Tuesday, 10 April 2012

TELO : ExTELO !! சகோதரத்துக்கு ஒரு கடிதம் (03)

அன்புள்ளவர்களே ! 
 முன்னாள், இன்னாள் போராளிகள் பற்றிப் பேசாதது மகாநாடு சம்பந்தப்பட்டவர்களின் மிகப்பெரிய விளக்கக் குறைபாடு ! இன்னும், எங்களின் சக உறுப்பினர்கள் ஈனத்தனமாக கொல்லப்பட்டு, எங்கள் போராட்டம் சிதறடிக்கப்பட்டபோது எம்மில் பலர் மனநோயளிகளாயினர். கட்டுப்பாடிண்றி, தான்தோண்றித்தனமான செயல்ப்பாடுகளில் வெறித்தனமாக ஈடுபட்டனர்,  பலர் போதைகளுக்கு அடிமையாகி பேதைகளாயினர். இதனால் சமூகப் பொது நீரோட்டத்தில் இன்றுவரை கலந்துகொள்ள முடியாமல் விரக்தியும் விம்மலுமாக வருடங்கள் கழிய வயசுகள் உயர்ந்த்தே தவிர தமிழுக்கும் எங்களுக்கும் வருத்தங்கள் தீரவில்லை.
மேலும், எங்களுக்கு என்று எந்தத் தொழில் முயற்சியும் இல்லை! ஏன் என்றால் எங்களுக்கு எந்தத் தொழிலும் தெரியவில்லை ! அவை பற்றிய எந்தப் பயிற்சிகளோ அனுபவங்களோ கிடையாது. நாங்கள் இழி நிலையின் இறுதிப்பகுதியில் இருக்கின்றோம் ! இன்று எங்களில் பலருக்கு குழந்தைகள் இருக்கிறார்கள் ! அவர்களின் கல்வி, பொருளாதாரம், எதிர்காலம் என்று நினைக்கும் போது அடி வயிறு கலங்கிப்போகிறது ! இந்த நிலையிலும் ஏன் எங்களின் மகாநாடு எங்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை ? ஆறு தீர்மானங்களை நிறைவேற்றிய உங்களுக்கு ஏன் ஏழாவதாக முன்னாள், இன்னாள் போராளிகளின் புனர் வாழ்வு மற்றும் புனர் நிர்மானங்கள் பற்றி தீர்மானங்கள் நிறைவேற்ற முடியவில்லை ? சரி, எங்களை விடுங்கள் எங்களின் குழந்தைகள், வழரும் சந்ததிகள், அவர்களின் கல்வி, தொழில், தொழில்நுட்ப பயிற்சிகள், வேலைவாய்ப்புகள் இவைபற்றி  ஏன் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து செயல்ப்படக் கூடாது ? 

எங்களாலும் எங்கள் மக்களாலும் தேவையான எல்லத் திறமையும், தகுதியும் உங்கவர்களாக அங்கிகரிக்கப்பட்டு, பாராளுமண்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்கள் எங்களின், எங்கள் வழரும் சந்ததிகளின் இஸ்திரத்தன்மை, புனர்வாழ்வு, கல்வி, தொழில் பயிற்சிகள், தனிப்பட்ட வருமான வாய்ப்புகள் பற்றி முயலாமல் இருப்பது வினோதமாகவும் அதிசயமாகவும் உள்ளது. 

இன்னும், இந்த நிலை - சம்பந்தப்பட்டவர்களின் கல்வி தவிர, தூரநோக்கு சிந்தனைகளின் குறைபாடாகவே  எங்களால் வருத்ததுடன் காண, கணிப்பிட முடிகிறது ! இதேவேளை, எங்களின், உங்களின் பிள்ளைகள் புதிய தலைமுறையினர் இந்தக் குறைபாடுகள் குறைந்த திறமையானவர்களாக காணப்படுகின்றனர் என்பதை மறுக்க, மறுதலிக்க உங்களால் முடியுமா ? எனவே அவர்களை இணைத்து ஏன் எங்களின் சுய பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடாது ?  இதை எல்லாம் விட்டுவிட்டு அன்பளிப்பு செய்யுங்கள் என்று எங்கள் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தின் முகப்பு பக்கத்திலேயே........ இதை இங்கு எழுதுவதற்கு கூச்சமாகவும் அவமானமாகவும் உள்ளது.

இது வரையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் எத்தனை உறுப்பினர்கள் இணைந்திருக்கின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ? இதில் விலகியவர்கள் எத்தனைபேர் ? காயப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்கள், வீரமரணமடைந்தவர்கள், இப்போதும் உயிருடன் உள்ளவர்கள் இவைபற்றி ஏதாவது துல்லியமாகத் தெரியுமா உங்களுக்கு ? இதைத் தெரிந்து கொள்ள ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருகலாமே ? ஏன் செய்யவில்லை ? பதில் தர வல்ல நல்லவர்களே பதில் தாருங்கள் ? 


                                                                                   
அன்புடன் அன்பழகன். ( மன்னியுங்கள் ! என் கருத்தைச் சொல்ல ஒரு புனை பெயரைப் பாவித்திருக்கின்றேன். முன்னாள் இன்னாள் அன்பழகன்களை இந்தக் கருத்தோடு சம்பந்தப்படுத்தி யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கோடு இந்தப் பெயர் பாவிக்கப்படவில்லை. நன்றி.)

No comments:

Post a Comment