ரெலோ அமைப்பின் மாநாட்டில் முக்கியமான ஆறு தீர்மானங்கள்
வவுனியாவில் நடைபெற்ற ரெலோ அமைப்பின் தேசிய மாநாட்டின் போது முக்கிய ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
வவுனியாவில் நடைபெற்ற ரெலோ அமைப்பின் தேசிய மாநாட்டின் போது முக்கிய ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மு.ப 10 மணியளவில் வவுனியா முத்தையா மண்டபத்தில் ரெலோ அமைப்பின் எட்டாவது தேசிய மாநாடு நடைபெற்றது.
இதன்போது இந்த ஆறு தீர் மானங்களும் நிறைவேற்றப் பட்டன. இந்தத்
தீர்மானங்களில் இனப்பிரச்சினைக்கான தீர்வு, சிங்களக் குடியேற்றங்கள், இடம்
பெயர்ந்த மக்களின் அவலங்கள், அரசியல் கைதிகளின் அவல நிலை,
இனப்பிரச்சினைக்கு மீண்டும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைக்கும் அரசின்
திட்டம், காணாமற் போனவர்களின் பட்டியலை வெளியிடுதல் போன்ற விடயங்கள்
அடங்கியுள்ளன.
இந்த எட்டாவது தேசிய மாநாட்டில் 11 பேரைக் கொண்ட தலைமைக் குழுவும், 21 பேரைக் கொண்ட மத்திய குழுவும் அமைக்கப்பட்டன.
ரெலோ கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,
அரசியல் பிரிவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும்
தெரிவு செய்யப்பட்டனர்.
ரெலோ அமைப்பை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைந்து கொண்டமை
இந்த எட்டாவது தேசிய மாநாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளதாக மாநாட்டில்
உரையாற்றிய ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்
குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment