Thursday, 20 December 2012
இலங்கையில் கொழும்பு அருகே உள்ள மாத்தளையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றின் அருகே, ராட்சத சவக்குழி கண்டிபிடிக்கப் பட்டுள்ளது !
இலங்கையில் கொழும்பு அருகே உள்ள மாத்தளையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றின் அருகே, ராட்சத சவக்குழி கண்டிபிடிக்கப் பட்டுள்ளது.
இலங்கையில் தலைநகர் கொழும்பில் இருந்து 142 கிமீ தொலைவில் உள்ள மாத்தளையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றின் அருகே, கண்டிபிடிக்கப்பட்டுள்ள சவக்குழியில் ஏராளமான எலும்புக் கூடுகளும் கண்டெடுக்கப் பட்டுள்ளது !
1,350 சதுர அடியில் அமைந்துள்ள அந்த சவக்குழியைத் தொடர்ந்து தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதை காண ஏராளமான மக்கள் அங்கு குவிந்துள்ளனர்.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிகட்டப் போரின் போது லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரகணக்கானோர் காணாமல் போய்விட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தச் சவக்குழி, போரில் மரணமடைந்த தமிழர்களின் எலும்புக் கூடுகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.
ஆனால், கடந்த 1989ம் ஆண்டு காவல்துறை கொன்று குவித்த 'ஜனதா விமுக்தி பெரமுனா' இயக்கத்தின் சிங்கள போராளிகளின் எலும்புக் கூடுகளாக இருக்கலாம் என்றும் ஒரு சிலர் சந்தேகிக்கின்றனர்.
இந்த எலும்புக் கூடுகள் குறித்து விசாரணை நடத்தப் பட வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. மருத்துவமனை அருகே எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப் பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நண்றி; http://www.inneram.com/news/srilanka-news/skeletons-found-near-the-hospital-7414.html
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment