Saturday, 24 August 2013

வடக்கில் இராணுவத் தலையீடுகள் அதிகரிப்பு சுதந்திரமான தேர்தலை எதிர்பார்க்க முடியாது: கூட்டமைப்பு


நீதியானதும் நேர்மையானதுமான ஒரு தேர்தலை வடக்கில் எதிர்பார்க்கமுடியாதென தேர்தல் ஆணையாளரிடம் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தல் அடக்குமுறைகளும் மோசடிகளும் நிறைந்த தேர்தலாகவே அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் ஆணையாளர் தலைமையில் இன்று யாழில் நடைபெற்ற கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்றின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரிய யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் வேட்பாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இக் கலந்துரையாடலில் சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,
வல்வெட்டித்துறைச் சந்தியில் தமிழ் மக்களின் பூர்வீக நிலமான நாலு ஏக்கர் ஆதனப் பகுதியை சுவீகரித்து அவ்விடத்தில் பாரிய ஒரு படைத்தளத்தை இராணுவம் அமைத்துள்ளது.
இக் காணி உரிமையாளர்களிடம் வீடுகளைக் கையளிக்கும் ஒரு நிகழ்வு செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி பருத்தித்துறைப் பிரதேச சபையில் நடைபெறவுள்ளது. இதுவொரு தேர்தல் முறைகேடாகும். இதனை தேர்தல் ஆணையாளர் தடுக்க வேண்டும் எனக் கோரினார்.
அப்பொழுது குறுக்கிட்ட தேர்தல்கள் ஆணையாளர் அக்கூட்டத்தினை தன்னால் தடுக்க முடியாது எனவும் வேட்பாளர்கள் இக்கூட்டத்தில் தன்னால் தடுக்கமுடியும் எனத் தெரிவித்தார்.

நவனீதம்பிள்ளையின் விஜயத்தையேட்டி யுத்தத்தினால் சேதமான வாகனங்களை மறைப்பு.


யுத்தத்தின் காரணமாக சேதமாக்கப்பட்ட மக்களின் வாகனங்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் இடம் பெறவுள்ள நிலையில் குறித்த வாகனங்களை அவர் காணமுடியாத வகையில் தற்போது மறைப்புச்செய்யப்பட்டு வருவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
வன்னியில் இடம் பெற்ற யுத்தத்தின் காரணமாக அந்த மக்கள் தமது சகல உடமைகளையும் இழந்து இடம் பெயர்ந்து சென்றனர்.
யுத்தத்தின் பின் அந்த மக்கள் மீண்டும் அந்த மண்ணில் குடியேற்றம் செய்யப்பட்டு எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த மக்கள் இடப்பெயர்வுகளின் போது கைவிட்டுச் சென்ற வாகனங்கள் பயண்படுத்த முடியாத வகையில் காணப்பட்டுள்ள போதும் உரிய ஆவணங்கள் இல்லாமையினால் அவை திருப்பி வழங்கப்படாத நிலையில் படைத்தரப்பினரினால் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சுதந்திர புரம் சந்தி மற்றும் புதுக்குடியிருப்பு சந்தி ஆகியவற்றில் பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு தொகுதி வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இதே வேலை முள்ளிவாய்க்காளில் சுமார் 250 மீற்றர் பரப்பளவில் பயண்படுத்த முடியாத வகையில் கடும் சேதங்களுக்கு உள்ளான வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கைக்க வந்து யாழ்ப்பாணம் செல்லவுள்ள நிலையில் அவற்றை அவரோ அல்லது அவரின் குழுவினரோ பார்க்கக்கூடாது என்பதற்காக குறித்த மூன்று இடங்களிலும் குவித்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களைச் சுற்றி சுமார் 15 அடி உயரம் வரை தகரத்தினால் மறைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த சம்பவம் அந்த மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே பாதீக்கப்பட்ட மக்களை சந்திக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை மக்களிடம் சுதந்திரமான முறையில் அவர்களின் பிரச்சினையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Saturday, 10 August 2013

வடக்கில் சீனாவின் உதவியுடன் இராணுவத்தினருக்கு குடியேற்றங்கள்: எம்.கே. சிவாஜிலிங்கம்

Posted by TELOMedia on Saturday, August 10, 2013 · Leave a Comment

யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கில் சீனாவின் உதவியுடன் பாரிய இராணுவத் தளங்களையும் சுமார் ஒரு இலட்சம் இராணுவக் குடியிருப்புக்களை ஏற்படுத்தவும் அரசாங்கம் முற்பட்டு வருவதாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்களின் காணிகளையும் வீடுகளையும் விட்டு இராணுவத்தினர் வெளியேறுவது போன்ற தோற்றப்பட்டினைக் காட்ட இந்த அரசாங்கம் முற்பட்டு வருகின்றது. ஆனால் வலி. வடக்கிலுள்ள 6 ஆயிரத்து 500 ஏக்கருக்கும் அதிகமான பொது மக்களின் காணிகளை இராணுவம் சுவீகரித்து வருகின்றது. பொது மக்களின் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்ற இராணுவம் விடுவிக்கப்பட்ட இடங்களுக்கு அருகிலுள்ள ஏனைய காணிகளைச் சுவீகரித்து அந்தந்தப் பகுதிகளில் சீன அரசின் உதவியுடன் நிரந்தரப் படை முகாம்களை அமைத்து வருகின்றது.

வெலிவேரியா சம்பவத்திற்கு பன்னாட்டு விசாரணை என்றால் முள்ளிவாய்க்காலுக்கு ஏன்கோரவில்லை-கே.சிவாஜிலிங்கம்!

Posted by TELOMedia on Saturday, August 10, 2013 · Leave a Comment
வெலிவேரியா சம்பவத்திற்கு சர்வதேச விசாரணை கோரும் ஐக்கிய தேசியக் கட்சி எதற்காக முள்ளிவாய்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணையைக் கோரவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். இதனால் வடமகாண சபைத் தேர்தலில் எல்லா சிங்கள இனவாதக் கட்சிகளையும் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார் அவர் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாணையை வலியுறுத்தி இலங்கை அரசாங்கத்திற்கு ஓங்கி அறையும் சந்தர்ப்பமாக வடமாகாண சபைத் தேர்தலை மக்களை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கேள்வியினை எழுப்பியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் படியே 40 ஆயிரம் பேர் முள்ளிவாய்காலில் கொல்லப்பட்டுள்ளனர். அந்த வகையில் வெலிவேரியா சம்பவத்தில் சிங்கள மக்கள் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு சர்வதேச விசாரணையைக் கோரும் ஐக்கிய தேசியக் கட்சியினர் எதற்காக இதற்கு சர்வதேச விசாரணையைக் கோரவில்லை. வலி.வடக்கிலும் இன்று சுமார் 6 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகளை இராணுவம் சுவீகரித்துள்ளது. இவை தொடர்பில் அரசோடு சேர்நதுள்ள ஈ.பி.டி.பி ஏனையவர்களும் மௌனமாக இருக்கின்றனர். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று சொன்னார்கள். ஆனால் இன்று மத்தியில் காட்டாட்சி மாநிலத்தில் சுத்துமாத்து ஆட்சி தான் நடக்கின்றது. இலங்கை இந்திய ஒப்பந்ததின் அடிப்படையில் உருவான மாகாண சபை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராக நாங்கள் போட்டியிடுவது இந்த தேர்தலில் போட்டியிடாது விட்டால் அரசிற்கு வேண்டிய அடிவருடிகள் மாகாண சபையைக் கைபற்றி தவறாக செய்திகளை உலகிற்கு சொல்லி விடுவார்கள் என்பதாலேயோகும். கூட்டமைப்பினரின் வெற்றிக்கு அஞ்சியே தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக இலங்கை அரசாங்கம் சுயட்சைக் குழக்களையும் களமிறக்கியுள்ளது. அற்ப சொற்ப விடங்களுக்காக மாகாண சபை ஆளும் கட்சியினருக்கு செல்லக் கூடாது. மாகாண சபையைக் கைப்பற்றியதும். நாம் அனைவரும் ஒன்றாக இராஜினமா? கூட செய்யலாம். ஆனால் நடப்பது என்னவென்று தெரியாது. கிழக்கில் 2006ஆம் ஆண்டு ஜே.வி.பி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவினை அடுத்து வடக்கு கிழக்கு பிரிந்தது. இதன் பின்னர் 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மாகாண சபைகளின் பிரிப்பினை எதிர்த்து கூட்டமைப்பினர் போட்டியிடவில்லை. இதனால் பிள்ளையான போன்றவர்கள் முதமைச்சராகிய விருப்பதாகாத சம்பவங்கள் நடைபெற்றன. எனவே 2012ஆம் ஆண்டு மாகாண சபைத் தோத்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவினை கூட்டமைப்பு பரீசிலனை செய்து மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டது. மாகாண சபை மூலம் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. ஆனால் அதில் இருந்து கொண்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக சர்வதேசத்திற்கு செய்திகளை கூறுவோம். இலங்கை இந்திய ஒப்பந்த்தில் உருவான மாகாண சபை தமிழர்களது பிரச்சினைக்கு ஒரு தீர்வல்ல. இதனை ஒரு ஆரம்ப புள்ளியாகவே எடுத்துக் கொள்ள முடியும். உயிர்நீத்த 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாவீர்கள் மற்றும் லட்சக்காணக்கான போராளிகளின் உயிர்த் தியாகங்களுக்கு மாகாண சபை ஒரு தீர்வல்ல. இந்த தேர்தலில் தமிழின அழிப்பு செய்தோரை தோற்கடியுங்கள். தமிழர்களுக்கு நீதி வழங்க வாக்களியுங்கள் என்று தான் கோருகின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் இந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையென்றையே நாம் கோருக்கின்றோம். அதற்கான செய்தியை உலகிற்கு சொல்லும் விதமாக இலங்கை அரசாங்கத்திற்கு ஓங்கி அறையும் சந்தர்ப்பமாக வடமாகாண சபைத் தேர்தலை தமிழ் மக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றார்.

Friday, 9 August 2013

தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டியுள்ளது-கே.என்.விந்தன்


தமிழ் மக்களுக்கு தீர்வுகாணப்படவேண்டிய பிரச்சினைகள் ஏதும் கிடையாது என்று அரசாங்கம் தெரிவித்துவரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பலப்படுத்துவதன் ஊடாக தமிழ் மக்கள் தமது மக்கள் ஆணையினை வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் கே.என்.நடராஜா விந்தன் கனகரட்ணம்; தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகர சபை உறுப்பினரான விந்தன் கனகரட்ணம் தற்போது வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார். இந்நிலையில் மாகாண சபைத் தேர்தல் கள நிலவரங்கள் எவ்வாறாக அமைகின்றன என்பது தொடர்பில் வீரகேசரிக்கு அவரளித்த பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இன்றைய அரசியல் சூழலில் தமிழ் மக்கள் மத்தியில் மாகாண சபைத் தேர்தல் எவ்வாறாக முக்கியத்துவம் பெறுகின்றது என்பது தொடர்பிலும் அவர் விளக்கமளித்தார்.
1988 அம் ஆண்டு இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல்கள் நடைபெற்ற பின்பு 2006 அம் அண்டு வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்ட நிலையில் கிழக்கிற்கான மாகாண சபைத் தேர்தல்கள் இரு தடவைகள் நடைபெற்றுள்ளன.
வடக்கினைப் பொருத்தளவில் 2009 அம் அண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் பாராளுமன்றத் தேர்தல் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடந்தேறிய போதும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் விருப்புக் காணப்படவில்லை.
இது வெளிப்படையான விடயமும் கூட. இவ்வாறானதோர் சூழ்நிலையில் ஒருவாறு வடக்கிற்கான தேர்தல் தற்போதே முதன் முறையாக நடைபெற அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் அறிவிப்பினைக் கூட மேற்கொள்வதில் பலதரப்பட்ட சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் தாக்கம் செலுத்தின. எது எப்படியிருந்தபோதும் இப்போது தேர்தலுக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண சபைத் தேர்தலை அறிவிக்க வேண்டும் என உலகளவில் நல்லாட்சியினை விரும்பும் நாடுகளும் மனித உரிமை மேம்பாட்டினை நோக்காகக் கொண்ட பல நிறுவனங்கள் மற்றும் ஆய்வாளர்களும் என அரசாங்கத்திற்கு மிகவும் நெருக்கடியொன்றைப் பிரயோகித்ததன்
அடிப்படையிலேயே; இத் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்ற கதிக்குள் ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே இவ்வாறாக சர்வதேச நகர்வுகளுக்கு மத்தியில் இடம்பெறப்போகின்ற தேர்தல் ஒன்றில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக எந்த வகையிலான இடர்பாடுகள் வந்தாலும் தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கவேண்டும் என்ற உறுதியிலேயே இத் தேர்தலில் வேட்பாளர்களாக நாம் களம் இறங்கியுள்ளோம்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீPர்விற்கான முடிவாக இத் தேர்தலை நாமும் நமது மக்களும் கருதவில்லை.
எனினும் தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினை மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைக்கான ஆரம்பப் புள்ளிகளில் ஒன்றாகப் பார்க்கின்றோம். இவ்வாறாக இத் தேர்தல் முக்கியத்துவமடைகின்றது.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிந்துபோன யுத்தத்தினோடுஇ தமிழர்களை வென்றுவிட்டதாகவும் தமிழர்கள் தோற்றுப்பொன இனம் என்றும் இந்நாட்டில் இனப்பிரச்சினை ஏதும் இல்லை என்றும் அரசாங்கம் கூறி வருகின்றது.
இது மிகவும் அபாயகரமான சூழ்நிலையாகும். இந்த இடத்தில் தமிழ் மக்கள் யுத்தத்தின் முடிவுக்குப் பின்னர் நேரடியான படுகொலைகள் மட்டும் தான் குறைந்து விட்டன.
ஏனைய சகல பிரச்சினைகளும் தீர்வின்றித் தொடர்கின்றன என்ற தகவலை ஜனநாயக வழியில் மக்களாணையுடன் நாம் வெளிப்படுத்த வேண்டியுள்ளது.
இதற்கான சந்தர்ப்பமாக எமது மக்கள் வடமாகாண சபைத் தேர்தலைப் பயன் படுத்தும் அதேவேளை கருவியாக எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பயன்படுத்தவேண்டும்.
ஒட்டுமொத்தத் தமிழர்களும் தமிழத் தேசியக் கூட்டமைப்பி
ற்கு வாக்களிப்பதன் மூலம் இனப்பிரச்சினைத் தீர்விற்கான அழுத்தத்தினை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தவேண்டும்.
இன்றைய அரசியல் யதார்த்தங்களில் மாகாண சபைகளை ஓர் புள்ளியாக வடிவமைத்துக் கொண்டு நாம் பயணிக்கவேண்டியுள்ளது.
நாம் மாகாண சபைகளில் எட்டப்போகின்ற இந்த வெற்றியை எமத தேசியத்திற்காக முதலிட்டு அரசியல் உரிமைக்கான எமது போராட்டங்களை முன்னெடுக்கவேண்டியுள்ளது.
எமக்கு ஓர் நீதியான நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்று தேவை என்ற செய்தியை பேச்சக்களின் மேடைகளில் மட்டும் கூறி பேசுவதால் மட்டும் பலனில்லை. மக்கள் ஒவ்வெருவரும் அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும்; செய்தியாக செல்ல வேண்டிய தேவையுள்ளது
ஆகவே மக்கள் இம் முக்கியத்துவமுடைய தோதலில் தமது வாக்களிப்பு என்ற கருத்து வெளியிடும் சதந்திரத்தின் வாயிலாக தமது அபிலாசையிகை வெளிப்படுத்தவேண்டும்.
இலங்கையில் 19 டிவிசன்களில் உள்ள இராணுவத்தினரில் 15 டிவிசன் இராணுவத்தினர் குறிப்பாக குறிப்பாக ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் தமிழர் தாயகத்தின் வடமாகாணத்தினைப் பொருத்தளவில் நிலைகொண்டுள்ளனர்.
இத் தொகையானது இங்குள்ள மக்கள் தொகையில் நால்வருக்க ஒரு இராணுவச் சிப்பாய் என்ற அடிப்படையாகவுள்ளது.
இவர்கள் சிவில் உடையில சீருடையில் மக்கள் மத்தியில் பிரசன்னமாகி வருகின்றார்கள். இவ்வாறான துர்ப்பாக்கிய இராணுவமயமாக்கச் சூழ்நிலையில் இவ்வாறானதோர் சந்தேகம் அதிகப்படியாகவே எம்மிடம் உள்ளது.
பாரிய கெடுபிடிகளும் அச்சுறுத்தல்களும் இடம்பெற்றுவரும் நிலையில் நடைபெறவுள்ள தேர்தலில் ஒன்றாகவே இருக்கிறது என எதிர்பார்க்கின்றோம்.
படைத்தரப்பினரது அச்சுறுத்தல்களும் பிரசன்னமும் இருக்கத் தான் போகின்றது. வடக்கில் அரச ஒட்டுக்குழுக்களுக்கும் குறைச்சல் இல்லை என்பதை அறிந்து கொள்ளமுடிகின்றது. எனவே இவற்றுக்கு மத்தியில் தான் நாம் தேர்தல்களை எதிர்கொள்ளவேண்டிய நிலை இருக்கின்றது.
உள்ளுர் தேர்தல் கண்காணிப்பக் குழுக்களான கபே பவ்ரல் அமைப்புக்களோடு சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களின் அவசியமும் முதன்மைபெறுகின்றது. இவை எந்தளவிற்குச் சாத்தியப்பட போகின்றது என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.
மாகாண சபைகளுக்கு என அமைக்கப்பட்ட இந்த அரசியலமைப்புத் திருத்தத்தில் இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன எனக்கூறி நாம் போட்டியிடவில்லை.
எனினும் நடைபெறுகின்ற மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிரானவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தம்மை பிரகடனப்படுத்திக்கொண்டு சலுகைகளுக்காக எம் உரிமைகளைத் தாரைவார்க்கக் கூடாது என்பதற்காகவும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினை அரசாங்கம் குறிப்பாக இந்தியாவுக்கும் சர்வசேதத்திற்கும் ஐ.நாவுக்கு தொடர்ச்சியாக வாக்குறுதியளித்தது போல் முழுமையாக அமுல்படுத்தி அதை இன்னும் செழிப்புறச் செய்யவேண்டும என்ற அடிப்படைகளுடனேயே போட்டியிடுகின்றோம்.
மேலும் இதில் உள்ள அற்ப சொற்ப அதிகாரங்களையும் வெட்டிக்குறைக்கும் நோக்கத்தினைத் தடுப்பதற்காகவும் நாம் மாகாண சபையில் பெருவெற்றியடைய வேண்டும் என விரும்புகின்றோம்.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்ட பிரிவுகளான காணி பொலிஸ் அதிகாரங்கள் உரிய முறையில் அமுல் படுத்தப்படவேண்டும்.
அதன் ஊடாக மாகாணத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் குடிமனைகளும் நிலங்களும் மக்களிடம் மீளவும் ஒப்படைக்கப்படவேண்டும
குறிப்பாக மாகாணத்தில் ஆட்சேர்க்கப்பட்டு உருவாக்கப்படும் மாகண பொலிஸ் தனது பணிகளை சுதந்திரமாகச் செய்வதற்கு வழி ஏற்படுத்தப்படவேண்டும்.
மற்றும் அபிவிருத்திஇ நிதியைக் கையாளும் விடயங்கள் உள்ளன.
உற்பத்தியை அதிகரித்தல் அதனைச் சந்தைப்படுத்தல் மற்றும் முதலீட்டுச் சபைகள் வேலைவாய்புக்களை ஏற்படுத்தல் போன்றவை பற்றி நாம் கவனம் செலுத்த முடியும்.
தமிழ் மக்களுடைய மொழி பண்பாடு கலாச்சாரம் மரபுரிமை அடையாளங்கள் போன்றவற்றினையும் தமிழ் மக்களினை பாதுகாப்புத் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.
மேலும் கல்வி உள்ளுராட்சி தெருக்கள் விவசாயம் நீர்பாசனம் புனர்வாழ்வு கிராமிய அபிவிருத்தி மாகாண பொருளாதார திட்டமிடல் போன்றவற்றினை எமது மக்களிற்கு நியாயமானவகையில் பெற்றுக்கொடுக்கவேண்டும்.
அவற்றில் தடங்கல்கள் ஏற்படுத்தப்படும் போது சபைக்கு உள்ளும் வெளியிலும் போராடவேண்டியுள்ளது.
இந்த மாகாண சபை முறையில் ஆளுநரின் வகிபாகம் என்பது மக்கள் பிரதிநிதிகளின் தீர்மானங்களை விட ஒரு நிறைவேற்ற அதிகாரம் கொண்டதாய் அமைந்திருக்கின்றது.
உதாரணத்திற்கு நாம் எடுக்கும் தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு ஆளுநர் தடையாக இருக்கும் சந்தர்ப்பங்களும் கணிசமாகவே அமையும்.
எனவே ஆளுநரின் வரம்பு மீறிய அதிகார செயற்பாடுகளுக்கு எதிராக பலவழிகளிலும் நாம் நெருக்கடிகளை சந்திக்கநேரிடும்.
ஆகவே அளுநரின் அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டும். நாம் ஆளுநரின் அதிகாரங்களுக்குள் கட்டுண்டு செல்ல முடியாது.
மக்கள் அளித்த வாக்குளால் நாம் தெரிவு செய்யப்படுபவர்கள் என்ற வகையில் அங்கு பலவழிகளிலும் நாம் செயற்படவேண்டியுள்ளது.
மக்களின் குடிமனைகளில் இருந்த இராணுவத்தினர் இன்னும் முற்றாக விலக வில்லை.
மக்களின் நில புலங்களை தொடர் ஆக்கிரமிப்பிலேயே அவர்கள் வைத்திருந்து அவ்விடங்களில் விவசாயம் செய்து உள்ளுரில் அதனை சந்தைப்படுத்துகின்றார்கள்.
வீடுகளைப் பறிகொடுத்தவர்கள் அகதி முகாம்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வாழ்ந்துவரும் நிலையில் இவர்கள் தொழில் இழந்து கல்வியிழந்து வருமானம் இழந்த பல்லாயிரக்கணக்கானோர் சொந்த மாகாணத்திலேயே அவலவாழ்க்கையினை எதிர்கொண்டுவருகின்றனர்.
பறிக்கப்பட்ட வீடுகளையும் ஆக்கிரமிக்கப்பட்ட விளைநிலங்களையும் அரசாங்கத்திடம் இருநது விடுவிப்பதற்காக மாகாண சபையினையும் பயன்படுத்தி போராடவேண்டியிருக்கின்றது.
எமது மக்கள் போரின் பின்பான இயல்பு வாழ்க்கைக்க திரும்புவதற்கான சந்தர்ப்பம் இல்லை. வலிகாமம் வடக்கு மக்களுக்கு ஏற்பட்ட அவலத்தனைப் பாருங்கள்! என்று கே.என்.நடராஜா விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) விபத்தில் காயம்!

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) விபத்தில் காயமடைந்துள்ளார்.
மன்னாரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வரும் போது இடம்பெற்ற விபத்திலேயே இவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணசபை உறுப்பினரின் வாய்ப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
தற்போது கொழும்பில் உள்ள தனியார் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக உறுப்பினரின் இணைப்பாளர் தெரிவித்தார்.