மீனவர்களுக்கு
வழங்கப்பட்ட எரிபொருள் மானியத்தில் ஆட்குறைப்புச்செய்யப்பட்டுள்ளமையினால்
மீனவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துவருகின்ற நிலையில்
எரிபொருள் மானியங்களில் எவ்வித குறைப்பும் செய்யாது மீனவர்களுக்கு தொடர்ந்தும் வழங்குமாறு ,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கடற்தொழில்
மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு கோரிக்கை கடிதம் ஒன்றைஅனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
எரிபொருள் விலையேற்றத்தினால் மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு
முகம்கொடுத்து வந்த நிலையில் மீனவர்களின் நலன் கருதி கடல் தொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சு மீனவர்களுக்கான எரிபொருள் மானியத்தை வழங்கிவந்தது.
இந்நிலையில் தற்போது மன்னார் மற்றும் முல்லைத்தீவு
மீனவர்களுக்குவழங்கப்பட்டு வரும் எரிபொருள் மானிய முத்திரைகளில்
ஆட்குறைப்புச்செய்யப்பட்ட நிலையில் பல மீனவர்களுக்கு குறித்த எரிபொருள்
மானிய முத்திரை வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால்,
அந்த மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்
கொடுத்துவருகின்றனர். ஆனால் மன்னார் மாவட்ட கடல் தொழில் பணிமனையின்
அதிகாரிகள் குறித்த மானியக் குறைப்பு தொடர்பாக எவ்வித
அறிவித்தல்களையும்உரியமுறையில் வழங்கவில்லை.
எனவே கடல் தொழில் அமைச்சர் என்ற வகையில் பாதிக்கப்பட்ட மன்னார்
மாற்றும்முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு எவ்வித
குறைப்பும்இன்றி அணைத்து மீனவர்களுக்கும் குறித்த எரிபொருள் மாணிய
முத்திரையினை வழங்க நடவடிக்கையினை உடன் மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன்கேட்டுக்கொள்ளுவதாக’ அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Posted by TELOJAFFNA on Friday, May 3, 2013 · Leave a Comment
No comments:
Post a Comment