Thursday, 7 February 2013

கறுப்புமை பூசி அழிக்கப்பட்டுள்ளது !

திருகோணமலையில் டெலோ வினால் நிர்மாணிக்கப்பட்ட தியாகிகள் நினைவு மண்டபத்தின் பெயர்ப் பலகை கறுப்புமை பூசி அழிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் இன்று இலங்கையின் 65ஆவது சுதந்திரதின பிரதான நிகழ்வுக்கு திருமலை நகரசபை முதல்வர் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள  தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வினால் நிர்மாணிக்கப்பட்ட வெலிக்கடை தியாகிகள் நினைவு மண்டபத்தின் பெயர்ப் பலகை கறுப்புமை பூசி அழிக்கப்பட்டுள்ளது.இன்றைய சுதந்திர தின பிரதான நிகழ்வுகளில் பங்குபற்றுமாறு திருமலை நகரசபைத் தலைவருக்கு விசேட அழைப்பு எதுவும் அனுப்பப்படவில்லை. இவருக்கு சாதாரண குடிமகனுக்கு வழங்கப்படும் அழைப்பே அனுப்பப்பட்டுள்ளது. பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் கூட மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நகர சபைத் தலைவருக்கு வழங்கப்படவில்லையென்று விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment