Pages

Wednesday, 23 January 2013

த.தே.கூ வழக்கு தாக்கல் !!

இராணுவத்தினரால் குடும்பப் பதிவு, புகைப்படம் எடுப்பதற்கு எதிராக த.தே.கூ வழக்கு தாக்கல்

மன்னார் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் மீண்டும் இராணுவத்தினரால் குடும்பப் பதிவுகள் மற்றும் புகைப்படம் எடுப்பது தொடர்பாக அக்கிராம மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து குறித்த குடும்பப் பதிவுகளுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தை உடன் நாடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்தில் கட்டுக்காரன் குடியிருப்பு, பருத்திப்பண்னை, கீலியன் குடியிருப்பு, பேசாலை ஆகிய கிராமங்களில் தற்போது இராணுவத்தினர் குடும்ப பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த கிராமங்களுக்குச் செல்லும் இராணுவத்தினர் குடும்ப விபரங்களை திரட்டுவதோடு அந்த மக்களின் வீடுகளை தனியாகவும், குடும்ப உறுப்பினர்களை குழுவாகவும் புகைப்படம் எடுக்கின்றனர்.எதற்காக இந்த புகைப்படம் எடுக்கப்படுகின்றது என்று தெரியாத நிலையில் அந்த மக்கள் அச்சத்தின் காரணமாக எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.எனவே குறித்த இராணுவத்தினரால் குடும்பப்பதிவு மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாடவுள்ளது.ஏற்கனவே இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட குடும்பப்பதிவுகளுக்கு எதிராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.இதன் போது சட்டமா அதிபரின் திணைக்களத்தினால் குறித்த இராணுவப் பதிவுகள் உடன் நிறுத்தப்பட்டு இனி குறித்த பதிவுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த வழக்கு வாபஸ் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்கா செல்கிறார்கள் !

வரும் ஞாயிறன்று தென்னாபிரிக்கா செல்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு வரும் 27ம் நாள் தென்னாபிரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ள, இந்தக் குழுவில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இடம்பெறவுள்ளனர். இனவிவகாரங்கள், நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான தென்னாபிரிக்காவின் அனுபவங்களை கற்றுக்கொள்ளும் நோக்கிலேயே, இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். “ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழாவுக்குச் சென்றிருந்த போது, தென்னாபிரிக்க அரசியல் கட்சிகள் விடுத்திருந்த அழைப்பின் பேரிலேயே இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது. நிறவெறிக்கு எதிரான ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் பல ஆண்டுகாலப் போராட்டத்தின் முடிவில், அங்கு, மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்க முயற்சிகள் முழுமையான வெற்றியைக் கொடுத்தது. ஆனால், விடுதலைப் புலிகளை 2009இல் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போதிலும், சிறிலங்கா அரசாங்கம் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாணவோ, மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்தவோ தவறிவிட்டது.” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Tuesday, 15 January 2013

தைத்திருநாள் வழிவகுக்கும் !!

அரசியல் தீர்வை தமிழ் மக்கள் பெற தைத்திருநாள் வழிவகுக்கும்! – செல்வம் அடைக்கலநாதன் நம்பிக்கை!!

தமிழ் மக்கள் நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளவும், சுதந்திரக் காற்றை சுவாசிக்கவும் தைத்திருநாள் வழிவகுக்கும் என எதிர்பார்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் நாம் சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து எமக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளில்  களம் இறங்கியுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தவை வருமாறு:
‘கடந்த 60 வருட காலமாக தமிழ் மக்கள் அஹிம்சை, ஆயுத வழிகளில் தமது உரிமைகளைப் பெற போராடினார்கள். ஆனால், இதனை மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிறிலங்கா அரசுகள் உதாசீனம் செய்துவிட்டன. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு எதனையும் சிறிலங்கா அரசு இதுவரை  முன்வைக்கவில்லை. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களையும் கடந்த காலங்களில் இந்த அரசு குழப்பியடித்துள்ளது. எனவே, இந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசை நம்ப நாம் தயாரில்லை.தற்போது நாட்டில் நீதி, நேர்மை, உண்மை இல்லை, இங்கு காட்டாட்சிதான் நடக்கின்றது. பிரதம நீதியரசரையே தூக்கியெறியும் இந்த அரசா தமிழருக்கு தீர்வைப் தரப்போகின்றது?
எனவே, இந்த வருடத்தில் நாம் சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து எமக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளோம். தமிழ் மக்கள் நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளவும், சுதந்திரக் காற்றை சுவாசிக்கவும் இந்தத் தைத்திருநாள் வழிவகுக்குமென நம்புகின்றோம். எனவே, தைப்பொங்கல் தமிழ் மக்களுக்கு  புதிய வாழ்வைக் கட்டியெழுப்ப வழிவகுக்கும் என்றும், உழவர் பெருமையினை உலகிற்கு உணர்த்தும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் தமிழ் மக்கள் அனைவரினதும் வாழ்விலும் நல்ல வாழ்வினைத் தோற்றுவிக்க வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கின்றோம். போரின் துயரங்களால் பெரும் அவலங்களை எதிர்கொண்டுள்ள எமது மக்கள் அகதி வாழ்வு இல்லாது நிம்மதியுடன் வாழ தைத்திருநாள் வழிவகுக்க வேண்டும். இடம்பெயர்ந்துள்ள எமது மக்கள் சொந்த வாழ்விடங்களில் சுதந்திரமாக வாழும் இயல்பு நிலையை தமிழர் திருநாளாம் தைத்திருநாள் தோற்றுவிக்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.

தமிழ் உறவுகள் எம்மை மறந்துவிடவில்லை !!

மட்டக்களப்பு மக்களுக்கு சுவிஸ் தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் நிவாரணம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. செங்கலடி ஆண்டான்குளம், ஐயன்கேணி மற்றும் கொக்குவில், புன்னைச்சோலை ஆகிய கிராமங்களில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு அரிசி, சீனி, பருப்பு, சோயா இறைச்சி, நெத்தலிக் கருவாடு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பிரமுகரும், கிழக்கு மாகாண சபை தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் உறுப்பினருமான இந்திரகுமார் பிரசன்னா இந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் கையளித்தார்.புலம்பெயர்ந்து சென்றாலும் தமிழ் உறவுகள் எம்மை மறந்துவிடவில்லை என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாடும்போது செய்யப்படும் இத்தகைய உதவிகள் காலம் கடந்தும் பேசப்படும். இந்த உறவு தொடர்ந்தும் நிலைக்க வேண்டும். செய்த உதவி சிறியதாக இருந்த போதிலும் உதவி செய்ய வேண்டும் என முன்வந்தவர்களின் மனம் விசாலமானது. எனவே அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றோம் என நிவாரணப் பொருட்களைக் கையளித்துப் பேசியபோது பிரசன்னா குறிப்பிட்டார்.

Saturday, 12 January 2013

செல்வம் எம்.பி நேரில் சென்று சந்திப்பு !

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் மடுக்கரை கிராம மக்களை செல்வம் எம்.பி நேரில் சென்று சந்திப்பு

[ ஞாயிற்றுக்கிழமை, 06 சனவரி 2013, 02:36.07 AM GMT ]
Photo: வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் மடுக்கரை கிராம மக்களை செல்வம் எம்.பி நேரில் சென்று சந்திப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 06 சனவரி 2013, 02:36.07 AM GMT ]

மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மடுக்கரை பகுதி மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

வெள்ளப் பெருக்கின் காரணமாக மடுக்கரை கிராமம் கடுமையாக பாதிப்படைந்திருந்த நிலையில் குறித்த கிராமங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்காண குடும்பங்கள் இடம் பெயர்ந்து மடுக்கரை ம.வி பாடசாலையில் தங்கி இருந்தனர்.

மடுக்கரை, பள்ளிமோட்டை, 75 வீட்டுத்திட்டம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மடுக்கரை ம.வி பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்களில் அதிகளவானவர்கள் மீண்டும் தமது வீடுகளுக்கும், உறவினர்களுடைய வீடுகளுக்கும் திரும்பிச் சென்றுள்ளனர்.

எனினும் சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் வவரை தமது வீடுகள் தற்போது வரை வெள்ள நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுவதாகவும், தாம் தொடர்ந்தும் குறித்த பாடசாலையில் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த பாடசாலையில் உள்ள மக்களை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று மாலை நேரில் சென்று சந்தித்தார். இதன் போது மடுக்கரை பாடசாலையில் தங்கியுள்ள குறித்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் சில கோரிக்கைகளை முன் வைத்தனர்.

தாங்கள் மீண்டும் வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள போது அதிகாரிகள் எம்மை உடன் பாடாசாலையை விட்டு வெளியேருமாறு பணித்துள்ளனர்.

தற்போது இங்கு அடிப்படை வசதிகள் இன்றி உள்ளோம். எங்களில் பலருக்கு தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. எனவே எங்களை தொடர்ந்தும் சில தினங்களுக்கு பாடசாலையிலே தங்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இப்பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நானாட்டான் பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலகரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இந்த நிலையில் இப்பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நானாட்டான் பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலகரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். தாங்கள் மீண்டும் வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள போது அதிகாரிகள் எம்மை உடன் பாடாசாலையை விட்டு வெளியேருமாறு பணித்துள்ளனர்.

தற்போது இங்கு அடிப்படை வசதிகள் இன்றி உள்ளோம். எங்களில் பலருக்கு தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. எனவே எங்களை தொடர்ந்தும் சில தினங்களுக்கு பாடசாலையிலே தங்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இப்பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நானாட்டான் பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலகரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

Friday, 11 January 2013

தக்க பாடம் புகட்ட வேண்டும்- ஜனா

எம் இனத்தை அழித்த பேரினவாத சக்திகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்- ஜனா  

Published on August 7, 2012-4:31 pm 
கடந்த கால அரசியல் வரலாற்று நிகழ்வுகளிலிருந்து கற்றுக்கொண்டு நிகழ்கால யதார்த்தத்திற்கேற்ப தந்திரோபாயங்களை வகுத்துக்கொண்டு எதிர்கால இலட்சியத்தினை அடைவதற்கு நம் தமிழர்களை வழி நடாத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழி சமைத்துள்ளது என தெரிவித்துள்ள கிழக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா), பேரினவாதமோ கடந்த காலத்தின் நிகழ்வுகளை கணக்கில் எடுக்காது நிகழ்கால யதார்த்தத்தினையும் புரிந்துகொள்ளாது ஒட்டுமொத்த எம் தமிழ்ச் சமூகத்தையும் படுகுழியில் தள்ள முனைகின்றது எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,செட்டிபாளையத்தில் கண்ணகியம்மன் ஆலய முன்றிலில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இலங்கை ஓரின, ஒருமொழி பேசும் நாடாக என்றும் இருந்ததில்லை. வரலாற்று காலம் தொடக்கம் பன்மைத்துவ நாடாகவே இருந்துவந்துள்ளது. இந்த யதார்த்தத்தை புறக்கணிக்க புறப்பட்டவர்களே இன்று மகிந்த அரசின் பங்காளிகளாக உள்ளனர். வாயைத் திறந்தாலே இனவாத வாந்தியெடுத்து வரலாற்றை திரிக்கும் எல்லாவெல மேதானந்த தேரர் இனவாதமே இரத்தத்தில் ஊறிய அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வரலாறே தெரியாது. வாயில் வந்ததை உளறும் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் இன்று ஒருங்கிணைந்து இலங்கைக்கு மீண்டும் ஒரு புது மகாவம்சத்தை படைக்க முனைகின்றார்கள். இவர்களது புதிய கண்டுபிடிப்பு தான் இலங்கையின் ஆதிக்குடிகளும் ஆதிமதமும் சிங்களவர்களும் பௌத்தமும் என்பது.
இவர்களைத் தன் ஆட்சிக் கட்டிலிலும் தன் இடது புறத்தில் இதயமாகவும் வைத்துக் கொண்டு இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு மூலம் தீர்வு காணப் புறப்பட்டுள்ளார் நம் மகிந்த. இதை நாங்களும் நம்ப வேண்டுமாம். சர்வதேச சமூகமும் நம்ப வேண்டுமாம். மணலைக் கயிறாக்குவதில் வல்லவர் மகிந்த. ஆனால் தொடர்ச்சியாக தமிழ்ச் சமூகத்தின் கண்களிலும் சர்வதேச சமூகத்தின் கண்களிலும் மண்ணைத் தூவ முடியாது என்பதை வருகின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மகிந்த அரசுக்கு மரண அடி கொடுத்து புரிய வைக்கும்.
இனவாதமும் நாட்டுப்பற்றும் வேண்டுமானால் தென் பகுதியில் விலை போகும். ஆனால் கிழக்கில் அது விலைபோகும் பண்டமல்ல விற்பனையாகும் சரக்குமல்ல என்பதை தேர்தல் முடிவு உணர்த்தும்.  தேசப்பற்று நாட்டுப்பற்று என்று நாக்கு வழிக்கும் அரசுத் தலைவருக்கும் அவரது அடிவருடிகளுக்கும் ஒன்று மட்டும் கூறுகின்றேன். உண்மையான இலங்கை வரலாற்றை சற்றுப் புரட்டிப் பாருங்கள். வரலாறு உண்மையினை எடுத்துரைக்கும். கண்டி அரசு அந்நியரின் கையில் எனக் கட்டிக்காத்து நாட்டுப் பற்றை வெளிக்காட்டியவன் நாயக்க மன்னன். ஒரு தமிழன் அதை அந்நியரிடம் அதுவும் ஆங்கிலேயர் கைப்பற்ற காட்டிக் கொடுத்தவர்கள் சிங்கள பிரதானிகள்.
சுதந்திரம் பெற்ற காலம் முதல் ஏன் அதற்கு முன்பிருந்து என்று கூடக் கூறலாம். ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக நாம் நடத்திய சுதந்திரப் போராட்டத்தில் சிங்களவருக்கும் மேலாக தேசப் பற்றினை வெளிக் காட்டி ஐக்கிய இலங்கைக்கு ஆதார அடித்தளம் இட்டவர்களும் எம் தமிழர்களே. இவை யாவும் வரலாற்று உண்மையாகும்.
அன்று ஐக்கிய இலங்கையை தமிழர்கள் வலியுறுத்தியபோது டொனமூர் காலத்தில் இலங்கையர்களுக்குப் பொருத்தமான ஆட்சி முறை சமஸ்டியே என்று முதன் முதலில் இலங்கை ஆட்சி முறைக்கு சமஸ்டி என்ற எண்ணக் கருவை எடுத்துக் கூறியவர் ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தின் பிதாமகரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்களே. இதுவும் இலங்கை அரசியல் வரலாற்றின் ஒரு உண்மையாகும். கடந்த கால உண்மை வரலாறுகளை பேரினவாதிகள் அறிவதுமில்லை அறிவதில் ஆர்வம் கொள்வதுமில்லை. அறிந்துகொண்டாலும் கூட அதிலுள்ள உண்மையை புரிந்துகொள்வதுமில்லை.
 ஆனால் ஒன்று மட்டும் உண்மை. கடந்த கால அரசியல் வரலாற்று நிகழ்வுகளிலிருந்து கற்றுக்கொண்டு நிகழ்கால யதார்த்தத்திற்கேற்ப தந்திரோபாயங்களை வகுத்துக்கொண்டு எதிர்கால இலட்சியத்தினை அடைவதற்கு நம் தமிழர்களை வழி நடாத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழி சமைத்துள்ளது. ஆனால் பேரினவாதமோ கடந்த காலத்தின் நிகழ்வுகளை கணக்கில் எடுக்காது நிகழ்கால யதார்த்தத்தினையும் புரிந்துகொள்ளாது ஒட்டுமொத்த எம் தமிழ்ச் சமூகத்தையும் படுகுழியில் தள்ள முனைகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சனையின்போது ஒரு தடவை கூறியது போல நாமும் கண்ணைத்திறந்து விருப்பத்துடன் படுகுழியில் விழ வேண்டுமா? ஒரு தடவைக்கு ஓராயிரம் தடவை சிந்தியுங்கள் என்று என் தமிழ் மக்களே உங்கள் சிந்தனைக்கு வழிவிடுகிறேன்.
எனக்குத் தெரியும் என் தமிழ்ச் சமூகம் சிந்திக்கத் தெரிந்தது மட்டுமல்ல சரியான நேரத்தில் சரியான தீர்மானமும் எடுக்க வல்லது. அந்தச் சரியான தீர்மானம் எடுக்க வேண்டிய சரியான நேரம் இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல். எனவே இத் தேர்தலில் உங்கள் உயர் ஜனநாயக உரிமையாம் வாக்குரிமையை வீட்டுச் சின்னத்திற்கு வழங்கி பேரினவாதத்திற்கு தக்க பாடம் புகட்டி எம் தமிழ்த் தேசியம் தழைக்க நீரூற்றி உரமூட்டுங்கள் என்று ஒட்டுமொத்த எம் கிழக்கு வாழ் தமிழ் சமூகம் புத்திஜீவிகள் பத்திரிகையாளர்கள் கல்விமான்கள் அரச அலுவலர்கள் அனைவரையும் உரிமையுடன் வேண்டுகின்றேன் என ஜனா தெரிவித்தார்.

நண்றி;

‘டெலோ’ வின் எட்டாவது தேசிய மகாநாடு!

26 ஆம் 27 ஆம் திகதிகளில் யாழில் ‘டெலோ’ வின் எட்டாவது தேசிய மகாநாடு!

தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் எட்டாவது தேசிய மகா நாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வின் எட்டாவது தேசிய மகா நாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ளது. குறித்த மகா நாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள், தலைவர்கள், செயலாளர்கள் அதிதிகளாக அழைக்கப்பட்டுள்ளனர்.தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காண சாத்வீக ரீதியான உரிமை போராட்டத்திற்கு அங்கம் வகிக்கும் தலைவர்களும், செயலாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மகா நாட்டின் முன்னேற்பாடாக மாவட்ட ரீதியான தெரிவுகள் இடம் பெறவுள்ளது.அதன் நிமித்தம் இம்மாதம் 16 ஆம் திகதி திருகோணமலை,17 ஆம் திகதி அம்பாரை,18 ஆம் திகதி மட்டக்களப்பு,19 ஆம் திகதி யாழ்ப்பாணம்,20 ஆம் திகதி மன்னார்,21 ஆம் திகதி வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கட்சியின் மாவட்ட ரீதியாக மாவட்ட பொதுக்குழு அங்கத்தவர்களும், மாவட்ட செயல்குழு அங்கத்தவர்களும், மாவட்ட செயலாளர், மாவட்ட துனைச் செயலாளர், கட்சியின் பொதுக்குழு அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.குறித்த தெரிவுகளை அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன், உப தலைவர் பிரசன்னா இந்திர குமார், தலைமை குழு உறுப்பினர் எம்.சிறிகாந்தா, கட்சியின் பிரான்ஸ் நாட்டின் பிரதி நிதி நித்தியானந்தம் ஆகியோர் இணைந்து தெரிவுகளை மேற்கொள்ளவுள்ளனர்.குறித்த மாநாட்டிற்கு கட்சியின் சர்வதேச பிரதி நிதிகளும் விசேடமாக கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கு அமைவாக சென்ற வாரம் திருகோணமலையில் இடம் பெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தின் போது கட்சியின் யாப்பில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனை செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் தேர்தல் ஆணையாளருக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். குறித்த தேசிய மாநாட்டில் அரசியல் ரீதியாக பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் மேலும் தெரிவித்தார்.