தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவுசெய்வது தொடர்பில் மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய ஜோசப் ராயப்பு தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
இந்தநிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவுசெய்யவேண்டும் என்று தாம்
வலியுறுத்தவில்லை என்று குறிப்பிட்ட ஆயர், எனினும் வடக்கு
மாகாணசபைத்தேர்தலில் ஐந்துக்கட்சிகளும் ஒன்றுமையுடன் செயற்படவேண்டும் என்று
கோரியுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்
தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பை பதிவுசெய்வது தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுக்கள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த கூட்டமைப்பின்
தலைவர் ஆர் சம்பந்தன், தமது கூட்டமைப்பு கட்சிகள் மத்தியில் பிளவுகள் இல்லை
என்று குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்பை பதிவுசெய்வது தொடர்பி;ல் கலந்துரையாடல்கள் தொடரும்; என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Posted by TELOMedia on Sunday, May 12, 2013 · Leave a Comment
No comments:
Post a Comment