யுத்த
வெற்றிவிழா இலங்கை அரசைப் பொறுத்தவரை கொண்டாட்ட நிகழ்வாக இருக்கும். ஆனால்
ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இரத்தக் கண்ணீரால் எழுத்தப்பட்ட ஒரு துக்க
தினம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவிக்கிறார்.
யுத்த வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறுவது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு யுத்தமொன்றை உலக யுத்தமாக்கி வெற்றி கொண்டாடி மமதை கொண்ட
உலகநாடுகளில் முதலாவதும் இறுதியுமான நாடு இலங்கையாகத்தான் இருக்கும்.
இந்த
வெற்றிவிழா இலங்கை அரசசைப் பொறுத்தவரை கொண்டாட்ட நிகழ்வாக இருக்கும். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இரத்தக் கண்ணீரால் எழுதப்பட்ட ஒரு
துக்க தினம்.
தமிழ் மக்களைப் பாதுகாக்க யுத்தம் நடத்திய ஸ்ரீலங்கா அரசு
கொண்டாடும் யுத்த வெற்றியில்,
அவரால் மீட்கப்பட்ட எந்தத் தமிழ் மக்கள் பங்கு
கொள்கிறார்கள் ?
அவ் வெற்றியால் எந்தத் தமிழ் மக்கள் பயனடைந்தார்கள் ?
பயன்பட்டவர்கயும்
பயன்படப்போகின்றவர்களும் கே.பியும். தயா மாஸ்ரரும் மட்டும் தான்.
நீண்ட காலப் போராட்டங்களின் பின் தனிநாடாக பரிணமித்த கிழக்குத் தீமோரோ
தென் சூடானோ அந்நாட்டு மக்களுடள் இணைந்து தம் விடுதலை பெற்ற தினத்தை வெற்றி
விழாவாக அல்லது வெற்றி மாதமாக கொண்டாடினால் அதற்கு அதற்கு ஒரு பெருமை
இருக்கும்.
அதற்கு ஒரு அர்த்தமும் இருக்கும். ஆனால் இலங்கை அரசு கொண்டாடும் இந்த வெற்றி விழாவுக்கோ பெருமையும் இல்லை. அர்த்தமும் இல்லை.
மாறாக சிங்கள பேரினவாதத்தின் ஆதிக்க மனோபாவம் சிறுபான்மை இனங்கள் மீது
தம் மேலாதிக்கத்தை திணிக்கும் அகம்பாவமும் மட்டுமே இவ் வெற்றி விழாவின்
அர்த்தங்களாகும்.
இந்த யுத்த வெற்றி விழா தொடர்பாக கடந்த காலங்களில் சில அமைச்சரவை
அமைச்சர்கள் கூட வ்வளவாக திருப்தியடையாத விதத்தில் தம்கருத்துக்களைக் கூட
வெளிப்படுத்தியிருந்தனர்.
ஆனால் பொது ஜன ஐக்கிய மக்கள் முன்னணியின் அரசின் வெற்றிக்கான முதலீடு
இந்த யுத்த வெற்றி மட்டும் தான். இந்த யுத்த வெற்றி மட்டும் தான்
பேரினவாதிகளின் ஆதரவைத் தக்க வைக்கும் பலமான முதலீடு ஆகும்.
இந்த இலட்சணத்தில் நல்லிணக்கம்இ ஏற்படுத்த போகிறதாம் இவ் அரசாங்கம்.
அரசாங்கம் நினைப்பது போல நல்லிணக்கம் என்பது மேலாதிக்கத்தின் மூலம்
பேரினவாத ஆக்கிரமிப்பு மூலம் சிறுபான்மையினரின் உணர்வுகளைச் சிதைப்பது
மூலம் ஏற்பட்டுவிடாது. ஏற்படுத்தவும் முடியாது.
மாறாக விட்டுக் கொடுப்பு புரிந்துணர்வு சமத்துவம் என்பவற்றின் மூலமே
ஏற்படுத்த முடியும். ஆனால் இலங்கை அரசாங்க நடைமுறையில் இத்தகைய
செயற்பாடுகள் இல்லாத ஒன்றாகும்.
இல்லாத செயற்பாட்டின் மூலம் எப்படி இனங்களுக்கிடையேயான நல்லணக்கம் ஏற்பட
முடியும் ?
போர் வெற்றி பேரினவாதிகளைத் திருப்திப்படுத்தி பேரினவாதிகளின்
வாக்கு வங்கிகளைத் தக்கவைக்கும் இந்த அரசு இந்த வருடம் மட்டுமல்ல இனித்
தொடர்ந்து வரும் வருடங்களிலும் வெற்றி விழாவினைக் கொண்டாடிப்
பேரினவாதிகளையும் யுத்த மேலாதிக்கத்தினையும் நினைவு படுத்துமேயொழிய இன
நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் காணாத தூரத்துக்குத் தொலைக்கும்
நடவடிக்கைகளாகவே அமையும்.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை,
இன நல்லிணக்கத்துக்கும் ஒருமைப்பாட்டுக்கும்
தமிழ் மக்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நீட்டும் கரங்களை உதறித்
தள்ளி பேரினவாதிகளின் ஆதிக்கக் குரலுக்குப் பின்னால் முகம்
காட்டும் இந்த அரசிடமும் அரச பிரமுகர்களிடமும் இருந்து எந்த நல்லிணக்கத்தை
நாம் எதிர்பார்ப்பது ?
அந்த அளவுக்கு நம் தமிழ்த் தேசியமும் தமிழ் மக்களும்
கிள்ளுக்கீரையா ?
அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் தமிழ் தேசியக்
கூடடமைப்பை தம் பிரதிநிதிகளாக தெரிவு செய்த தமிழ் மக்களும் பேரினவாதிகளின்
பார்வையில் பகடைக்காய்களா?
வெற்றி விழாவின் விளையு காலத்தின் கையில் என்பது
மட்டும்தான் இன்று நிஜம்! இதற்கு மேல் எனக்கு ஒரு வார்த்தை இல்லை
வெற்றிவிழா தொடர்பாக!
Posted by TELOMedia on Saturday, May 18, 2013 · Leave a Comment
No comments:
Post a Comment