[ வெள்ளிக்கிழமை, 21 டிசெம்பர் 2012, 05:46.42 AM GMT ]
இலங்கைத் தீவிலும் இதே போன்ற நிலைதான் தோன்றியுள்ளது. தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் பொதுவான பிரச்சனைகள் பல உள்ளன. அவற்றுக்காக அவர்கள் இணைந்து போராடுகின்ற சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.
இதற்கான காரணங்களை நாம் ஆராய முற்படுகின்ற போது அவை நீண்ட விவாதங்களுக்குரிய கருப்பொருளாக மாறிவிடலாம் என்ற அச்சம் எம்மை வாட்டுகின்றது.
மறுபக்கத்தில் நாம் மேலே குறிப்பிட்ட மூன்று இனத்தவர்களுக்கும் அவர்கள் இனம் சார்ந்த பிரச்சனைகள் பல உள்ளன. அவற்றிலிருந்து விடுபடுவதற்கான போராட்டங்களை அவர்கள் நடத்திய வண்ணமே உள்ளார்கள்.
இலங்கையில் தமிழர்களுக்குத்தான் பிரச்சனைகள் இருந்தன என்ற காலம் போய் தற்போது தென்னிலங்கையில் அரசாங்கத்தில் இருப்பவர்களுக்;கும் பல்வேறு நிர்வாகத் துறைகள் சார்ந்த பீடங்களில் உள்ளவர்களுக்கு முறுகல் நிலை தோன்றி தற்போது அவை நன்றாகவே “பழுத்து விட்டன”.
நீதித்துறையின் காவலர் என்று வர்ணிக்கப்படுகின்ற பிரதம நீதியரசருக்கு எதிராக அரசியல்வாதிகளின் காடைத்தனமிக்க தாக்குதல்கள் நடத்தப்படுகின்ற போது, அவற்றுக்கெதிராக நாடுமுழுவதும் உள்ள தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் இனங்களைச் சார்ந்த சட்டத்தரணிகள் பகிரங்கமாகவே ஆர்ப்பாட்டங்களை நடத்தி பிரதம நீதியரசருக்கு தங்கள் ஆதரவை காட்டும் அதேவேளை அரசுக்கெதிரான கோசங்களையும் வைக்கின்றார்கள்.
இதைப்போலவே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இராணுவக் கொடியவர்களால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைச் சிறைக்கூடங்களில் அடைக்கப்படுகின்ற போது, அவர்களின் கைதுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மாணவர்கள் மட்டுமல்ல சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களும் ஆர்ப்பாட்டங்களை நாடு முழுதும் நடத்தியுள்ளார்கள்.
ஆனால் இவ்வாறான கூட்டான போராட்டங்களை கண்டுவிட்டு அரசாங்கம் மௌனமாக இருந்து விடும் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது. இவ்வாறான ஒருமித்து குரல்களை அடக்கி விடுவதற்காக இனவாதத்தை மீண்டும் அரசாங்கம் பிரயோகிக்க முயலும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி மீண்டும் இனங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்த முயலும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில்தான் பொது எதிரியான அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்துவதற்கு நியாயங்களை விரும்பும் சக்திகள் ஒன்று சேர வேண்டும்.
அண்மைக்காலங்களில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னா போன்ற தலைவர்கள் கூறிவருவது போல, பொது எதிரிக்கு எதிரான போராட்டங்களில் இலங்கையில் வாழும் மூவின மக்களும் ஒன்றுபடுவார்களேயானால் அங்கு இனங்கள் சார்ந்த பிரச்சினைகள் நீங்குவதற்கும் இனவாதிகளின் குரல்கள் அடங்குவதற்கு சாதகமான ஒரு நிலை தோன்றலாம் என்றே நாம் நம்புகின்றோம்.
நண்றிகள்;
கதிரோட்டம்: கனடா உதயன்
http://news.lankasri.com/show-RUmqzCRVNVlr4.html
No comments:
Post a Comment