Wednesday, 4 April 2012

TELO ! ExTELO !! சகோதரத்துக்கு ஒரு கடிதம் ! (01)

தமிழ் ஈழ விடுதலை இயக்க முன்னாள் சகோதரர்களே ! சகோதரிகளே !! தினந்தோறும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த இணயப்பரப்பிற்கு வருகை தாருங்கள் ! வரும் போதெல்லாம் உங்கள் குழந்தைகளையும் கூட்டி வாருங்கள் ! ஏன் என்றால் அவர்களைக் கருத்தில் வைத்துத் தான் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றேன்.
நாங்கள் இங்கு போராட்டம், புரட்சி என்று இராணுவ/  அரசியல்கள் எதையும் பேசப் போவதில்லை. இது முன்னாள்களின் மின்நுட்ப அடைக்கல வீடு இங்கு நாங்கள், எங்கள் குழந்தைகள், எங்களின் கல்வி வழர்ச்சியை இணையம் மூலம் விரிவு படுத்துவது பற்றி பேசப்போகின்றோம்! கால நிர்ப்பந்தங்களால் உலகம் முழுவதும் சிதறிப் பிரிந்து வாழும் நாம் இணையம் வழியே ஒண்றிணைந்து உயர்ந்த தொழில் நுட்ப பயிற்சிகளை மேற்கொண்டு உயர் வருமானங்களை ஈட்டுவது பற்றி பேசப்போகின்றோம் ! இணையம் வழியே நம் எல்லோருக்கும் சிறந்த தொழில் நுட்ப வேலைவாய்ப்புப் பயிற்சிகளை சர்வதேச தரத்தில் எமக்குத் தர வல்ல நிறுவனங்கள், அமைப்புகள், அரசுகள் பற்றிப் பேசப்போகின்றோம். திறமையான நிறுவனங்களைக் கண்டுபிடித்து அவற்றின் வழிகாட்டல்கள், பரிந்துரைகள் மற்றும் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுவது குறித்து பேசப்போகின்றோம். தினந் தோறும் வாருங்கள் ஒவ்வொன்றாக பேசுவோம் ! இது எங்கள் மின் நுட்ப அடைக்கல வீடு இங்கு இது பற்றி விவாதிப்போம் ! விமர்சிப்போம் !! நாம் ஒவ்வொருவரும் ஒரு சுய தன்நிறைவுப் பொருளாதார வழம் நிறைந்த சந்ததியை உருவாக்க முயற்சி செய்வோம். அதாவது அவ்வப்போது உங்கள் கருத்துக்களை இங்கே கொமன்ஸ் பகுதியில் எழுதுங்கள், உங்கள் எழுத்துக்களும் கருத்துக்களும் உயர்ந்த இடத்துக்கு எங்களை இட்டுச்செல்லும் என்பதை நம்புங்கள் !

No comments:

Post a Comment