Friday, 11 May 2012

TELO : ExTELO !! இன்று மீண்டும் எமது தலைவர் இன்னொரு முறையும் சுடப்பட்டிறந்தார் !

இன்று மீண்டும்
எமது தலைவர்
இன்னொரு முறையும்
சுடப்பட்டிறந்தார் !

மரித்த எமது உறவுகளின் குரல்கள்
எங்களை இன்னமும் அதட்டிக் கேட்கிறது !
அரிதாரம் கலையாமலே - கிலி 
அவதாரம் எடுத்து,
சதிகாரர் போல அரங்கேறி ஆடி
கொலைகாரர் ஆகி,
புறநானூறு வீரம் ! பொய், புரட்டு -
கிலிப் பாட்டு
இதிகாசம் பல நூறு பேசி
விடுதலை வந்ததா ?
எங்களை ஏன் கொலை செய்தார்கள் .....?
எங்களை உயிருடன் ஏன் எரித்தார்கள்.....?
எங்கள் உடல்களை புதைத்தது எங்கே.........?
எங்கள் பெற்றோர் அனாதரவானதேன்.....?
எங்கள் பெண்டிரை ஏன் விதவைகள் ஆக்கினீர்.......?
எங்கள் பிள்ளைகள் ஏன் அநாதைகள் ஆயினர்.......?
எங்ஙனம் நாங்கள் துரோகிகள் ஆகினோம்.....?
எங்களைக் கொன்றதால் விடுதலை வந்ததா ???
வெட்கங் கெட்ட வேசதாரிகளே !
எவருடைய கைகளில் அடைக்கலம் புகுந்தீர் ?
எங்கள் கனவுகளை ஏன் புதைத்தீர்கள்  ?

விதைக்கப்பட்ட எங்கள் வீரர்கள்
விருட்சமாய் வளர்ந்து ஒரு நாள் எழுவர் !
ஆனால்......
இன்று மீண்டும்
எமது தலைவர்
இன்னொரு முறையும்
சுடப்பட்டிறந்தார் !

No comments:

Post a Comment