Wednesday, 16 October 2013

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வினை தரும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை!- சிவாஜிலிங்கம்!

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வினை தரும் என்பதில் எங்களுக்கு அறவே நம்பிக்கை இல்லை என வடமாகாண சபை உறுப்பினரும் ரெலோ அமைப்பின் அரசியற்துறை தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இன்று (14) மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார்.

Tuesday, 15 October 2013

முல்லைதீவில் பாதிக்கப்பட்ட மீனவர்களுடன் டெலோ அமைச்சர் டெனிஸ்வரன் சந்திப்பு !

முல்லைத்தீவில் நேற்று (12) இடம்பெற்ற திடீர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களை, வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கைத்தொழில், வர்த்தகம், வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் டெலோவின் பா.டெனிஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் இன்று (13) காலை சந்தித்துள்ளார்.


இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், டெலோவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் ஆகியோரும் சென்றிருந்தனர்.


இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் மீனவ பிரதிநிதிகளுடன் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துரையாடினர். இதன்போது மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை அவர்களிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அனர்த்தம் இடம்பெற்ற கடற்கரை பகுதிக்குச் சென்று சேதமடைந்த படகுகளை பார்வையிட்டனர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மீனவர்களையும் சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்ததோடு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குரிய நஸ்ட ஈட்டை பெற்றுக்கொடுக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் பா.டெனிஸ்வரன் உறுதியளித்தார்.



Saturday, 24 August 2013

வடக்கில் இராணுவத் தலையீடுகள் அதிகரிப்பு சுதந்திரமான தேர்தலை எதிர்பார்க்க முடியாது: கூட்டமைப்பு


நீதியானதும் நேர்மையானதுமான ஒரு தேர்தலை வடக்கில் எதிர்பார்க்கமுடியாதென தேர்தல் ஆணையாளரிடம் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தல் அடக்குமுறைகளும் மோசடிகளும் நிறைந்த தேர்தலாகவே அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் ஆணையாளர் தலைமையில் இன்று யாழில் நடைபெற்ற கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்றின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரிய யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் வேட்பாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இக் கலந்துரையாடலில் சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,
வல்வெட்டித்துறைச் சந்தியில் தமிழ் மக்களின் பூர்வீக நிலமான நாலு ஏக்கர் ஆதனப் பகுதியை சுவீகரித்து அவ்விடத்தில் பாரிய ஒரு படைத்தளத்தை இராணுவம் அமைத்துள்ளது.
இக் காணி உரிமையாளர்களிடம் வீடுகளைக் கையளிக்கும் ஒரு நிகழ்வு செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி பருத்தித்துறைப் பிரதேச சபையில் நடைபெறவுள்ளது. இதுவொரு தேர்தல் முறைகேடாகும். இதனை தேர்தல் ஆணையாளர் தடுக்க வேண்டும் எனக் கோரினார்.
அப்பொழுது குறுக்கிட்ட தேர்தல்கள் ஆணையாளர் அக்கூட்டத்தினை தன்னால் தடுக்க முடியாது எனவும் வேட்பாளர்கள் இக்கூட்டத்தில் தன்னால் தடுக்கமுடியும் எனத் தெரிவித்தார்.

நவனீதம்பிள்ளையின் விஜயத்தையேட்டி யுத்தத்தினால் சேதமான வாகனங்களை மறைப்பு.


யுத்தத்தின் காரணமாக சேதமாக்கப்பட்ட மக்களின் வாகனங்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் இடம் பெறவுள்ள நிலையில் குறித்த வாகனங்களை அவர் காணமுடியாத வகையில் தற்போது மறைப்புச்செய்யப்பட்டு வருவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
வன்னியில் இடம் பெற்ற யுத்தத்தின் காரணமாக அந்த மக்கள் தமது சகல உடமைகளையும் இழந்து இடம் பெயர்ந்து சென்றனர்.
யுத்தத்தின் பின் அந்த மக்கள் மீண்டும் அந்த மண்ணில் குடியேற்றம் செய்யப்பட்டு எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த மக்கள் இடப்பெயர்வுகளின் போது கைவிட்டுச் சென்ற வாகனங்கள் பயண்படுத்த முடியாத வகையில் காணப்பட்டுள்ள போதும் உரிய ஆவணங்கள் இல்லாமையினால் அவை திருப்பி வழங்கப்படாத நிலையில் படைத்தரப்பினரினால் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சுதந்திர புரம் சந்தி மற்றும் புதுக்குடியிருப்பு சந்தி ஆகியவற்றில் பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு தொகுதி வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இதே வேலை முள்ளிவாய்க்காளில் சுமார் 250 மீற்றர் பரப்பளவில் பயண்படுத்த முடியாத வகையில் கடும் சேதங்களுக்கு உள்ளான வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கைக்க வந்து யாழ்ப்பாணம் செல்லவுள்ள நிலையில் அவற்றை அவரோ அல்லது அவரின் குழுவினரோ பார்க்கக்கூடாது என்பதற்காக குறித்த மூன்று இடங்களிலும் குவித்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களைச் சுற்றி சுமார் 15 அடி உயரம் வரை தகரத்தினால் மறைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த சம்பவம் அந்த மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே பாதீக்கப்பட்ட மக்களை சந்திக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை மக்களிடம் சுதந்திரமான முறையில் அவர்களின் பிரச்சினையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Saturday, 10 August 2013

வடக்கில் சீனாவின் உதவியுடன் இராணுவத்தினருக்கு குடியேற்றங்கள்: எம்.கே. சிவாஜிலிங்கம்

Posted by TELOMedia on Saturday, August 10, 2013 · Leave a Comment

யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கில் சீனாவின் உதவியுடன் பாரிய இராணுவத் தளங்களையும் சுமார் ஒரு இலட்சம் இராணுவக் குடியிருப்புக்களை ஏற்படுத்தவும் அரசாங்கம் முற்பட்டு வருவதாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்களின் காணிகளையும் வீடுகளையும் விட்டு இராணுவத்தினர் வெளியேறுவது போன்ற தோற்றப்பட்டினைக் காட்ட இந்த அரசாங்கம் முற்பட்டு வருகின்றது. ஆனால் வலி. வடக்கிலுள்ள 6 ஆயிரத்து 500 ஏக்கருக்கும் அதிகமான பொது மக்களின் காணிகளை இராணுவம் சுவீகரித்து வருகின்றது. பொது மக்களின் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்ற இராணுவம் விடுவிக்கப்பட்ட இடங்களுக்கு அருகிலுள்ள ஏனைய காணிகளைச் சுவீகரித்து அந்தந்தப் பகுதிகளில் சீன அரசின் உதவியுடன் நிரந்தரப் படை முகாம்களை அமைத்து வருகின்றது.

வெலிவேரியா சம்பவத்திற்கு பன்னாட்டு விசாரணை என்றால் முள்ளிவாய்க்காலுக்கு ஏன்கோரவில்லை-கே.சிவாஜிலிங்கம்!

Posted by TELOMedia on Saturday, August 10, 2013 · Leave a Comment
வெலிவேரியா சம்பவத்திற்கு சர்வதேச விசாரணை கோரும் ஐக்கிய தேசியக் கட்சி எதற்காக முள்ளிவாய்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணையைக் கோரவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். இதனால் வடமகாண சபைத் தேர்தலில் எல்லா சிங்கள இனவாதக் கட்சிகளையும் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார் அவர் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாணையை வலியுறுத்தி இலங்கை அரசாங்கத்திற்கு ஓங்கி அறையும் சந்தர்ப்பமாக வடமாகாண சபைத் தேர்தலை மக்களை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கேள்வியினை எழுப்பியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் படியே 40 ஆயிரம் பேர் முள்ளிவாய்காலில் கொல்லப்பட்டுள்ளனர். அந்த வகையில் வெலிவேரியா சம்பவத்தில் சிங்கள மக்கள் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு சர்வதேச விசாரணையைக் கோரும் ஐக்கிய தேசியக் கட்சியினர் எதற்காக இதற்கு சர்வதேச விசாரணையைக் கோரவில்லை. வலி.வடக்கிலும் இன்று சுமார் 6 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகளை இராணுவம் சுவீகரித்துள்ளது. இவை தொடர்பில் அரசோடு சேர்நதுள்ள ஈ.பி.டி.பி ஏனையவர்களும் மௌனமாக இருக்கின்றனர். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று சொன்னார்கள். ஆனால் இன்று மத்தியில் காட்டாட்சி மாநிலத்தில் சுத்துமாத்து ஆட்சி தான் நடக்கின்றது. இலங்கை இந்திய ஒப்பந்ததின் அடிப்படையில் உருவான மாகாண சபை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராக நாங்கள் போட்டியிடுவது இந்த தேர்தலில் போட்டியிடாது விட்டால் அரசிற்கு வேண்டிய அடிவருடிகள் மாகாண சபையைக் கைபற்றி தவறாக செய்திகளை உலகிற்கு சொல்லி விடுவார்கள் என்பதாலேயோகும். கூட்டமைப்பினரின் வெற்றிக்கு அஞ்சியே தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக இலங்கை அரசாங்கம் சுயட்சைக் குழக்களையும் களமிறக்கியுள்ளது. அற்ப சொற்ப விடங்களுக்காக மாகாண சபை ஆளும் கட்சியினருக்கு செல்லக் கூடாது. மாகாண சபையைக் கைப்பற்றியதும். நாம் அனைவரும் ஒன்றாக இராஜினமா? கூட செய்யலாம். ஆனால் நடப்பது என்னவென்று தெரியாது. கிழக்கில் 2006ஆம் ஆண்டு ஜே.வி.பி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவினை அடுத்து வடக்கு கிழக்கு பிரிந்தது. இதன் பின்னர் 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மாகாண சபைகளின் பிரிப்பினை எதிர்த்து கூட்டமைப்பினர் போட்டியிடவில்லை. இதனால் பிள்ளையான போன்றவர்கள் முதமைச்சராகிய விருப்பதாகாத சம்பவங்கள் நடைபெற்றன. எனவே 2012ஆம் ஆண்டு மாகாண சபைத் தோத்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவினை கூட்டமைப்பு பரீசிலனை செய்து மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டது. மாகாண சபை மூலம் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. ஆனால் அதில் இருந்து கொண்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக சர்வதேசத்திற்கு செய்திகளை கூறுவோம். இலங்கை இந்திய ஒப்பந்த்தில் உருவான மாகாண சபை தமிழர்களது பிரச்சினைக்கு ஒரு தீர்வல்ல. இதனை ஒரு ஆரம்ப புள்ளியாகவே எடுத்துக் கொள்ள முடியும். உயிர்நீத்த 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாவீர்கள் மற்றும் லட்சக்காணக்கான போராளிகளின் உயிர்த் தியாகங்களுக்கு மாகாண சபை ஒரு தீர்வல்ல. இந்த தேர்தலில் தமிழின அழிப்பு செய்தோரை தோற்கடியுங்கள். தமிழர்களுக்கு நீதி வழங்க வாக்களியுங்கள் என்று தான் கோருகின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் இந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையென்றையே நாம் கோருக்கின்றோம். அதற்கான செய்தியை உலகிற்கு சொல்லும் விதமாக இலங்கை அரசாங்கத்திற்கு ஓங்கி அறையும் சந்தர்ப்பமாக வடமாகாண சபைத் தேர்தலை தமிழ் மக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றார்.

Friday, 9 August 2013

தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டியுள்ளது-கே.என்.விந்தன்


தமிழ் மக்களுக்கு தீர்வுகாணப்படவேண்டிய பிரச்சினைகள் ஏதும் கிடையாது என்று அரசாங்கம் தெரிவித்துவரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பலப்படுத்துவதன் ஊடாக தமிழ் மக்கள் தமது மக்கள் ஆணையினை வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் கே.என்.நடராஜா விந்தன் கனகரட்ணம்; தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகர சபை உறுப்பினரான விந்தன் கனகரட்ணம் தற்போது வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார். இந்நிலையில் மாகாண சபைத் தேர்தல் கள நிலவரங்கள் எவ்வாறாக அமைகின்றன என்பது தொடர்பில் வீரகேசரிக்கு அவரளித்த பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இன்றைய அரசியல் சூழலில் தமிழ் மக்கள் மத்தியில் மாகாண சபைத் தேர்தல் எவ்வாறாக முக்கியத்துவம் பெறுகின்றது என்பது தொடர்பிலும் அவர் விளக்கமளித்தார்.
1988 அம் ஆண்டு இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல்கள் நடைபெற்ற பின்பு 2006 அம் அண்டு வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்ட நிலையில் கிழக்கிற்கான மாகாண சபைத் தேர்தல்கள் இரு தடவைகள் நடைபெற்றுள்ளன.
வடக்கினைப் பொருத்தளவில் 2009 அம் அண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் பாராளுமன்றத் தேர்தல் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடந்தேறிய போதும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் விருப்புக் காணப்படவில்லை.
இது வெளிப்படையான விடயமும் கூட. இவ்வாறானதோர் சூழ்நிலையில் ஒருவாறு வடக்கிற்கான தேர்தல் தற்போதே முதன் முறையாக நடைபெற அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் அறிவிப்பினைக் கூட மேற்கொள்வதில் பலதரப்பட்ட சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் தாக்கம் செலுத்தின. எது எப்படியிருந்தபோதும் இப்போது தேர்தலுக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண சபைத் தேர்தலை அறிவிக்க வேண்டும் என உலகளவில் நல்லாட்சியினை விரும்பும் நாடுகளும் மனித உரிமை மேம்பாட்டினை நோக்காகக் கொண்ட பல நிறுவனங்கள் மற்றும் ஆய்வாளர்களும் என அரசாங்கத்திற்கு மிகவும் நெருக்கடியொன்றைப் பிரயோகித்ததன்
அடிப்படையிலேயே; இத் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்ற கதிக்குள் ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே இவ்வாறாக சர்வதேச நகர்வுகளுக்கு மத்தியில் இடம்பெறப்போகின்ற தேர்தல் ஒன்றில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக எந்த வகையிலான இடர்பாடுகள் வந்தாலும் தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கவேண்டும் என்ற உறுதியிலேயே இத் தேர்தலில் வேட்பாளர்களாக நாம் களம் இறங்கியுள்ளோம்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீPர்விற்கான முடிவாக இத் தேர்தலை நாமும் நமது மக்களும் கருதவில்லை.
எனினும் தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினை மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைக்கான ஆரம்பப் புள்ளிகளில் ஒன்றாகப் பார்க்கின்றோம். இவ்வாறாக இத் தேர்தல் முக்கியத்துவமடைகின்றது.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிந்துபோன யுத்தத்தினோடுஇ தமிழர்களை வென்றுவிட்டதாகவும் தமிழர்கள் தோற்றுப்பொன இனம் என்றும் இந்நாட்டில் இனப்பிரச்சினை ஏதும் இல்லை என்றும் அரசாங்கம் கூறி வருகின்றது.
இது மிகவும் அபாயகரமான சூழ்நிலையாகும். இந்த இடத்தில் தமிழ் மக்கள் யுத்தத்தின் முடிவுக்குப் பின்னர் நேரடியான படுகொலைகள் மட்டும் தான் குறைந்து விட்டன.
ஏனைய சகல பிரச்சினைகளும் தீர்வின்றித் தொடர்கின்றன என்ற தகவலை ஜனநாயக வழியில் மக்களாணையுடன் நாம் வெளிப்படுத்த வேண்டியுள்ளது.
இதற்கான சந்தர்ப்பமாக எமது மக்கள் வடமாகாண சபைத் தேர்தலைப் பயன் படுத்தும் அதேவேளை கருவியாக எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பயன்படுத்தவேண்டும்.
ஒட்டுமொத்தத் தமிழர்களும் தமிழத் தேசியக் கூட்டமைப்பி
ற்கு வாக்களிப்பதன் மூலம் இனப்பிரச்சினைத் தீர்விற்கான அழுத்தத்தினை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தவேண்டும்.
இன்றைய அரசியல் யதார்த்தங்களில் மாகாண சபைகளை ஓர் புள்ளியாக வடிவமைத்துக் கொண்டு நாம் பயணிக்கவேண்டியுள்ளது.
நாம் மாகாண சபைகளில் எட்டப்போகின்ற இந்த வெற்றியை எமத தேசியத்திற்காக முதலிட்டு அரசியல் உரிமைக்கான எமது போராட்டங்களை முன்னெடுக்கவேண்டியுள்ளது.
எமக்கு ஓர் நீதியான நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்று தேவை என்ற செய்தியை பேச்சக்களின் மேடைகளில் மட்டும் கூறி பேசுவதால் மட்டும் பலனில்லை. மக்கள் ஒவ்வெருவரும் அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும்; செய்தியாக செல்ல வேண்டிய தேவையுள்ளது
ஆகவே மக்கள் இம் முக்கியத்துவமுடைய தோதலில் தமது வாக்களிப்பு என்ற கருத்து வெளியிடும் சதந்திரத்தின் வாயிலாக தமது அபிலாசையிகை வெளிப்படுத்தவேண்டும்.
இலங்கையில் 19 டிவிசன்களில் உள்ள இராணுவத்தினரில் 15 டிவிசன் இராணுவத்தினர் குறிப்பாக குறிப்பாக ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் தமிழர் தாயகத்தின் வடமாகாணத்தினைப் பொருத்தளவில் நிலைகொண்டுள்ளனர்.
இத் தொகையானது இங்குள்ள மக்கள் தொகையில் நால்வருக்க ஒரு இராணுவச் சிப்பாய் என்ற அடிப்படையாகவுள்ளது.
இவர்கள் சிவில் உடையில சீருடையில் மக்கள் மத்தியில் பிரசன்னமாகி வருகின்றார்கள். இவ்வாறான துர்ப்பாக்கிய இராணுவமயமாக்கச் சூழ்நிலையில் இவ்வாறானதோர் சந்தேகம் அதிகப்படியாகவே எம்மிடம் உள்ளது.
பாரிய கெடுபிடிகளும் அச்சுறுத்தல்களும் இடம்பெற்றுவரும் நிலையில் நடைபெறவுள்ள தேர்தலில் ஒன்றாகவே இருக்கிறது என எதிர்பார்க்கின்றோம்.
படைத்தரப்பினரது அச்சுறுத்தல்களும் பிரசன்னமும் இருக்கத் தான் போகின்றது. வடக்கில் அரச ஒட்டுக்குழுக்களுக்கும் குறைச்சல் இல்லை என்பதை அறிந்து கொள்ளமுடிகின்றது. எனவே இவற்றுக்கு மத்தியில் தான் நாம் தேர்தல்களை எதிர்கொள்ளவேண்டிய நிலை இருக்கின்றது.
உள்ளுர் தேர்தல் கண்காணிப்பக் குழுக்களான கபே பவ்ரல் அமைப்புக்களோடு சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களின் அவசியமும் முதன்மைபெறுகின்றது. இவை எந்தளவிற்குச் சாத்தியப்பட போகின்றது என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.
மாகாண சபைகளுக்கு என அமைக்கப்பட்ட இந்த அரசியலமைப்புத் திருத்தத்தில் இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பில் தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன எனக்கூறி நாம் போட்டியிடவில்லை.
எனினும் நடைபெறுகின்ற மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிரானவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தம்மை பிரகடனப்படுத்திக்கொண்டு சலுகைகளுக்காக எம் உரிமைகளைத் தாரைவார்க்கக் கூடாது என்பதற்காகவும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினை அரசாங்கம் குறிப்பாக இந்தியாவுக்கும் சர்வசேதத்திற்கும் ஐ.நாவுக்கு தொடர்ச்சியாக வாக்குறுதியளித்தது போல் முழுமையாக அமுல்படுத்தி அதை இன்னும் செழிப்புறச் செய்யவேண்டும என்ற அடிப்படைகளுடனேயே போட்டியிடுகின்றோம்.
மேலும் இதில் உள்ள அற்ப சொற்ப அதிகாரங்களையும் வெட்டிக்குறைக்கும் நோக்கத்தினைத் தடுப்பதற்காகவும் நாம் மாகாண சபையில் பெருவெற்றியடைய வேண்டும் என விரும்புகின்றோம்.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்ட பிரிவுகளான காணி பொலிஸ் அதிகாரங்கள் உரிய முறையில் அமுல் படுத்தப்படவேண்டும்.
அதன் ஊடாக மாகாணத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் குடிமனைகளும் நிலங்களும் மக்களிடம் மீளவும் ஒப்படைக்கப்படவேண்டும
குறிப்பாக மாகாணத்தில் ஆட்சேர்க்கப்பட்டு உருவாக்கப்படும் மாகண பொலிஸ் தனது பணிகளை சுதந்திரமாகச் செய்வதற்கு வழி ஏற்படுத்தப்படவேண்டும்.
மற்றும் அபிவிருத்திஇ நிதியைக் கையாளும் விடயங்கள் உள்ளன.
உற்பத்தியை அதிகரித்தல் அதனைச் சந்தைப்படுத்தல் மற்றும் முதலீட்டுச் சபைகள் வேலைவாய்புக்களை ஏற்படுத்தல் போன்றவை பற்றி நாம் கவனம் செலுத்த முடியும்.
தமிழ் மக்களுடைய மொழி பண்பாடு கலாச்சாரம் மரபுரிமை அடையாளங்கள் போன்றவற்றினையும் தமிழ் மக்களினை பாதுகாப்புத் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.
மேலும் கல்வி உள்ளுராட்சி தெருக்கள் விவசாயம் நீர்பாசனம் புனர்வாழ்வு கிராமிய அபிவிருத்தி மாகாண பொருளாதார திட்டமிடல் போன்றவற்றினை எமது மக்களிற்கு நியாயமானவகையில் பெற்றுக்கொடுக்கவேண்டும்.
அவற்றில் தடங்கல்கள் ஏற்படுத்தப்படும் போது சபைக்கு உள்ளும் வெளியிலும் போராடவேண்டியுள்ளது.
இந்த மாகாண சபை முறையில் ஆளுநரின் வகிபாகம் என்பது மக்கள் பிரதிநிதிகளின் தீர்மானங்களை விட ஒரு நிறைவேற்ற அதிகாரம் கொண்டதாய் அமைந்திருக்கின்றது.
உதாரணத்திற்கு நாம் எடுக்கும் தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு ஆளுநர் தடையாக இருக்கும் சந்தர்ப்பங்களும் கணிசமாகவே அமையும்.
எனவே ஆளுநரின் வரம்பு மீறிய அதிகார செயற்பாடுகளுக்கு எதிராக பலவழிகளிலும் நாம் நெருக்கடிகளை சந்திக்கநேரிடும்.
ஆகவே அளுநரின் அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டும். நாம் ஆளுநரின் அதிகாரங்களுக்குள் கட்டுண்டு செல்ல முடியாது.
மக்கள் அளித்த வாக்குளால் நாம் தெரிவு செய்யப்படுபவர்கள் என்ற வகையில் அங்கு பலவழிகளிலும் நாம் செயற்படவேண்டியுள்ளது.
மக்களின் குடிமனைகளில் இருந்த இராணுவத்தினர் இன்னும் முற்றாக விலக வில்லை.
மக்களின் நில புலங்களை தொடர் ஆக்கிரமிப்பிலேயே அவர்கள் வைத்திருந்து அவ்விடங்களில் விவசாயம் செய்து உள்ளுரில் அதனை சந்தைப்படுத்துகின்றார்கள்.
வீடுகளைப் பறிகொடுத்தவர்கள் அகதி முகாம்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் வாழ்ந்துவரும் நிலையில் இவர்கள் தொழில் இழந்து கல்வியிழந்து வருமானம் இழந்த பல்லாயிரக்கணக்கானோர் சொந்த மாகாணத்திலேயே அவலவாழ்க்கையினை எதிர்கொண்டுவருகின்றனர்.
பறிக்கப்பட்ட வீடுகளையும் ஆக்கிரமிக்கப்பட்ட விளைநிலங்களையும் அரசாங்கத்திடம் இருநது விடுவிப்பதற்காக மாகாண சபையினையும் பயன்படுத்தி போராடவேண்டியிருக்கின்றது.
எமது மக்கள் போரின் பின்பான இயல்பு வாழ்க்கைக்க திரும்புவதற்கான சந்தர்ப்பம் இல்லை. வலிகாமம் வடக்கு மக்களுக்கு ஏற்பட்ட அவலத்தனைப் பாருங்கள்! என்று கே.என்.நடராஜா விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) விபத்தில் காயம்!

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) விபத்தில் காயமடைந்துள்ளார்.
மன்னாரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வரும் போது இடம்பெற்ற விபத்திலேயே இவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணசபை உறுப்பினரின் வாய்ப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் சத்திர சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.
தற்போது கொழும்பில் உள்ள தனியார் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக உறுப்பினரின் இணைப்பாளர் தெரிவித்தார்.

Tuesday, 30 July 2013

அடைக்கலநாதன் எம்.பி நவம்பரில் சாகும் வரை உண்ணாவிரதம் – வவுனியாவில் சுவரொட்டிகள் (படங்கள்)..!

தேசிய பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் அடுத்த வருடத்துக்குள் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிலதினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் முகமாக டெலோ அமைப்பினரால் நாடுமுழுவது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.
இதேவேளை இன்று மாலை வவுனியாவின் பல பகுதிகளிலும் இச்சுவரொட்டிகள் ஓட்டப்படுவதை காணக்கூடியதாக இருந்தது.

vavuniya1 vavuniya2
vavuniya3 


http://www.vavuniyanet.com/?p=7107

Monday, 29 July 2013

தமிழ் மக்கள் முழுமையாக வாக்களிப்பதன் மூலமே உரிமையை பெற்றுக்கொள்ளமுடியும் - ஜனா


வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தமது வாக்கு பலத்தினை சரியான முறையில் முழுமையாக பயன்படுத்துவதன் மூலமே எதிர்காலத்தில் வடகிழக்கில் சகல அதிகாரங்களும் கொண்ட மக்களாக தமிழ் மக்கள் வாழமுடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)தெரிவித்தார்.

வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரவெட்டி விநாயகர் ஆலயத்துக்கு மாகாண சபை உறுப்பினரான கருணாகரமின் பன்முகப்படுத்தப்பட்ட 75ஆயிரம் ரூபா நிதியொதுக்கீட்டில் ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வு வவுணதீவு,கரவெட்டி விநாயகர் ஆலய முன்றிலில் கரவெட்டி பிரதேச கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றய அவர்,

வுடக்கு தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.வடக்கு தேர்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிகவும் பயந்த நிலையில் உள்ளது.இந்த தேர்தல் வடகிழக்கு தமிழ் மக்களுக்கு முக்கியத்துவமானதாகும்.

இன்று வடக்கு தேர்தலை உலக நாடுகள் உன்னிப்பாக பார்த்துகொண்டுள்ளன.இந்த தேர்தலில் பல குளறுபடிகளை செய்து அரசாங்க வெற்றிபெறமுயற்சிகளை மேற்கொள்ளும்.எவ்வாறாயினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த தேர்தலில் வெற்றிபெறும்.

கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு முழு  மையாக வாக்களிக்காத காரணத்தினால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அதிகமாக ஆசனங்களை பெறமுடியவில்லை.கிழக்கில் தமிழ் மக்கள் மிகவும் குறைந்தளவிலேயே தமது வாக்குகளை பதிவுசெய்திருந்தனர்.

எமது முஸ்லிம் சமூகத்தினர் வாக்களிப்பு தினத்தன்று முதல்வேலையாகச்சென்று வாக்களித்துவிட்டே தமது ஏனைய பணிகளை மேற்கொண்டனர்.ஆனால் தமிழ் மக்கள் அதில் பெரிதாக அக்கறை செலுத்தாத நிலையே இருந்தது.

வடக்கு கிழக்கினை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் ஒரே குறிக்கோளில் வாக்களிக்கவேண்டும்.தமிழ் மக்கள் முழுமையாக வாக்களிப்பதன் மூலமே வடகிழக்கில் தமிழ் மக்கள் முழு அதிகாரங்களும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

13வது அரசியலமைப்புச்சட்ட தமிழ் மக்களுக்கு இறுதி தீர்வு அல்ல.அதில் இருக்கும் அதிகாரங்களை நாங்கள் பயன்படுத்தி எமது உரிமையை பெற்றுக்கொள்ளும் இறுதித்தீர்வை நோக்கி பயனிக்கும் ஒரு கருவியாக பயன்படுத்தலாம்.அதனால்தான் இலங்கை அரசாங்கம் 13வது சட்டத்தினை இல்லாமல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இன்று அரசாங்கத்தில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் அபிவிருத்தியை காட்டி தமிழ் மக்களுக்கு உரிமை தேவையில்லையென்கின்றனர்.நாங்கள் கடந்த 30 வருடமாக உரிமைக்காகவே போராடினோம்.அபிவிருத்தி தேவையில்லையென்று நாங்கள் கூறவில்லை.உரிமையெதுவும் இல்லாத இடத்தில் அபிவிருத்தியால் எதுவித பிரயோசனமும் இல்லை.ஒரு கடைத்தெருவுக்கு தாயும் அவரது மகளான சிறுமியும் போயிருந்தனர்.சிறு கடைத்தெருவில் உள்ள கடைகளில் உள்ள பொருட்களை தாயிடம் அடிக்கடி கோரிக்கை விடுத்துக்கொண்டிருந்தாள்.பல கடைகளுக்கு சென்றபோதும் தாய் எதுவித விளையாட்டுப்பொருளும் வாங்கிக்கொடுக்கவில்லை.

சிறிது தூரம் சென்றதும் சனநெரிசலில் சிறுமி தாயை பிரிந்து தனியாக அழுதுகொண்டிருந்தால்.அதன்போது அப்பகுதியில் நின்றவர்கள் குழந்தையை அணுகி குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக பல்வேறு விளையாட்டுப்பொருட்களை வாங்கிக்கொடுத்தனர்.ஆனால் பிள்ளை அழுகையை நிறுத்தவில்லை.

அதுபோல் அழும் பிள்ளைக்கு அந்த தாய் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று தமிழ் மக்களுக்கு தாய்போன்ற அந்த உரிமை முக்கியம்.அந்த குழந்தைக்கு அந்த பொம்மைகள் தாயை காணாதவேளையில் எந்தவித பொருளும் பெரிதாக தெரியவில்லை.எனவே உரிமை இல்லாதவனுக்கு அபிவிருத்தியென்னும் பொருள் பெரிதாக தெரியப்போவதில்லை.இதனை அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் உணர்ந்துகொள்ளவேண்டும்.







மன்னாரில் த.தே.கூ. வேட்பு மனுத்தாக்கல்:மக்கள் அமோக வரவேற்பு

வடமாகாண சபைத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காண வேட்பு மனுவினை தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் இன்று காலை தாக்கல் செய்தனர்.

இன்று காலை 11.45 மணியளவில் மன்னார் மாவட்ட டெலோ தலைமை அலுவலகத்தில் இருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வேட்பாளர்கள்,ஆதரவாளர்கள் ,நகர சபை, பிரதேச சபை ஆகியவற்றின் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள்,வர்த்தகர்கள் என ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தனர்.

இதன் போது ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி வேட்பாளர்களை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து தந்தை செல்வாவின் சிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களும் மாலை அனுவித்து மரியாதை செலுத்தினர். வேட்பாளர் வைத்தியர் ஞானசீலன் குனசீலன் தலைமையினான மூன்று வேட்பாளர்கள் மதியம் 12.05 மணியளவில் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.


வேட்பு மனுத்தாக்கள் முடிவடைந்த நிலையில் குறித்த குழுவினர் மன்னார் ஆயர் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை மற்றும், இந்து மத குரு ஐங்கர சர்மா ஆகியோரை நேரடியாக சென்று சந்தித்து ஆசி பெற்றனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் வைத்தியர் ஞானசீலன் குனசீலன்,எஸ்.சிவகரன் , சட்டத்தரணிகலான எஸ்.பிரிமூஸ் சிராய்வா,பி;.டெனிஸ்வரன்,ஜே.அனந்தன் குரூஸ்,கே.விமல சேகரம், இ.சால்ஸ், அயூப் அஸ்மி ஆகியோர் போட்டியிருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

 

புதுக்குடியிருப்பு பச்சைபுல் மோட்டையில் கண்ணிவெடிக்குப் பலியாகியிருக்கின்ற பத்து வயது சிறுமியின் மரணத்திற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். அதிர்ச்சி தருகின்ற இந்த சம்பவத்தைப் பத்தோடு பதினொன்றாக வெறுமனே புறந்தள்ளிவிட முடியாது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பில் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்
குறிப்பிடுகையில்,,,

இடம்பெயர்ந்த மக்களையெல்லாம் மீள்குடியேற்றம் செய்தாகிவிட்டது.மீள்குடியேறிய மக்கள்
அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள்இ உதவிகளைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள்
 என்று அரசாங்கம் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில்தான் ஆனந்தபுரம் பச்சைபுல்மோட்டையில் பத்து வயது பாலகி ஒருவர்
கண்ணிவெடிக்கு இலக்காகி உயிரிழந்திருக்கின்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியிருக்கின்றது.
பூரணமாகக் கண்ணிவெடிகளை அகற்றாமல்,முறையான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில்
மீள்குடியேற்றம் செய்யப்படுள்ள மக்கள் இன்று சொல்லொணாத் துயரங்களையும் கஷ்டங்களையும்
அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதன் விளைவாகவே,ஜோசப் நிக்கலஸ் நிஷாந்தினி என்ற பாலகி கண்ணிவெடிக்குப்
பலியாகியிருக்கின்றார்.

இந்தச் சம்பவத்தில் அருகில் வீட்டிற்குள் சமையல் செய்து கொண்டிருந்த அவரது 28 வயதுடைய
சகோதரியும படுகாயமடைந்திருக்கின்றார்.

இறுதி நேரத்தில் கடும் சண்டைகள் நடைபெற்ற பகுதிகளில் ஆனந்தபுரம் மிகவும் முக்கியமான
இடமாகும்.

பெருமளவிலான கண்ணிவெடிகளும் இனந்தெரியாத வெடிப்பொருட்களும் பரவிக்கிடக்கின்ற
 முக்கியமான இந்தப் பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு
முன்னர்,அரசாங்கம் சரியான முறையில் கண்ணிவெடிகளை அகற்றவில்லை.

 உடையாத அல்லது அரைகுறையாக உடைந்த வீடுகள், கிணற்றடி என்பவற்றைச் சுற்றிலும் மாத்திரம்
- சிறிய இடத்தில் கண்ணிவெடிகளை அகற்றிவிட்டு, அங்கு மக்கள் சென்று பாதுகாப்பாக வாழ
முடியும் என்று கூறி,அரசாங்கம் இறுதி நேர மீள்குடியேற்றத்தைச் செய்திருக்கின்றது.

இந்த நிலைமையில் தான்,முள்ளிவாய்க்கால் பகுதிகளில் ஷெல்லுக்கு பெற்றோரைப் பறிகொடுத்து
விட்டு மூத்த சகோதரனின் பராமரிப்பில் வாழ்ந்தசிறுமி நிஷாந்தினி கண்ணிவெடிக்குப்
பலியாகியிருக்கின்றார்.

ஏனோ தானோ என்று உப்புசப்பற்ற காரணங்களைக் காட்டிவிட்டுஇ இவருடைய மரணத்திற்குப் பொறுப்பு
கூறுவதிலிருந்து அரசாங்கம் தப்பிவிட முடியாது.

யுத்தத்தில் சிக்கி உறவுகளின் உயிர்களையும்இ உடைமைகளையும் இழந்து வெறுங்கையுடன்
வெளியேறி மனிக்பாம் முகாமுக்கு வந்த மக்கள் இன்று மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்தாலும்,
இழப்புகளின் தாக்கத்தினால் வெந்து நொந்து போயிருக்கின்றார்கள்.

 அவர்களிடம் இழப்பதற்கென்று உயிரைத் தவிர வேறு எதுவுமே கிடையாது.

 அந்த உயிரையும் பறிக்கத்தக்க வகையில்தான் பூரணமாகக் கண்ணிவெடிகளை அகற்றி, சரியான
முறையில் பாதுகாப்பை உறுதி செய்யாத வகையில் மீள்குடியேற்றத்தை அரசாங்கம் செய்திருக்கின்றது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் மீள்குடியேற்றத்திற்காக,அரசாங்கம் கண்ணிவெடிகளை அகற்றி
ரூடிக்கட்டும் என்று மக்கள் மூன்று வருடங்களாகக் காத்திருந்தார்கள்.

இருந்தும், கண்ணிவெடிகளில் சிக்கி கால்கைகளை இழக்கவும், உயிர்களை இழக்கவும் வேண்டிய
அவலமான வாழ்வுக்குள்ளேயே இடம்பெயர்ந்த மக்களை  அரசாங்கம் தள்ளிவிட்டிருக்கின்றது.

பொறுப்புள்ள அரசாங்கம் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டிருக்கக் கூடாது.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில், நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு
செலவினத்திற்கென பெருந்தொகையான நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வெறும் கையுடன் மீள்குடியேறியுள்ள மக்களின்
உடலுறுப்புக்களையும்,உயிர்களையும் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் மற்றும் வெடிப்பொருட்களில்
இருந்து பாதுகாப்பதற்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் கணிசமான நிதியை
ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இன்னும் அகற்றப்படாமல் கோர யுத்தத்தின் எச்சங்களாகவும் சொச்சங்களாகவும்,வன்னிப்பிரதேசத்தில்
பரவிக்கிடக்கின்ற கண்ணிவெடிகள் மற்றும் வெடிப்பொருட்களினால் மேலும் ஓர் உயிரோ பல
உயிர்களோ காவு கொள்ளப்படாமல் பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் முன்னெச்சரிக்கையோடு
செயற்பட முன்வர வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் எஸ்.வினேத நோகராதலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

http://www.newmannar.com/2012/10/mpvino.html#.UfZkfqfG3ek.facebook

Friday, 12 July 2013

தங்கத்தரை குட்டிமணி மற்றும் 53 விடுதலைப்போராளிகளை நினைவ கூருவோம் !!

எமது தலைவர்கள் தங்கத்தரை குட்டிமணி மற்றும் 53 விடுதலைப்போராளிகளை நினைவ கூருவோம் !!
Posted by TELOadmin on Sunday, June 30, 2013 · Leave a Comment 
Photo: தமிழீழ விடுதலை இயக்கம் (ஜேர்மனி)30வது தேசிய வீரர்கள் தினம் எமது தலைவர்கள் தங்கத்தரை குட்டிமணி மற்றும் 53 விடுதலைப்போராளிகளை நினைவ கூருவோம்
Posted by TELOadmin on Sunday, June 30, 2013 · Leave a Comment 
கறுப்பு யூலை 1983ம்ஆண்டு யூலை மாதம் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்ப்பட்ட எமது தலைவர்கள் தங்கத்தரை குட்டிமணி மற்றும் 53 விடுதலைப்போராளிகளை நினைவ கூருவோம்.

28ம்திகதி யூலைமாதம்  ஜேர்மனியில் ஜரோப்பிய ரெலோவினால் பொது அஞசலி நிகழ்வும் பொதுக் கூட்டமும் ஒழுங்கு செய்ப்பட்டுள்ளது.
இந்த நினைவு தினத்தில் விடுதலை போராளிகள் சமூகவியலாளர்கள் ஆர்வலர்கள் பொது மக்கள் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழீழ விடுதலை இயக்கம் (ஜேர்மனி)
அஞசலி நிகழ்வும் பொதுக் கூட்டமும்
இடம்:Escheln Str 98,47906 Kempen,Germany.
காலம் 28  யூலை 2013 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: பிற்பகல் 2.00 மணி www.telo.org
கறுப்பு யூலை 1983ம்ஆண்டு யூலை மாதம் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்ப்பட்ட எமது தலைவர்கள் தங்கத்தரை குட்டிமணி மற்றும் 53 விடுதலைப்போராளிகளை நினைவ கூருவோம்.

28ம்திகதி யூலைமாதம் ஜேர்மனியில் ஜரோப்பிய ரெலோவினால் பொது அஞசலி நிகழ்வும் பொதுக் கூட்டமும் ஒழுங்கு செய்ப்பட்டுள்ளது.
இந்த நினைவு தினத்தில் விடுதலை போராளிகள் சமூகவியலாளர்கள் ஆர்வலர்கள் பொது மக்கள் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழீழ விடுதலை இயக்கம் (ஜேர்மனி)

அஞசலி நிகழ்வும் பொதுக் கூட்டமும்

இடம்:  Escheln Str 98,47906 Kempen,Germany.
 
காலம் 28 யூலை 2013 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: பிற்பகல் 2.00 மணி

அனைவரின் ஒத்துளைப்பும் தேவை !!

Photo: இச் செயட்பாட்டிக்காக யாவரது ஒத்துழைப்புக்களையும் ஏதிர் பார்க்கின்றேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் !


கிழக்கு மாகாணசபை கலைந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாண சபையினை ஆட்சியமைக்கும். அதற்குரிய காலம் மிகவிரைவில் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

பின்னர் வட, கிழக்கை நாங்கள்தான் ஆட்சி செய்வோம். மக்களின் அபிலாசைகளை துரிதகதியில் முன்னெடுப்போம். இதற்குரிய காலம் கனிந்துள்ளது என வன்னிமாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை கௌரவித்தலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் 80ஆவது அகவை பூர்த்தி விழாவும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற மாபெரும் சக்திக்கு வித்திட்டவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர்கள். அவர் இக்கூட்டமைப்பு வலுப் பெறுவதற்கு அயராது உழைத்தவர். 5 கட்சிகள் ஒன்றிணைந்துதான் இக்கூட்டமைப்பு உருவாகியுள்ளது. மக்களை தேசிய ரீதியாக பலப்படுத்துவதற்கும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதற்கும் இக்கூட்டமைப்புக்குள் ஒற்றுமைதான் அவசியம்.

Photoதற்போது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு அகிம்சைப் போராட்டத்தினை கையிலெடுத்து சாத்வீக ரீதியில் செயற்பட்டு வருகின்றோம். தற்போது 5 தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு ஜனநாயகக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதனூடாக செயற்பட்டு வருகின்றோம்.

கடந்த காலத்தில் நாம் ஆயுதப் போராட்டத்தினை மிகவும் சிறப்பாக முன்னெடுத்தபோது அரசாங்கம் கூறியது 13ஆவது திருத்தத்திற்கு மேலாக 13 பிளஸ் தருகின்றோம், ஆயுதங்களை கைவிடுங்கள் என்று. அரசாங்கத்தின் கருத்தினை நம்பி நாம் செயற்பட்டு ஆயுதங்களைக் கைவிட்டோம். பின்னர் 13ம் இல்லை பிளசுமில்லை. அரசு எம்மை ஏமாற்றிவிட்டு எம்மை அடக்கி ஒடுக்கியது.

அப்போது மேற்கொண்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம் கடைப்பிடிக்கப்படும் எனவும் எதிர்பார்த்தோம். அதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை.

ஒன்றுமையாக செயற்பட்டால்தான் கைச்சாத்திட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினையாவது அமுல்படுத்துவதற்கு அரசிற்கு அழுத்தங்களைக் மேற்கொள்ளலாம்.

தற்போது வட, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்களும் எமது இனத்தின் நிலங்களையும் சூறையாடிக் கொண்டு இருக்கின்றார்கள். அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை உண்டு பண்ணுகின்றார்கள்.

இந்தியா இப்பகுதிகளை ஆக்கிரமித்துவிடும் போன்ற காரணங்களை முன்வைத்து வடக்கில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகள் கண், காது, கால் போன்ற பல அங்கங்களை இழந்து சிறையில் வாடுகின்றார்கள். தினம் தினம் முள்ளிவாய்க்காலில் நடந்த சோகத்தினை நினைந்து நினைந்து சோகக் கண்ணீர் வடித்துக் கொண்டுதான் இன்னும் இன்னும் எம்மினம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

இவையனைத்தினையும் எதிர்த்துப் போராடுவதற்று ஒன்றிணைந்துள்ள 5 தமிழ் கட்சிகளும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். இந்தியாவிலே தமிழ்நாடு எம்பக்கம் உள்ளது. ஏனைய நாடுகளில் புலம் பெயர்ந்துள்ள எம்மக்கள் என்றும் உறுதுணையாகவுள்ளார்கள். அவர்களின் செயல்பாடுகளால் ஜனாதிபதி கூட அந்த நாடுகளுக்கு செல்ல முடியாதுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் ஈழத்திலே இருக்கின்ற எங்கள் மண்ணை நாம் மீட்பதற்காக ஒன்று படவேண்டும்.

இலங்கை அரசாங்கத்திற்கு வடமாகாணசபைத் தேர்தல் ஒரு சவாலாகும். இத்தேர்தல் நிச்சயமாக ஒரு திருப்பத்தினைக் கொண்டு வரும். வடமாகாண சபையினை நிச்சயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும்.

அதுபோல் தற்போது கிழக்கு மாகாண சபையிலுள்ள ஆளும் கட்சியினருக்குள் பாரிய குழப்பங்கள் உருவாகியுள்ளன. நான் நிச்சயமாகக் கூறுகின்றேன் கிழக்கு மாகாணசபை கலைந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாண சபையினை ஆட்சியமைக்கும். அதற்குரிய காலம் மிகவிரைவில் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

பின்னர் வட, கிழக்கை நாங்கள்தான் ஆட்சி செய்வோம். மக்களின் அபிலாசைகளை துரிதகதியில் முன்னெடுப்போம். இதற்குரிய காலம் கனிந்துள்ளது எனக் கூறினார்.
நண்றி !
 


 
டெலோ நியூஸ்


Tuesday, 4 June 2013

நாடு கடந்த தமிழீழ அரசோ அல்லது தமிழ் அமைப்புகளோ இந்தோனேசியாவில் தான் அதிக வேலை பார்க்க வேண்டி உள்ளது !!

இந்தோனேசியாவில் காணாமல் போன ஈழத்தமிழர்கள் தொடர்பில் தகவல் தருமாறு உறவினர்கள் வேண்டுகோள்!
2009 ஈழப் போரின் போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. சில தினங்களுக்கு முன்பு ஈழத்தில் இருந்து குசலக் குமாரி என்ற தாய் இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தனது மகனை மீட்க தமிழகம் வந்துள்ளார் அதன் பின்பு பல அழைப்புகள் வெளிநாட்டில் இருந்து வந்த வண்ணம் உள்ளது.

Photoஇது தொடர்பாக தமிழர் பண்பாட்டு நடுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு :

2009 ஈழப் போரின் போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.சில தினங்களுக்கு முன்பு ஈழத்தில் இருந்து குசலக் குமாரி என்ற தாய் இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தனது மகனை மீட்க தமிழகம் வந்துள்ளார் என்ற செய்தியை வெளியிட்டோம்.

அதன் பின்பு பல அழைப்புகள் வெளிநாட்டில் இருந்து வந்த வண்ணம் உள்ளது. பலரும் தங்கள் உறவுகளை காணவில்லை, அண்ணனை காணவில்லை, தம்பியை காணவில்லை. இந்தோனேசியாவில் கடைசியாக அவனது குரலை கேட்டோம் என்று நமக்கு செய்தியை அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

பல ஈழத் தமிழர்கள் அவுஸ்திரேலியா செல்லும் போது படகு மூழ்கி பலியாகி உள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு இந்தோனேசிய சிறைச்சாலையில் உள்ளனர். சிலர் திறந்தவெளி முகாமில் உள்ளனர்.

சிலர் இரண்டில் இருந்தும் தப்பித்து வெளியே அடையாளம் மறைத்து வாழ்ந்து வருகின்றனர். உலகெங்கும் இருக்கும் ஈழத் தமிழர்கள், தொலைந்து போன தங்கள் உறவை மீட்டுத் தாருங்கள் என நம்மிடம் கேட்பது நெஞ்சை நெகிழ வைக்கிறது. உலகில் நாடு இல்லாத தமிழரை மீட்க யார் தான் முன்வருவார்?

இந்தோனேசியாவில் உள்ள சில தமிழர்கள் அவ்வப்போது நமக்கு உதவ சில செய்திகளை சொல்கிறார்கள். எனினும் ஒருவரை கூட நம்மால் தொடர்பு Photoகொள்ள முடியவில்லை. தமிழினத்தை போல் இவ்வளவு வலியும் வேதனையும் சுமந்த வேறு ஒரு இனம் இல்லை என்றே தோன்றுகிறது.

உண்மையில் நாடு கடந்த தமிழீழ அரசோ அல்லது தமிழ் அமைப்புகளோ இந்தோனேசியாவில் தான் அதிக வேலை பார்க்க வேண்டி உள்ளது. அங்குள்ள எல்லாத் தமிழர்களையும் மீட்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

அதற்கு அவர்கள் அங்கேயே சில காலம் ஒரு அலுவலகத்தை அமைத்தால் தமிழர்களை மீட்க பயனுள்ளதாக அமையும் என்று எண்ணுகிறோம். உலகில் பல்வேறு மூலையில் இருந்து தமிழர்கள் படங்களை அனுப்பி உள்ளனர்.

Photoகாணாமல் போனர்வர்களின் படங்களையும், இந்தோனேசியாவில் தரை இறங்கிய தமிழர்களின் படங்களையும் இணைத்துள்ளோம். இவர்களைப் பற்றி உங்களுக்கு ஏதாவது சிறு தகவல் தெரிந்தாலும் உடனே எங்களை தொடர்பு கொள்ளவும்.

இவர்களைப் பற்றி உங்களுக்கு ஏதாவது சிறு தகவல் தெரிந்தாலும் உடனே எங்களை தொடர்பு கொள்ளவும்.

தமிழர் பண்பாட்டு நடுவம்
மின்னஞ்சல் : -  tamilsculturalcentre@gmail.com 
 
Cell : - 9566224027
Tamilnadu.
 

தமிழர்களுக்கு என்று தனிக்கலாச்சாரம் உண்டு - விந்தன் கனகரத்தினம்

சட்டம் ஒழுங்கு என்பதற்கு அப்பால் தமிழர்களுக்கு என்று தனிக்கலாச்சாரம் உண்டு எனவே அதனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாநகர சபை எதிர்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதன் போது யாழ். மாவட்டத்தில் தற்போது அதிகரித்து வரும் கலாச்சார சீர்கேடுகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டது. அதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சட்டம் ஒழுங்கு என்பதற்கு அப்பால் தமிழர்களுக்கு என்று தனிக்கலாச்சாரம் உண்டு எனவே அதனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாநகர சபை எதிர்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதன் போது யாழ். மாவட்டத்தில் தற்போது அதிகரித்து வரும் கலாச்சார சீர்கேடுகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டது. அதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சட்டம் ஒழுங்கு என்பதற்கு அப்பால் வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கு என்று தனிக் கலாச்சாரம் உண்டு. அதனைப் பாதுகாக்க எல்லோரும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

சட்டத்தில் 18 வயதினைப் பூர்த்தி செய்து கொண்ட ஆண், பெண் இருவரும் தங்களுடைய விருப்பங்களுடன் வெளியிடங்களிலோ அல்லது விடுதிகளில் தங்கினால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை.

எனினும் எமது கலாச்சாரத்தை நாம் மதிக்க வேண்டும். அதனை விடுத்து சட்டத்தின் அடிப்படையில் எமது கலாச்சாரத்தை தவறான முறையில் மாற்றக் கூடாது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக விடுதிகளில் கலாச்சார சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றமை தெரியவந்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.

அத்துடன் இதனை ஒரு தொழிலாக மேற்கொள்ள எமது கலாச்சாரத்தில் இடமில்லை. அத்துடன் யாழ்ப்பாணத்தில் குழு மோதல்கள், போதை வஸ்து பாவனை, மதுப்பாவனை அதிகரிப்பு, களவு, குற்றச்செயல்கள் மற்றும் தற்கொலை என்பன அதிகரித்து காணப்படுகின்றது. இவற்றை முற்றுமுழுதாக நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்
சட்டம் ஒழுங்கு என்பதற்கு அப்பால் வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கு என்று தனிக் கலாச்சாரம் உண்டு. அதனைப் பாதுகாக்க எல்லோரும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

சட்டத்தில் 18 வயதினைப் பூர்த்தி செய்து கொண்ட ஆண், பெண் இருவரும் தங்களுடைய விருப்பங்களுடன் வெளியிடங்களிலோ அல்லது விடுதிகளில் தங்கினால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை.

எனினும் எமது கலாச்சாரத்தை நாம் மதிக்க வேண்டும். அதனை விடுத்து சட்டத்தின் அடிப்படையில் எமது கலாச்சாரத்தை தவறான முறையில் மாற்றக் கூடாது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக விடுதிகளில் கலாச்சார சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றமை தெரியவந்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.

அத்துடன் இதனை ஒரு தொழிலாக மேற்கொள்ள எமது கலாச்சாரத்தில் இடமில்லை. அத்துடன் யாழ்ப்பாணத்தில் குழு மோதல்கள், போதை வஸ்து பாவனை, மதுப்பாவனை அதிகரிப்பு, களவு, குற்றச்செயல்கள் மற்றும் தற்கொலை என்பன அதிகரித்து காணப்படுகின்றது. இவற்றை முற்றுமுழுதாக நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்
 

மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை-இரா.சம்பந்தன்

இந்த நாட்டில் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை.

மக்களின் தீர்ப்பு அடிப்படையில் ஆட்சிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு அவர்கள் கருத்துக்கும் அபிலாஷைகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இதனை தெரிவித்தார்.


அண்மையில் திருகோணமலை சில்வஸ்டார் ஹோட்டலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தலைமையில் திருகோணமலை மாவட்ட வாக்காளர் பதிவும் வட்டாரப்பிரிப்பும் என்னும் பொருள் பற்றி பொது மக்களுடனும் புத்திஜீவிகளுடனும் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இரா. சம்பந்தன் இதனை தெரிவித்தார்.


மக்களுடைய ஜனநாயக உரிமையை பிரதிநிதித்துவப்படுத்துவது மக்களின் வாக்குகளாகும். வாக்கு மூலந்தான் ஆட்சியை அமைப்பது மக்கள் விருப்பம் எதுவொன்று அறிவது மக்களின் வாக்கு மூலந்தான்.


ஜனநாயகமென்பது மக்களின் இறைமையில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கின்றது. இறைமையின் முக்கியமான அம்சம் ஜனநாயகம்.

வடக்கில் கிழக்கில் வாழ்ந்து வந்த தமிழ்மக்கள் 1956ஆம் ஆண்டு முதல் தமது ஜனநாயக உரிமையை ஒரு குறிப்பிட்ட அடிப்படையில் குறிப்பிட்ட கொள்கையை அடிப்படையில் குறிப்பிட்ட கொள்கையை அடிப்படையாகக் கொண்டு அந்த கொள்கையை நிறைவேற்ற தமது வாக்குகளை அளித்து வந்துள்ளார்கள்.


கெளரவத்துடனும் சுயமரியாதையுடனும் தமது பிரதேசங்களில் வாழலாம் என்ற எதிர்பார்ப்பில் தான் மக்கள் தமது வாக்குகளை அளித்து வந்துள்ளார்கள்.
ஆனால் இந்நாட்டிலுள்ள முக்கியமான பிரச்சினையென்னவென்றால் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை.


இதன் காரணமாகவே ஆரம்பத்தில் சாத்வீகப் போராட்டம் நடாத்தப்பட்டது. அதன்பின்பு ஆயுதப் போராட்டம் நடாத்தப்பட்டது.


வாக்குரிமையொன்றின் மூலமே எமது இலக்கை அடைய முடியுமென்பதை புரிந்து கொள்ள வேண்டும். தற்பொழுது வட கிழக்கில் குடியிருக்கும் மக்களின் வாக்குகளை வாக்காளர் இடாப்பில் சேர்த்துக் கொள்ள முழுமுயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் அதற்கு மக்கள் கட்சி அதன் தொண்டர்கள் கூடிய பங்களிப்புச் செய்யவேண்டும்.


தற்பொழுது தத்தமது சொந்த இடங்களில் குடியிருக்கும் மக்களிடம் மக்களைப் பதியக்கூடிய விதத்தில் எல்லோரும் செயற்பட வேண்டும். சில இடங்களில் மக்கள் வாழாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் தமது சொந்த இடங்களில் வாக்கைப் பதிவு செய்ய வாக்களிக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும.


முன்பு வட கிழக்கிலிருந்து இடம் பெயர்ந்த மக்களை அவர்கள் முன்பு வாழ்ந்த இடங்களில் வாக்காளராக பதிவு செய்வதற்குரிய சட்டம அடுத்த மாதம் பாராளுமன்றம் கூடுகிற போது இது பற்றிய சட்டம் கொண்டு வரப்படலாம். விசேடமாக வட மாகாண தேர்தலை மையமாக வைத்து சட்டம் கொண்டு வரப்படவிருக்கின்றது.


இதற்குரிய காரணம் என்னவென்றால் வட மாகாணத்திலிருந்து தமிழர்கள் அல்லாதவர்கள் குடிபெயர்ந்திருக்கிறார்கள் அவர்கள் இப்பொழுது வேறுமாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றார்கள் அவர்கள் ஒரு காலத்தில் வட மாகாணத்தில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தவர்கள் வட மாகாணத்தில் வாழ்ந்தவர்கள் தற்பொழுது வடமாகாணத்தில் பதிவு செய்யும் வகையில் அச்சட்டம் கொண்டு வரப்படவிருக்கின்றது


அவர்கள் அவ்வாறு வடமாகாணத்தில் வாக்களிக்க விரும்பினால் அந்த உரிமையை நாங்கள் மதிக்க வேண்டும். ஆனால் அவர் அதேசமயம் வேறு மாவட்டத்தில் பதிவு செய்யமுடியாது.

என்னவென்றால் எந்தவொரு பிரஜைக்கும் இரண்டு வாக்குரிமை இருக்கமுடியாது


பல்லாயிரக்கணக்கான மக்கள் குடிபெயர்ந்து தமிழ் நாட்டிலுள்ள அகதி முகாம்களில் வாழந்து வருகின்றார்கள் பிறமாவட்டங்களிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.

அவர்களும் வடமாகாணத்தில் வாழ்ந்தவர்கள் அவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. இதனை பரிசீலிக்கப்படவேண்டும் என்றும் சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.

Posted by on Sunday, June 2, 2013 · Leave a Comment 

Thursday, 30 May 2013

புத்தர் சிலை வேண்டாம்; மட்டு.மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பரிப்பு !

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார் கிருஸ்ணபிள்ளை கோ.கருணாகரம் இரா.துரைரெட்னம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா பா.அரியநேத்திரன் சீ.யோகேஸ்வரன்  மா.நடராசா துரைராஜசிங்கம் உட்பட பொதுமக்கள் கிராம அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பொருமளவாளோர் கலந்து கொண்டனர். 



மட்டக்களப்பு மாநகரசபை வரவேற்பு பகுதிக்கு அருகில் புத்தர் சிலையினை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதனை தடுத்து நிறுத்துமாறு கோரியும் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது.

ஊறணி பிரதேச பொதுமக்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர்.

மட்டு.பிள்ளையாரடியில் ஆரம்பமான ஊர்வலம் புத்தர் சிலை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு வரவேற்பு இடத்தை சென்றடைந்தது.

இந்த ஆப்பாட்ட பேரணியில் ஈடுபட்டோர் இந்துக்கள் வாழும் ஊரில் புத்தர் எதற்கு புத்தரின் பெயரால் இன மத சண்டைகளை உருவாக்காதே புத்த பகவானை ஆக்கிரமிப்பு சிலையாக மாற்றாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியும் புத்தர் சிலை வைப்பதற்கு எதிரான கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட மட்டக்களப்பு மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி பிரிகேடியர் சுகத்த திலகரட்ன சிலை நிறுவ மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

எனினும் ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

Saturday, 18 May 2013

மன்னாரில் 1500 சிங்கள குடும்பங்கள் குடியேற்றம் - செல்வம் MP

மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அரசாங்கம் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது 1500 சிங்கள குடும்பங்கள் அங்கு அழைத்து வரப்பட்டு குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்இ டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்  எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன் அரசாங்கம் சிங்கள குடியேற்றங்களை மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

சுமார் 5 ஆயிரம் குடும்பங்களை குடியமர்த்த நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்வுகளை சந்தித்த முசலி பிரதேசத்தில் உள்ள தமிழ் முஸ்ஸிம் மக்கள் இது வரை உரிய முறையில் மீள் குடியேற்றப்படவில்லை.

அவர்கள் காடுகளிலும் தற்காலிக கொட்டில்களிலும் தொடர்ந்தும் அகதி வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் முசலியில் சிங்கள மக்களை குடியமர்த்தும் முகமாக முதற்கட்டமாக 1500 குடும்பங்கள் பஸ்களில் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் இங்கு தற்காலிக கொட்டில்களை அமைக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் மீள் குடியேற்றங்கள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரிவாக ஆராயவுள்ளது.

தமிழ் முஸ்ஸிம் மக்களின் பிரதி நிதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெகு விரைவில் அழைத்து இந்த சிங்கள குடியேற்றம் தொடர்பில் ஆராய்ந்து இக் குடியேற்றத்திற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted by on Saturday, May 18, 2013 · Leave a Comment 

அரசின் யுத்த வெற்றிவிழா தமிழ்மக்களுக்கு இரத்தக் கண்ணீரால் எழுதப்பட்ட துக்க தினம் – ஜனா

யுத்த வெற்றிவிழா இலங்கை அரசைப் பொறுத்தவரை கொண்டாட்ட நிகழ்வாக இருக்கும். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இரத்தக் கண்ணீரால் எழுத்தப்பட்ட ஒரு துக்க தினம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவிக்கிறார்.


யுத்த வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறுவது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு யுத்தமொன்றை உலக யுத்தமாக்கி வெற்றி கொண்டாடி மமதை கொண்ட உலகநாடுகளில் முதலாவதும் இறுதியுமான நாடு இலங்கையாகத்தான் இருக்கும்.

இந்த வெற்றிவிழா இலங்கை அரசசைப் பொறுத்தவரை கொண்டாட்ட நிகழ்வாக இருக்கும். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இரத்தக் கண்ணீரால் எழுதப்பட்ட ஒரு துக்க தினம். 

தமிழ் மக்களைப் பாதுகாக்க யுத்தம் நடத்திய ஸ்ரீலங்கா அரசு கொண்டாடும் யுத்த வெற்றியில், 

அவரால் மீட்கப்பட்ட எந்தத் தமிழ் மக்கள் பங்கு கொள்கிறார்கள் ?

அவ் வெற்றியால் எந்தத் தமிழ் மக்கள் பயனடைந்தார்கள் ? 

பயன்பட்டவர்கயும் பயன்படப்போகின்றவர்களும் கே.பியும். தயா மாஸ்ரரும் மட்டும் தான்.

நீண்ட காலப் போராட்டங்களின் பின் தனிநாடாக பரிணமித்த கிழக்குத் தீமோரோ தென் சூடானோ அந்நாட்டு மக்களுடள் இணைந்து தம் விடுதலை பெற்ற தினத்தை வெற்றி விழாவாக அல்லது வெற்றி மாதமாக கொண்டாடினால் அதற்கு அதற்கு ஒரு பெருமை இருக்கும்.

அதற்கு ஒரு அர்த்தமும் இருக்கும். ஆனால் இலங்கை அரசு கொண்டாடும் இந்த வெற்றி விழாவுக்கோ பெருமையும் இல்லை. அர்த்தமும் இல்லை.

மாறாக சிங்கள பேரினவாதத்தின் ஆதிக்க மனோபாவம் சிறுபான்மை இனங்கள் மீது தம் மேலாதிக்கத்தை திணிக்கும் அகம்பாவமும் மட்டுமே இவ் வெற்றி விழாவின் அர்த்தங்களாகும்.

இந்த யுத்த வெற்றி விழா தொடர்பாக கடந்த காலங்களில் சில அமைச்சரவை அமைச்சர்கள் கூட வ்வளவாக திருப்தியடையாத விதத்தில் தம்கருத்துக்களைக் கூட வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆனால் பொது ஜன ஐக்கிய மக்கள் முன்னணியின் அரசின் வெற்றிக்கான முதலீடு இந்த யுத்த வெற்றி மட்டும் தான். இந்த யுத்த வெற்றி மட்டும் தான் பேரினவாதிகளின் ஆதரவைத் தக்க வைக்கும் பலமான முதலீடு ஆகும்.

இந்த இலட்சணத்தில் நல்லிணக்கம்இ ஏற்படுத்த போகிறதாம் இவ் அரசாங்கம். 

அரசாங்கம் நினைப்பது போல நல்லிணக்கம் என்பது மேலாதிக்கத்தின் மூலம் பேரினவாத ஆக்கிரமிப்பு மூலம் சிறுபான்மையினரின் உணர்வுகளைச் சிதைப்பது மூலம் ஏற்பட்டுவிடாது. ஏற்படுத்தவும் முடியாது.

மாறாக விட்டுக் கொடுப்பு புரிந்துணர்வு சமத்துவம் என்பவற்றின் மூலமே ஏற்படுத்த முடியும். ஆனால் இலங்கை அரசாங்க நடைமுறையில் இத்தகைய செயற்பாடுகள் இல்லாத ஒன்றாகும்.

இல்லாத செயற்பாட்டின் மூலம் எப்படி இனங்களுக்கிடையேயான நல்லணக்கம் ஏற்பட முடியும் ? 

போர் வெற்றி பேரினவாதிகளைத் திருப்திப்படுத்தி பேரினவாதிகளின் வாக்கு வங்கிகளைத் தக்கவைக்கும் இந்த அரசு இந்த வருடம் மட்டுமல்ல இனித் தொடர்ந்து வரும் வருடங்களிலும் வெற்றி விழாவினைக் கொண்டாடிப் பேரினவாதிகளையும் யுத்த மேலாதிக்கத்தினையும் நினைவு படுத்துமேயொழிய இன நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் காணாத தூரத்துக்குத் தொலைக்கும் நடவடிக்கைகளாகவே அமையும்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை, 

இன நல்லிணக்கத்துக்கும் ஒருமைப்பாட்டுக்கும் 

தமிழ் மக்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நீட்டும் கரங்களை உதறித் தள்ளி பேரினவாதிகளின் ஆதிக்கக் குரலுக்குப் பின்னால் முகம் காட்டும் இந்த அரசிடமும் அரச பிரமுகர்களிடமும் இருந்து எந்த நல்லிணக்கத்தை நாம் எதிர்பார்ப்பது ?

அந்த அளவுக்கு நம் தமிழ்த் தேசியமும் தமிழ் மக்களும் கிள்ளுக்கீரையா ?

அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் தமிழ் தேசியக் கூடடமைப்பை தம் பிரதிநிதிகளாக தெரிவு செய்த தமிழ் மக்களும் பேரினவாதிகளின் பார்வையில் பகடைக்காய்களா? 

வெற்றி விழாவின் விளையு காலத்தின் கையில் என்பது மட்டும்தான் இன்று நிஜம்! இதற்கு மேல் எனக்கு ஒரு வார்த்தை இல்லை வெற்றிவிழா தொடர்பாக!

Posted by on Saturday, May 18, 2013 · Leave a Comment 

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் இம்மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம்:- சிவாஜிலிங்கம்

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன.

இதற்கான பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ரெலோவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளுக்கிடையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். கட்சிகளின் நடைமுறைகள் அமைப்பு விதிகள் தயாரிக்கப்பட்டு ஏனைய கட்சிகளிடமும் ஆலோசனைகள் கருத்துக்கள் பெறப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்படும்.

இலங்கை தமிழரசுக்கட்சி எங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வந்துள்ளமை நல்லதொரு விடயமாகும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் நியமிக்கப்படவுள்ள குழுவில் தமிழரசுக்கட்சியை சேர்ந்த எட்டுப்பேரும் அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்களும் ரெலோ அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருவரும் மற்றும் அக்கட்சியின் எம்.பி.க்களும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள்.

இதனைவிட எட்டு பேருக்கு மேலதிகமாக தாங்கள் இன்னும் சிலரை நியமிக்க வேண்டுமென்றும் அந்தவகையில் அம்பாறை திருகோணமலை வன்னி போன்ற மாவட்டங்களில் மேலும் சில பிரதிநிதிகளை நியமிக்க விரும்புவதாகவும் பெண் பிரதிநிதியொருவரையும் நியமிக்க வேண்டுமென்றும் தமிழரசுக்கட்சியின் தலைவர் சம்பந்தன் தெரிவித்த கருத்தை நாம் ஏகமனதாக ஏற்றுக்கொண்டோம்.

அதுமாத்திரமன்றி அமைக்கப்படும் குழுவில் 25 பிரதிநிதிகள் பரந்துபட்ட அளவில் ஏனைய கட்சிகள் உள்ளடங்களாக குறிப்பாக கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளும் தமது பிரதிநிதிகளை நியமிக்க வாய்ப்பளிக்கும் விதத்தில் பரந்துபட்ட பிரதிநிதித்துவத்தை நாம் ஏற்றுக்கொண்டோம் என்று தெரிவித்தார்.


Posted by on Saturday, May 18, 2013 · Leave a Comment 

Sunday, 12 May 2013

கூட்டமைப்பை பதிவுசெய்யும் முனைப்பில் முன்னேற்றம் இல்லை !


தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவுசெய்வது தொடர்பில் மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய ஜோசப் ராயப்பு தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
இந்தநிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவுசெய்யவேண்டும் என்று தாம் வலியுறுத்தவில்லை என்று குறிப்பிட்ட ஆயர், எனினும் வடக்கு மாகாணசபைத்தேர்தலில் ஐந்துக்கட்சிகளும் ஒன்றுமையுடன் செயற்படவேண்டும் என்று கோரியுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.




கூட்டமைப்பை பதிவுசெய்வது தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுக்கள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன், தமது கூட்டமைப்பு கட்சிகள் மத்தியில் பிளவுகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்பை பதிவுசெய்வது தொடர்பி;ல் கலந்துரையாடல்கள் தொடரும்; என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted by on Sunday, May 12, 2013 · Leave a Comment 

தலைவர் சிறிசபாரத்தினத்தின் 27ஆவது ஆண்டு நினைவாஞ்சலி ! சுவிஸ்

தமிழீழ விடுதலை இயக்க தலைவர் சிறிசபாரத்தினத்தின் 27ஆவது ஆண்டு நினைவாஞ்சலி நிகழ்ச்சி எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை காலை 10மணிக்கு Eusebiusho Sall, 2540  Granchen, swiss, என்னுமிடத்தில் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தமிழீழ விடுதலை இயக்க (ரெலோ) சுவிஸ் கிளை ஏற்பாடு செய்துள்ளது.


Tuesday, 7 May 2013

சிறி சபாரத்தினம் யார் ?

86 மே 6ம் தேதி, ஈழ விடுதலயை வைத்திருந்த அந்த இதயம் தோட்டக்களால் சுக்குநூறாக சிதறடிக்கபட்டது, ஒன்றல்ல இரண்டல்ல, புலிகள் நிராயுதாபாணியாக நின்ற அந்த போராளியின் உடலை 20க்கும் அதிகமான குண்டுகள் சல்லடையாக்கின, சுட்டது எதிர்த்த சிங்களவன் அல்ல , தன் ரத்தம் பகிர்ந்த சகோதரன். தவறே செய்யாத சபாவுக்கு இந்த தண்டனை, அதற்க்கு என்ன காரணம், எந்த தரப்பில் இருந்து சொல்லபட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.அன்று சரிந்து விழுந்தது சபாவின் சடலம் மட்டுமல்ல, ஈழம் என்கிற ஒரு தேசத்தின் நம்பிக்கை.

Photo: சிறி சபாரத்தினம் யார் ?

1986 மே 6ம் தேதி, ஈழ விடுதலயை வைத்திருந்த அந்த இதயம் தோட்டக்களால் சுக்குநூறாக சிதறடிக்கபட்டது, ஒன்றல்ல இரண்டல்ல, புலிகள்  நிராயுதாபாணியாக நின்ற அந்த போராளியின் உடலை 20க்கும் அதிகமான குண்டுகள் சல்லடையாக்கின, சுட்டது எதிர்த்த சிங்களவன் அல்ல , தன் ரத்தம் பகிர்ந்த சகோதரன். தவறே செய்யாத  சபாவுக்கு இந்த தண்டனை, அதற்க்கு என்ன காரணம், எந்த தரப்பில் இருந்து சொல்லபட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.அன்று சரிந்து விழுந்தது சபாவின் சடலம் மட்டுமல்ல, ஈழம் என்கிற ஒரு தேசத்தின் நம்பிக்கை.

நடராஜன் தங்கதுரை மற்றும் யோகசந்திரன்(குட்டிமணி) என்பவரால் உருவாக்கபட்ட ஒரு சிறு குழு தான் பின்னாளில் தமிழிழ விடுதலை இயக்கமாக(டெலொ) மாறியது.அப்பொழுது அவர்களுடன் களத்தில் தளபதியாக செயல்பட்டவர் சிறி சபாரத்தினம். இந்தியாவிற்க்கு தப்ப முயன்ற தலைவர்கள் இருவரும் இலங்கை ராணுவத்தால் கைது செய்யபட, இடைக்கால தலைவராக பொறுப்பேற்று இயகத்தை வழி நடத்தினார் சபா. குட்டிமணியும், தங்கதுரையும் சிறையில் கொடுராமக கொலை செய்யபட, டெலோவின் தலைவரானார் சிறி சபாரத்தினம்.


தலைவர் என்று ஆணையிடுபவரல்ல சபா, களத்தில் இறங்கி போராடுபவர். இன்றும் சபாவை அப்படி தான் ஈழ தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் நினைவு கூறுகின்றனர்.ஈழ விடுதலை இயக்கங்களும் அனைத்தும் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்க, இந்திராவும் போராளி இயக்கங்களுக்கு தாரளமாகவே உதவியளித்தார்.

டெலோ, இராஸ்,விடுதலை புலிகள் என பல இயக்கங்களாக சிதறிகிடந்தவற்றை ஒன்றாக இணைத்து ENLF ஆக உருவாக்கபட்டது.அனைத்து போராளிகளும் ஒன்றாக இணைந்து தனி ஈழத்திற்க்காக் போராடுவது என உறுதி செய்யபட்டது.

கலைஞர் டேலொவிர்க்கு தன் ஆதரவை தெரிவித்திருந்தார். சபா, கலைஞரின் அன்பிற்க்குரியவரானார். கலைஞர் திரைக்கதை எழுதிய ‘பாலைவன் ரோஜாக்கள்’ படத்தில் கதநாயகனின் பெயர் சபாரத்தினம்.



தனி ஈழத்தை குறிக்கோலாக கொண்டு மற்ற இயக்கங்கள் இந்தியாவின் உதவியுடன் செயல்பட்டுக்கொண்டிருந்தன, அவர்களுக்கு தேவை தனி ஈழம்.

இயக்கத்துனுள் கருத்து வேறுபாடுகள் முற்றின,எந்த இயக்கம் பெரியது என்ற மிக மோசமான ஃமாபியா அரசியல் ஈழ விடுதலை இயக்கத்தினுள் புகுந்தது. விடுதலை புலிகளால் பல  நபர்கள் கொலை செய்ய்பட்டனர், அந்த கொலைகள் மற்ற இயக்க்ங்கள் தான் செய்கின்றன என தமக்குள் சந்தேக பட தொடங்கினர்.

அந்த வழியில், புலிகள் தங்கள் சுயலாபத்திற்காக ‘துரோகி’ பட்டத்தை சபாவிர்க்கு கொடுத்தனர்.

‘துரோகி’ என்ற வார்த்தை வந்துவிட்டால் விடுதலை புலிகள் அதற்கு ஒரே தண்டனையாக வைத்திருத்து மரணத்தை.

சபாவிற்க்கு டார்கெட் வைக்கபட்டது. அப்பொழுது சபாவிற்க்கு யாரும் அடைக்கலம் தர கூடதெனவும், சபாவை உடனடியாக் பிடித்து கொடுக்குமாறும் மக்களுக்கு விடுதலை புலிகள் ஆணையிட்டனர். சபா என்ன செய்வதறியாமல் மறைந்து வாழ்ந்து வந்தார்.

தமிழகத்தில் அப்பொழுது நடைபெற்ற டெசோ மாநாட்டின் போது, சபாவின் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்த கலைஞர், விடுதலை புலிகள் இயக்கத்திடம் தன் சார்பில் சபாவை ஒன்றும் செய்ய வேண்டாம் என கோரினார், புலிகளும் அதற்க்கு செவி சாய்ப்பது போல் நடித்தனர். அவர்களின் நோக்கம் டெசொவை கெடுப்பதாகவே இருந்தது. ஈழத்துக்காக யார் போராடினாலும் பிரபாகரன் அதை கெடுக்கும் மனநிலையிலும் அவர்களை கொள்ளும் மனநிலையிலும் எப்பொழுதும் இருந்தார் என்பதற்கு இந்த சம்பவம் ஒன்றே சாட்சி.  

கஞ்சா காடு ஒன்றில் சமாதானத்திர்க்கு வந்த சபாரத்தினத்தை பிரபாகரனால் அனுப்பிவைக்கப்பட்ட புலிகள் இயக்கத்தை சேர்ந்த கிட்டு, மண்டியிட்ட சபாரத்தினம் எவ்வளவும் கெஞ்சியும் அவருக்கு மரணத்தை பரிசாகளித்தார். போராளி என ஆனபோதே சபாவின் மரணம் உறுதியானது தான் என்றாலும்  தன் சகோதரனால் கொல்லபட்டார்.
 
சபாரத்தினம் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் என்றோ ஈழம் கிடைத்திருக்கும் . சபா இல்லாததால் ஈழம் கனவாகவே போனது ஈழ ஈழ மக்களுக்கு. .நடராஜன் தங்கதுரை மற்றும் யோகசந்திரன்(குட்டிமணி) என்பவரால் உருவாக்கபட்ட ஒரு சிறு குழு தான் பின்னாளில் தமிழிழ விடுதலை இயக்கமாக(டெலொ) மாறியது.அப்பொழுது அவர்களுடன் களத்தில் தளபதியாக செயல்பட்டவர் சிறி சபாரத்தினம். இந்தியாவிற்க்கு தப்ப முயன்ற தலைவர்கள் இருவரும் இலங்கை ராணுவத்தால் கைது செய்யபட, இடைக்கால தலைவராக பொறுப்பேற்று இயகத்தை வழி நடத்தினார் சபா. குட்டிமணியும், தங்கதுரையும் சிறையில் கொடுராமக கொலை செய்யபட, டெலோவின் தலைவரானார் சிறி சபாரத்தினம்.


தலைவர் என்று ஆணையிடுபவரல்ல சபா, களத்தில் இறங்கி போராடுபவர். இன்றும் சபாவை அப்படி தான் ஈழ தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் நினைவு கூறுகின்றனர்.ஈழ விடுதலை இயக்கங்களும் அனைத்தும் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்க, இந்திராவும் போராளி இயக்கங்களுக்கு தாரளமாகவே உதவியளித்தார்.

டெலோ, இராஸ்,விடுதலை புலிகள் என பல இயக்கங்களாக சிதறிகிடந்தவற்றை ஒன்றாக இணைத்து ENLF ஆக உருவாக்கபட்டது.அனைத்து போராளிகளும் ஒன்றாக இணைந்து தனி ஈழத்திற்க்காக் போராடுவது என உறுதி செய்யபட்டது.

கலைஞர் டேலொவிர்க்கு தன் ஆதரவை தெரிவித்திருந்தார். சபா, கலைஞரின் அன்பிற்க்குரியவரானார். கலைஞர் திரைக்கதை எழுதிய ‘பாலைவன் ரோஜாக்கள்’ படத்தில் கதநாயகனின் பெயர் சபாரத்தினம்.



தனி ஈழத்தை குறிக்கோலாக கொண்டு மற்ற இயக்கங்கள் இந்தியாவின் உதவியுடன் செயல்பட்டுக்கொண்டிருந்தன, அவர்களுக்கு தேவை தனி ஈழம்.

இயக்கத்துனுள் கருத்து வேறுபாடுகள் முற்றின,எந்த இயக்கம் பெரியது என்ற மிக மோசமான ஃமாபியா அரசியல் ஈழ விடுதலை இயக்கத்தினுள் புகுந்தது. விடுதலை புலிகளால் பல நபர்கள் கொலை செய்ய்பட்டனர், அந்த கொலைகள் மற்ற இயக்க்ங்கள் தான் செய்கின்றன என தமக்குள் சந்தேக பட தொடங்கினர்.

அந்த வழியில், புலிகள் தங்கள் சுயலாபத்திற்காக ‘துரோகி’ பட்டத்தை சபாவிர்க்கு கொடுத்தனர்.

‘துரோகி’ என்ற வார்த்தை வந்துவிட்டால் விடுதலை புலிகள் அதற்கு ஒரே தண்டனையாக வைத்திருத்து மரணத்தை.

சபாவிற்க்கு டார்கெட் வைக்கபட்டது. அப்பொழுது சபாவிற்க்கு யாரும் அடைக்கலம் தர கூடதெனவும், சபாவை உடனடியாக் பிடித்து கொடுக்குமாறும் மக்களுக்கு விடுதலை புலிகள் ஆணையிட்டனர். சபா என்ன செய்வதறியாமல் மறைந்து வாழ்ந்து வந்தார்.

தமிழகத்தில் அப்பொழுது நடைபெற்ற டெசோ மாநாட்டின் போது, சபாவின் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்த கலைஞர், விடுதலை புலிகள் இயக்கத்திடம் தன் சார்பில் சபாவை ஒன்றும் செய்ய வேண்டாம் என கோரினார், புலிகளும் அதற்க்கு செவி சாய்ப்பது போல் நடித்தனர். அவர்களின் நோக்கம் டெசொவை கெடுப்பதாகவே இருந்தது. ஈழத்துக்காக யார் போராடினாலும் பிரபாகரன் அதை கெடுக்கும் மனநிலையிலும் அவர்களை கொள்ளும் மனநிலையிலும் எப்பொழுதும் இருந்தார் என்பதற்கு இந்த சம்பவம் ஒன்றே சாட்சி.

கஞ்சா காடு ஒன்றில் சமாதானத்திர்க்கு வந்த சபாரத்தினத்தை பிரபாகரனால் அனுப்பிவைக்கப்பட்ட புலிகள் இயக்கத்தை சேர்ந்த கிட்டு, மண்டியிட்ட சபாரத்தினம் எவ்வளவும் கெஞ்சியும் அவருக்கு மரணத்தை பரிசாகளித்தார். போராளி என ஆனபோதே சபாவின் மரணம் உறுதியானது தான் என்றாலும் தன் சகோதரனால் கொல்லபட்டார்.

சபாரத்தினம் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் என்றோ ஈழம் கிடைத்திருக்கும் . சபா இல்லாததால் ஈழம் கனவாகவே போனது ஈழ ஈழ மக்களுக்கு. .