தங்கங்களும், இரத்தினங்களும் இருக்கவேண்டும் ! அவ்வாறில்லாத செல்வம் முழுமையான செல்வமே அல்ல !
அன்புள்ள நட்பே !
என் எண்ணத்தை உன்னுடன் பகிர்ந்துகொள்ளக் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை இட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் ! என் பார்வையில் பரவலாக வளங்கள் பல கொட்டிக்கிடக்கிறது ! அப்படி சிதறிப் பிரிந்து கிடக்கும் வகையிலேயே அவை படைக்கப்பட்டுள்ளன அல்லது அதுவே அதன் சிறப்பு இயல்பு போலும் !
ஆனால் நல்ல முயற்சிகள் எண்ணங்களின் அடிப்படையில் வளங்களை ஒண்று திரட்டும்போது அவை செல்வங்களாக குவியும் ! அவ்வாறு குவிந்த செல்வங்கள் நிறைவாக; தங்கங்களும், இரத்தினங்களும் இருக்கவேண்டும் ! அவ்வாறில்லாதது முழுமையான செல்வமே அல்ல !
இங்கே நான் சொல்ல வருவது எங்களின் செல்வங்கள் முழுமை பெறவேண்டும். அப்போது தான் அது சிறந்த ஆக்கப்பணிகளுக்கு பயன்படும் ! அல்லது பயன்படுத்தப்படும் ! இதன் மூலம் மட்டுமே எங்கள் நாடும், வீடும் நலம் பெறும் !
இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் தங்கங்கள் உருக்கப்பட்டு என்றும் அவற்றின் உயர் பத்தரை மாற்றுத் தன்மையை பவுத்திரப்படுத்த வேண்டும் ! இரத்தினங்கள் வெட்டி பட்டை தீட்டப்பட வேண்டும் ! செல்வங்கள் சரியான சட்ட திட்ட விதிமுறைகள் யாப்பு ஒழுங்குகளுக்கு அமைவாக கையாளப்பட வேண்டும் ! செல்வங்களை ஒழுங்காக கையாளாத எந்த முயற்சியும் தோற்றுப் போகும் ! இந்த பொருளியல் இல்லை என்றால், அரசியலும் இல்லை ! இல்லற வியலும் இல்லை ! இப்போது நான் கூறிக்கொண்டிருக்கும் இந்த நல்லறவியல் பற்றி என் இனிய நட்பே நீ என்ன நினைக்கின்றாய் ? இன்னும் ஒரு மடலில் வந்து கலக்கும் வரையில்.....
அன்புடன் அன்பழகன்
ExTELO - 007
No comments:
Post a Comment