நடத்தினார் சபா. குட்டிமணியும், தங்கதுரையும் சிறையில் கொடுராமக கொலை செய்யபட, டெலோவின் தலைவரானார் சிறி சபாரத்தினம்.


தலைவர் என்று ஆணையிடுபவரல்ல சபா, களத்தில் இறங்கி போராடுபவர். இன்றும் சபாவை அப்படி தான் ஈழ தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் நினைவு கூறுகின்றனர்.ஈழ விடுதலை இயக்கங்களும் அனைத்தும் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்க, இந்திராவும் போராளி இயக்கங்களுக்கு தாரளமாகவே உதவியளித்தார்.

டெலோ, இராஸ்,விடுதலை புலிகள் என பல இயக்கங்களாக சிதறிகிடந்தவற்றை ஒன்றாக இணைத்து ENLF ஆக உருவாக்கபட்டது.அனைத்து போராளிகளும் ஒன்றாக இணைந்து தனி ஈழத்திற்க்காக் போராடுவது என உறுதி செய்யபட்டது.

கலைஞர் டேலொவிர்க்கு தன் ஆதரவை தெரிவித்திருந்தார். சபா, கலைஞரின் அன்பிற்க்குரியவரானார். கலைஞர் திரைக்கதை எழுதிய ‘பாலைவன் ரோஜாக்கள்’ படத்தில் கதநாயகனின் பெயர் சபாரத்தினம்.



தனி ஈழத்தை குறிக்கோலாக கொண்டு மற்ற இயக்கங்கள் இந்தியாவின் உதவியுடன் செயல்பட்டுக்கொண்டிருந்தன, அவர்களுக்கு தேவை தனி ஈழம்.

இயக்கத்துனுள் கருத்து வேறுபாடுகள் முற்றின,எந்த இயக்கம் பெரியது என்ற மிக மோசமான ஃமாபியா அரசியல் ஈழ விடுதலை இயக்கத்தினுள் புகுந்தது. விடுதலை புலிகளால் பல  நபர்கள் கொலை செய்ய்பட்டனர், அந்த கொலைகள் மற்ற இயக்க்ங்கள் தான் செய்கின்றன என தமக்குள் சந்தேக பட தொடங்கினர்.

அந்த வழியில், புலிகள் தங்கள் சுயலாபத்திற்காக ‘துரோகி’ பட்டத்தை சபாவிர்க்கு கொடுத்தனர்.

‘துரோகி’ என்ற வார்த்தை வந்துவிட்டால் விடுதலை புலிகள் அதற்கு ஒரே தண்டனையாக வைத்திருத்து மரணத்தை.

சபாவிற்க்கு டார்கெட் வைக்கபட்டது. அப்பொழுது சபாவிற்க்கு யாரும் அடைக்கலம் தர கூடதெனவும், சபாவை உடனடியாக் பிடித்து கொடுக்குமாறும் மக்களுக்கு விடுதலை புலிகள் ஆணையிட்டனர். சபா என்ன செய்வதறியாமல் மறைந்து வாழ்ந்து வந்தார்.

தமிழகத்தில் அப்பொழுது நடைபெற்ற டெசோ மாநாட்டின் போது, சபாவின் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்த கலைஞர், விடுதலை புலிகள் இயக்கத்திடம் தன் சார்பில் சபாவை ஒன்றும் செய்ய வேண்டாம் என கோரினார், புலிகளும் அதற்க்கு செவி சாய்ப்பது போல் நடித்தனர். அவர்களின் நோக்கம் டெசொவை கெடுப்பதாகவே இருந்தது. ஈழத்துக்காக யார் போராடினாலும் பிரபாகரன் அதை கெடுக்கும் மனநிலையிலும் அவர்களை கொள்ளும் மனநிலையிலும் எப்பொழுதும் இருந்தார் என்பதற்கு இந்த சம்பவம் ஒன்றே சாட்சி.  

கஞ்சா காடு ஒன்றில் சமாதானத்திர்க்கு வந்த சபாரத்தினத்தை பிரபாகரனால் அனுப்பிவைக்கப்பட்ட புலிகள் இயக்கத்தை சேர்ந்த கிட்டு, மண்டியிட்ட சபாரத்தினம் எவ்வளவும் கெஞ்சியும் அவருக்கு மரணத்தை பரிசாகளித்தார். போராளி என ஆனபோதே சபாவின் மரணம் உறுதியானது தான் என்றாலும்  தன் சகோதரனால் கொல்லபட்டார்.
 
சபாரத்தினம் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் என்றோ ஈழம் கிடைத்திருக்கும் . சபா இல்லாததால் ஈழம் கனவாகவே போனது ஈழ ஈழ மக்களுக்கு. .நடராஜன் தங்கதுரை மற்றும் யோகசந்திரன்(குட்டிமணி) என்பவரால் உருவாக்கபட்ட ஒரு சிறு குழு தான் பின்னாளில் தமிழிழ விடுதலை இயக்கமாக(டெலொ) மாறியது.அப்பொழுது அவர்களுடன் களத்தில் தளபதியாக செயல்பட்டவர் சிறி சபாரத்தினம். இந்தியாவிற்க்கு தப்ப முயன்ற தலைவர்கள் இருவரும் இலங்கை ராணுவத்தால் கைது செய்யபட, இடைக்கால தலைவராக பொறுப்பேற்று இயகத்தை வழி நடத்தினார் சபா. குட்டிமணியும், தங்கதுரையும் சிறையில் கொடுராமக கொலை செய்யபட, டெலோவின் தலைவரானார் சிறி சபாரத்தினம்.


தலைவர் என்று ஆணையிடுபவரல்ல சபா, களத்தில் இறங்கி போராடுபவர். இன்றும் சபாவை அப்படி தான் ஈழ தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் நினைவு கூறுகின்றனர்.ஈழ விடுதலை இயக்கங்களும் அனைத்தும் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்க, இந்திராவும் போராளி இயக்கங்களுக்கு தாரளமாகவே உதவியளித்தார்.

டெலோ, இராஸ்,விடுதலை புலிகள் என பல இயக்கங்களாக சிதறிகிடந்தவற்றை ஒன்றாக இணைத்து ENLF ஆக உருவாக்கபட்டது.அனைத்து போராளிகளும் ஒன்றாக இணைந்து தனி ஈழத்திற்க்காக் போராடுவது என உறுதி செய்யபட்டது.

கலைஞர் டேலொவிர்க்கு தன் ஆதரவை தெரிவித்திருந்தார். சபா, கலைஞரின் அன்பிற்க்குரியவரானார். கலைஞர் திரைக்கதை எழுதிய ‘பாலைவன் ரோஜாக்கள்’ படத்தில் கதநாயகனின் பெயர் சபாரத்தினம்.



தனி ஈழத்தை குறிக்கோலாக கொண்டு மற்ற இயக்கங்கள் இந்தியாவின் உதவியுடன் செயல்பட்டுக்கொண்டிருந்தன, அவர்களுக்கு தேவை தனி ஈழம்.

இயக்கத்துனுள் கருத்து வேறுபாடுகள் முற்றின,எந்த இயக்கம் பெரியது என்ற மிக மோசமான ஃமாபியா அரசியல் ஈழ விடுதலை இயக்கத்தினுள் புகுந்தது. விடுதலை புலிகளால் பல நபர்கள் கொலை செய்ய்பட்டனர், அந்த கொலைகள் மற்ற இயக்க்ங்கள் தான் செய்கின்றன என தமக்குள் சந்தேக பட தொடங்கினர்.

அந்த வழியில், புலிகள் தங்கள் சுயலாபத்திற்காக ‘துரோகி’ பட்டத்தை சபாவிர்க்கு கொடுத்தனர்.

‘துரோகி’ என்ற வார்த்தை வந்துவிட்டால் விடுதலை புலிகள் அதற்கு ஒரே தண்டனையாக வைத்திருத்து மரணத்தை.

சபாவிற்க்கு டார்கெட் வைக்கபட்டது. அப்பொழுது சபாவிற்க்கு யாரும் அடைக்கலம் தர கூடதெனவும், சபாவை உடனடியாக் பிடித்து கொடுக்குமாறும் மக்களுக்கு விடுதலை புலிகள் ஆணையிட்டனர். சபா என்ன செய்வதறியாமல் மறைந்து வாழ்ந்து வந்தார்.

தமிழகத்தில் அப்பொழுது நடைபெற்ற டெசோ மாநாட்டின் போது, சபாவின் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்த கலைஞர், விடுதலை புலிகள் இயக்கத்திடம் தன் சார்பில் சபாவை ஒன்றும் செய்ய வேண்டாம் என கோரினார், புலிகளும் அதற்க்கு செவி சாய்ப்பது போல் நடித்தனர். அவர்களின் நோக்கம் டெசொவை கெடுப்பதாகவே இருந்தது. ஈழத்துக்காக யார் போராடினாலும் பிரபாகரன் அதை கெடுக்கும் மனநிலையிலும் அவர்களை கொள்ளும் மனநிலையிலும் எப்பொழுதும் இருந்தார் என்பதற்கு இந்த சம்பவம் ஒன்றே சாட்சி.

கஞ்சா காடு ஒன்றில் சமாதானத்திர்க்கு வந்த சபாரத்தினத்தை பிரபாகரனால் அனுப்பிவைக்கப்பட்ட புலிகள் இயக்கத்தை சேர்ந்த கிட்டு, மண்டியிட்ட சபாரத்தினம் எவ்வளவும் கெஞ்சியும் அவருக்கு மரணத்தை பரிசாகளித்தார். போராளி என ஆனபோதே சபாவின் மரணம் உறுதியானது தான் என்றாலும் தன் சகோதரனால் கொல்லபட்டார்.

சபாரத்தினம் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் என்றோ ஈழம் கிடைத்திருக்கும் . சபா இல்லாததால் ஈழம் கனவாகவே போனது ஈழ ஈழ மக்களுக்கு. .

புலம்பெயர் தமிழர்களின் முன்னெடுப்பு உற்சாகமளிக்கின்றது: தமிழீழ சுதந்திர சாசனம் குறித்து செல்வம் அடைக்கலநாதன் கருத்துரை !

இலங்கையில் தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாகியிருப்பதோடு பல அழுத்தங்களை சந்தித்து வரும் நிலையில் தாயகத் தமிழர்களின் குரலாக புலம்பெயர் மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் உற்சாகமளிப்பதாக .தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவரினதும் பங்கெடுப்புடன் உருவாகி வரும் தமிழீழ சுதந்திர சாசனம் குறித்து கருத்துரைக்கும் போதே இக்கூற்றினை அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலையினை நோக்கிய செயற்பாட்டை மிகத்திறமையாக புலம்பெயர் உறவுகள் முழுமூச்சாக செய்து கொண்டிருக்கின்றார்கள் எனத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் சிறிலங்கா அரசு அச்சப்படுகின்ற ஓர் சக்தியாக புலம்பெயர் தமிழர்கள் உள்ளனர் என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவேந்தும் தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18ம் நாளன்று தமிழீழ சுதந்திர சுதந்திர சாசனம் முரசறையப்பட இருக்கின்ற நிலையில் இக்கருத்து வெளிவந்துள்ளது.

சுயர்நிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆளுகின்ற வகையிலான அரசியல் அபிலாசையினை வென்றடைவதற்கான வழிமுறையாக புலம்பெயர் வாழ் தமிழர் சக்தியே அழுத்தங்களை சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ள செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தமிழகம் – மலேசியா என உலகத் தமிழர்களின் சக்திகள் ஒன்றிணையும் போது விடுதலையினை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதென தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுயநிர்ணய கோட்பாட்டு அடிப்படையில் உரிமையினை நிலைநாட்டுவதற்கான புலம்பெயர் தமிழ் மக்களின் முயற்சிக்கு பாராட்டுதல்களை தெரிவிப்பதோடு இம்முன்னெடுப்புகள் வெற்றிபெற தனது வாழ்த்துகளையும் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கைத்தீவில் தமிழீழம் என்ற சொல்லினையே வெளிப்டையாக சொல்லவோ அல்லது எழுதவோ முடியதாக சிங்கள பேரினவாக அரசின் இறுக்கமான நிலைக்குள் நின்று கொண்டு தமிழீழ சுதந்திர சாசனம் குறித்து இக்கருத்து வெளிவந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


Posted by on Sunday, May 5, 2013 · Leave a Comment 

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் சிறீ சபாரட்னம் 27வது ஆண்டு நினைவு தினம் !


தமிழ் மக்களின் விடிவுக்காகவும் அரசியல் உரிமைகளுக் காகவும் அயராது உழைத்தவரும் சகோதரக் கொலையில் பலியானவருமான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரட்னம் அவர்களின் 27வது ஆண்டு நினைவு தினம் 2013, மே 6ம் திகதி.










Posted by on Sunday, May 5, 2013 · Leave a Comment 

Friday, 3 May 2013

மன்னாரில் எழுச்சி கொண்டது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மே தினக்கூட்டம்

தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாபெரும் மேதினக்கூட்டம் இன்று 01 ஆம் திகதி காலை 10 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.


குறித்த கூட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான 


திரு. செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவர் வி.எஸ்.சிவகரன், மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகர், சர்வமதத்தலைவர்கள், விவசாய, மீன்பிடி, வர்த்தக சங்கங்களின் பிரதி நிதிகள், பொது மக்கள் என பல நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது தொழிலாளர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் தொடர்பாகவும் தற்போதைய அரசியல் நிலவரம், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பதிவு தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் அரசியல் பிரமுகர்களினால் உரையாற்றப்பட்டது.

மதியம் 12.30 மணிவரை குறித்த மே தின கூட்டம் இடம் பெற்றது.


Posted by on Thursday, May 2, 2013 · Leave a Comment 

மே தினம் உழைப்பாளர் உரிமைகளை வெண்றெடுக்க அனைவரும் அணி திரளுங்கள்-வினோ எம்.பி

தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள மாபெரும் மேதினக்கூட்டம் நாளை 01 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் டெலோ இயக்கத்தின்  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

உழைப்பாளர் உரிமைகளை வென்றிடும் தினமான இந்த மே தினம் எமது மக்கள் தமக்கான அரசியல் சுதந்திரத்தையும், தங்களை தாங்களே ஆளும் அரசியல் உரிமையையும் வென்றெடுக்கும் உன்னத தினத்திலேயே உழைப்பாளர் எழுச்சி நாளாக முழுமை பெறும்.

இந்த வகையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மன்னாரில் இம்முறை ஏற்பாடு செய்துள்ள மே தினக்கூட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள், விவசாயிகள் உட்பட சகச தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு குரல் கொடுக்க முன்வருமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.


Posted by on Wednesday, May 1, 2013 · Leave a Comment 

மன்னார்,முல்லைத்தீவு மீனவர்களுக்காண எரிபொருள் மாணிய முத்திரையினை குறைப்புச் செய்யாது வழங்க கோரிக்கை-செல்வம் எம்.பி

மீனவர்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் மானியத்தில் ஆட்குறைப்புச்செய்யப்பட்டுள்ளமையினால் மீனவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துவருகின்ற நிலையில் எரிபொருள் மானியங்களில் எவ்வித குறைப்பும் செய்யாது மீனவர்களுக்கு தொடர்ந்தும் வழங்குமாறு ,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கடற்தொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றைஅனுப்பி வைத்துள்ளார்.

 
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

எரிபொருள் விலையேற்றத்தினால் மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வந்த நிலையில் மீனவர்களின் நலன் கருதி கடல் தொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சு மீனவர்களுக்கான எரிபொருள் மானியத்தை வழங்கிவந்தது.

இந்நிலையில் தற்போது மன்னார் மற்றும் முல்லைத்தீவு மீனவர்களுக்குவழங்கப்பட்டு வரும் எரிபொருள் மானிய முத்திரைகளில் ஆட்குறைப்புச்செய்யப்பட்ட நிலையில் பல மீனவர்களுக்கு குறித்த எரிபொருள் மானிய முத்திரை வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், 
  அந்த மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவருகின்றனர். ஆனால் மன்னார் மாவட்ட கடல் தொழில் பணிமனையின் அதிகாரிகள் குறித்த மானியக் குறைப்பு தொடர்பாக எவ்வித அறிவித்தல்களையும்உரியமுறையில் வழங்கவில்லை.

எனவே கடல் தொழில் அமைச்சர் என்ற வகையில் பாதிக்கப்பட்ட மன்னார் மாற்றும்முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு எவ்வித குறைப்பும்இன்றி அணைத்து மீனவர்களுக்கும் குறித்த எரிபொருள் மாணிய முத்திரையினை வழங்க நடவடிக்கையினை உடன் மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன்கேட்டுக்கொள்ளுவதாக’ அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted by on Friday, May 3, 2013 · Leave a Comment 

எமது மாணவர்கள் கல்வியிலும், கலாச்சாரத்திலும் பின்தங்கி செல்லும் பரிதாப நிலைமை ஏற்பட்டுள்ளது – கிழக்கு மாகாண சபை உறுப்பினர்

மேற்கத்தேய கலாச்சாரம் மற்றும் விளையாட்டு போன்றவற்றுக்கு அடிமையாகி எமது மாணவர்கள் கல்வியிலும், கலாச்சாரத்திலும் பின்தங்கி செல்லும் பரிதாப நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலைமையை மாற்றுவதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்க வேண்டும் என டெலோ இயக்கத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். 

மட்டக்களப்பு முனைத்தீவு மேன்பவர் விளையாட்டுக் கழகத்தின் 23வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதுவருடத்துக்கான கலாசார விளையாட்டு நிகழ்வும், சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் கழகத்தின் தலைவர் ந.துஸ்யனதன் தலைமையில் முனைத்தீவு சக்தி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
முனைத்தீவு மேன்பவர் கழகமானது தமிழ் கலாசாரத்தை பின்பற்றுவது போன்று, எமது பிரதேச ஏனைய விளையாட்டுக் கழகங்களும் எமது தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் விளையாட்டுக்களை பின்பற்ற வேண்டும். 


 எமது பாரம்பரிய கலாச்சாரங்களை பின்பற்றாமையினால் எமது மாவட்டத்தில் எதிர்பராத அசம்பாவிதங்கள் இடம்பெறுகின்றது. அண்மையில் நடந்த சம்பவமானது எமது தமிழ் இனத்திற்கு ஒரு அவமானமாகும். இதுபோன்ற செயற்பாடுகள் மேலும் எமது மாவட்டத்தில் இடம்பெறாது இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பிரதேச மக்கள் என்றும் தமிழ் தேசியத்துடன் இருப்பவர்கள். அவர்கள் கடந்த காலத்தில் பல இன்னல்களை எதிர்நோக்குயிருந்தனர். இதனை நான் இங்கு அறிவேன். இப்பிரதேசத்திற்கு என்னாலான பல உதவிகளை தங்களுக்கு வழங்குவேன் என்றார். 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, மாகாண சபை உறுப்பினர்களான கி.துரைராசசிங்கம், மா.நடராஜா உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Posted by on Friday, May 3, 2013 · Leave a Comment