Thursday, 29 November 2012
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்: செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கண்டனம்
யாழ். பல்கலைக்கழக விடுதியினுள் கடந்த 27 ஆம் திகதி இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தமை மற்றும் மறுநாள் காலை மாணவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் ஆகியவற்றை த.தே. கூட்டமைப்பு வண்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத் (ரெலோ)தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதன் ஒரு அங்கமாகவே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவமும் அமைந்துள்ளது.கடந்த 27 ஆம் திகதி மாவீரர் தினமன்று யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதியினுள் அத்துமீறி நுழைந்த ஆயிரக்கணக்காண இராணுவத்தினரும், பொலிஸாரும் அங்கு மாணவர் விடுதியினை சேதப்படுத்தியதோடு மாணவர்களையும் அச்சுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் அந்த மாணவர்களுக்காக ஆதரவு தெரிவித்து அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சரவனபவன் அவர்களை கற்கலினால் எறிந்து தாக்க முயற்சித்ததோடு, ஊடகவியலாளர் ரீ.பிரேமானந்த மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து மறு நாள் 28 ஆம் திகதி காலை இராணுவத்தினரதும், பொலிஸாரதும் குறித்த சம்பவத்தை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் நூற்றுக்கணக்காணவர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது அந்த மாணவர்கள் மீது இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து கண்மூடித்தனமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் போது பல மாணவர்கள் காயமடைந்து யாழ் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் யாழ். பல்கலைக்கழகத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்களின் வாகனம் அங்கு இராணுவத்தினருக்கு முன்னால் வைத்து சந்தேகநபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவங்களுக்கு இராணுவம் ஆதரவாக காணப்பட்டுள்ளது.பல்கலைக்கழக மாணவர்களை அடக்கி ஆள நினைக்கும் படையினர் இவ்வாறான கலவரங்களை ஆரம்பித்து பழி தீர்க்க முனைகின்றனர். குறித்த சம்பவங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வண்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றது.இந்த சம்பவத்திற்கு எதிராக சர்வதேசத்தின் ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்து நிற்பதோடு, இந்த சம்பவத்திற்கு எதிராக சில தினங்களில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடாத்தவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment