அரசியல் கட்சியாக கூட்டமைப்பை பதிவு செய்வதற்கு 15 பேர் கொண்ட குழு அமைப்பு – அடைக்கலநாதன் எம்.பி தெரிவிப்பு
தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வது மற்றும் குழுக்களை
அமைப்பது தொடர்பில் ஆராய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து
கட்சிகளிலுமிருந்து தலா மூவர் வீதம் 15 பேரைக் கொண்ட குழு
அமைக்கப்பட்டுள்ளதுடன் இக் குழு மார்ச் மாதம் 20 ஆம் திகதி இது தொடர்பான
அறிக்கையை சமர்ப்பிக்குமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் தலைவர் செல்வம்
அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல்
கட்சியாகப் பதிவு செய்வது குறித்து கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து
கட்சிகளில் பல தமிழரசுக் கட்சியை வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் நேற்று
முன்தினம் மாலை கொழும்பிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில்
ஐந்து கட்சிகளினதும் தலைவர்கள், பிரதிநிதிகள் கூடி நீண்ட நேரம் கட்சியைப்
பதிவு செய்வது குறித்து ஆராய்ந்தனர்.இந்தக் கூட்டத்தின் போதே கூட்டமைப்பை
பதிவு செய்வது, குழுக்கள் அமைப்பது மற்றும் பல விடயங்களை ஆராயவென ஒரு
குழுவை அமைப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. இந்தக் குழுவில் அங்கம் வகிக்கவென
ஒரு கட்சியிலிருந்து ஐவர் பெயரிடப்படுவர். இருந்தபோதிலும் மூவரே
குழுக்கூட்டங்களில் கலந்து கொள்வர் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment