முல்லைத்தீவு
மாவட்டத்தில் கரைவலை பாடுகள் அனைத்தும் சிங்கள மீனவர்களால்
அபகரிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட கரைவலை சம்மாட்டிகள் சங்கம் முழுமையாக
சிங்கள மீனவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
1965ஆம் ஆண்டு தொடக்கம் 1984ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைவலை பாடுகள் 12 இருந்தன. இதில் ஒன்று மட்டுமே சிங்கள கடற் றொழிலாளருக்குச் சொந்தமானதாகும். ஏனை 11 பாடுகளும் தமிழர்களுடையது.
எனினும் 1984ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தின்
எல்லைக்கிராமங்களிலிருந்து தமி ழர்கள் வெளியேறிய பின்னர் அனைத்து
கரைவலைப்பாடுகளும் சிங்கள மீனவர்களால் அபகரிக்கப்பட்டு அவற்றில் அவர்கள்
தொழில் செய்துவந்தனர்.
இந்நிலையில் யுத்தத்தின் பின்னர் எல்லைக்கிராமங்களில் குடியேறிய தமிழ் மக்கள் தமது பாடுகளை தம்மிடம் மீளவும் ஒப்படைக்குமாறு கேட்டிருந்த நிலையில் அவை மீளவும் கையளிக்கப்படாமல் சிங்கள மீனவர்களுக்கு அமைச்சர்கள் மற்றும் கடற்படையினரால், தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டு, 12ஆக இருந்த பாடுகள் 18ஆக அதிகரிக்கப்பட்டதுடன் மிகுந்த போராட்டத்தின் பின்னர் 3பாடுகள் மட்டும் தமிழர்களுக்கு வழங்கப்பட்டது. ஏனைய தமிழ் மீனவர்கள் மிகுந்த வாழ்வாதார நெருக்கடியுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட கரைவலை சம்மாட்டிகள் சங்கம் கடந்த வியாழக் கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அங்கத்துவம் பெறும் அனைவரும் சிங்கள மீனவர்களாக இருக்கின்றனர்.
குறித்த கரைவலை சம்மாட்டிகள் சங்கம் மிக நீண்டகாலம் தமிழர்களின் ஆட்சியில் இரு ந்த நிலையில்
யுத்தத்தின் பின்னர் வளமும், அதிகாரமும் சிங்கள
மீனவர்களிடம் பறித்து க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் நிர்க்கதி
நிலையில் விடப்பட்டுள்ளனர்.
Posted by TELOJAFFNA on Sunday, April 28, 2013 · Leave a Comment
No comments:
Post a Comment