Thursday, 27 March 2014

அமெரிக்கத் தீர்மானத்தை கூட்டமைப்போ தமிழர்களோ உருவாக்கவில்லை! எதிர்ப்பதால் என்ன பயன்?- செல்வம் எம்.பி



[ வியாழக்கிழமை, 27 மார்ச் 2014, 09:05.24 AM GMT ]

அமெரிக்கத் தீர்மானத்தினை த.தே.கூட்டமைப்போ தமிழர்களோ உருவாக்கவில்லை. இத்தீர்மானம் தமிழர்கள் விரும்பியவாறு இல்லாவிட்டாலும், மனித உரிமைகள் ஆணையத்தினூடாக சர்வதேச விசாரணையை நடத்துமளவிற்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கதென பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்ப்பவர்களால் தமிழ் மக்களுக்கு என்ன பயன்?- ஜெனிவாவில் செல்வம் எம்.பி அமெரிக்கத் தீர்மானத்தில் சில சாதக, பாதகம் இருந்தாலும் இதனை விமர்சிக்கும் தமிழர்களால் தமிழ் மக்களுக்கு என்ன பயன் என ஜெனிவாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா அரசு மீது வரவுள்ள அமெரிக்கத் தீர்மானத்தின் மூலம் எங்களுடைய மக்களின் இன்றைய துன்பத்திற்கு ஒரு விடிவு வரும் என்ற நம்பிக்கை பிறந்தள்ளது என ஜெனிவாவில் லங்காசிறி வானொலியின் விசேட செய்தியாளரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.