March 31, 2012
மூதறிஞர் தந்தை செல்வாவின் 114வது ஜனனதின வைபவம் யாழ்ப்பாணத்தில் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது. இன்று காலை 9:30 மணிக்கு யாழ். நகரில் உள்ள தந்தை செல்வா நினைவாலயத்தில் உள்ள அவரது நினைவு தூபிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் மாலையணிவித்து அவரது ஜனனதின திருநாளை உணர்வு பூர்வமாக கொண்டாடினர்.
இந் நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான
சுரேஷ் பிரேமச்சந்திரன், சி. சிறிதரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ரெலோ
அரசியல் பிரிவுத் தலைவர் சிவாஜிலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணியின்
செயலாளர் வீ. ஆனந்தசங்கரி, தமிழரசுக் கட்சியின் இணைச்செயலாளர் சீ.வீ.கே
சிவஞானம், தந்தை செல்வா அறங்காவலர் குழு தலைவரும் தென் இந்திய
திருச்சபையின் முன்னாள் பேராயர் ஜெபநேசன் அடிகளார், தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலர்
கலந்து கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment