Pages

Thursday, 28 February 2013

டெலோ ( Vinthan ) கண்டனம் !

யாழில் பத்திரிகை விநியோக முகாமையாளர் மீதான தாக்குதலுக்கு டெலோ கண்டனம்

telo.Vinthanயாழ் தினக்குரல் பத்திரிகையின் பத்திரிகை விநியோகப் பணியாளரும், அலுவலகப் பணியாளருமாகிய எஸ்.சிவகுமாரன் மீது இன்று அதிகாலை புத்தூரில் இடைமறித்த காடையர்கள் அவரைக் கண்மூடித்தனமாகத் தாக்கிக் காயப்படுத்தி பத்திரிகைகளையூம் பறித்துக் கொழுத்தி அவர் பயணித்த மோட்டார் சைக்கிளையூம் முற்றாக எரித்து நாசமாக்கியூள்ளனர். இதன் மூலம் நாசகாரிகளின் மற்றுமோர் வேள்வியொன்று யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளது. முற்றுமுழுதாக முப்படைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள யாழ் குடாநாட்டில் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான மிலேச்சத்தனமான கண்மூடித்தனமான வெறிச் செயல்களைச் செய்யூம் ஈனப்பிறவிகள் யாரும் இதுவரைக்கும் கைதுசெய்யப்படப்பட்டதாகவூம் சட்டத்தின் முன்னிறுத்தித் தண்டிக்கப்பட்டதாகவூம் வரலாறு இல்லை. தமிழினத்திற்காகவூம் அதன் உரிமைகளுக்காகவூம் நேர்மையோடும் துணிச்சலோடும் குரல் கொடுக்கும் பொதுமக்கள் அரசியலாளர்கள் ஊடகவியலாளர்கள் ஊடக நிறுவனங்கள் அதன் பணியாளர்கள் மீதான அச்சுறுத்தல்களும் கெடுபிடிகளும் வன்முறைகளும் போர் முடிந்த பின்பு முள்ளிவாய்க்காலோடு முற்றுப்பெற்றதாக கூறப்பட்ட இனவன்முறையூம் அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் ஆட்சியாளர்களாலும் அதன் ஒட்டுக்குழுக்களாலும் தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்பட்டே வருகின்றது.
சிவகுமாரன் மீதான தாக்குதல் சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிப்பதோடு இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் மகிந்த சிந்தனையில் எழுந்த ஓர் காட்டுத்தர்பார் நடவடிக்கையாகும். இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறும் அரசின் உண்மையான கோர முகம் இப்பொழுது உலகத்திற்கு அம்பலமாகிக் கொண்டு வருகின்றது. இதைச் சர்வதேசமும் பார்த்தும் பாராமல் இருக்கின்றது. இதன் காரணமாக சிறுபான்மையினராகிய எம்மீது தொடர்ந்து அச்சுறுத்தல்களை நிகழ்த்தி அடிமை வாழ்வூக்குள் வைத்திருக்கலாம் என அரசு பகல் கனவூ காண்கின்றது. இந்நாட்டில் தமிழ் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் இருப்புக்கும் உரிமைகளுக்கும் இந்த அரசு பாரிய அச்சுறுத்தலாக உள்ளது. எனவே உடனடியாக சர்வதேசம் இதில் தலையிட்டு இத்தகைய செயற்பாடுகளை வன்மையாகக் கண்டித்து இவற்றுக்கெதிராக உடனடி நீதி விசாரணைகளைக் கோர வேண்டும் எனக் கோருகின்றேன்.
கே.என்.விந்தன் கனகரத்தினம்
யாழ் மாநகரசபை உறுப்பினர்
தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

No comments:

Post a Comment