சே
குவாரா என்னும் இதிகாசம் பொலிவியா
காடுகளில் மறைந்தது.பிரபாகரன் ஒரு
இதிகாசமா?!அல்லது தலிபான் போன்ற ஒரு
குழுவின் தலைவனா?இந்த இதிகாசம் அல்லது
குழுவின் தலைமை மறைந்து விடுமா?இந்தக்
கேள்விக்கு விடை தெரியவரலாம் அல்லது
தெரியாமலே உறைந்துவிடலாம்.
அதாவது பிரபாகரன் சரணடையலாம் அல்லது
சயனைட் அருந்தி உயிர்த்தியாகம்
செய்யலாம் அல்லது இன்னும் பிடிபடாமல்
ஈழக் காடுகளுக்கிடையே ஒளிந்து தன்
பழைய கொரில்லா யுத்தத்தை தொடர்ந்து
நடத்தி வரலாம் அல்லது வெளி நாடுகளில்
எங்காவது அடைக்கலம் அடையலாம்.ஆனால்
இன்றைய நிலையில் இலங்கையில் விடுதலைப்
புலிகளுக்கெதிரான"இறுதி யுத்தம்''தன்
இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கும்
நிலையில் பிரபாகரன் தன் சகாக்கள் பலரை
இழந்து,சிலர் அதிர்ச்சியூட்டும் விதம்
சரணடைந்து,இரண்டாம் மூன்றாம்
மட்டத்தலைவர்களே புலிப்படையில் இனி
இல்லை என்றநிலையில்,புலித்தலைவர்
பிரபாகரன் வெல்ல
முடியாதவர்,பிடிபடமுடியாத் தன்மை(Invincibile)கொண்டவர்
என்ற மாயை உடைந்திருக்கிறது.
சுமார் 8.சதுர கி.மீ.பரப்பளவில்
பொதுமக்களுடன் கலந்து கொண்டு தங்கள்
பழைய கொரில்லா முறையுத்தத்தைக் கூட
நடத்த முடியாமல் நிராயுத,ஆயுதப்
பயிற்சி இல்லாத பொது மக்களை மனிதக்
கேடயமாகப் பயன்
படுத்திக்கொண்டு,பிடிபடாமல் தப்ப
பிரபாகரன் செய்யும் இறுதி முயற்சி
எத்தனை நாட்கள் தாக்குப் பிடித்தன?பல
இரண்டாம் மூன்றாம் மட்டத் தலைவர்களை
இழந்து,இருவர் அதில்
சரணடைந்து,கிட்டத்தட்ட வேறு
ஒருவருமில்லை என்ற நிலையில் தன் மகன்
சார்லஸ÷டன் பிரபாகரன் ஈழ வனப்பகுதியில்
கிட்டத்தட்ட பொறியில் மாட்டியது.இனி
தமிழ் இனத்தின் போராட்டம் ஒரு பெரிய
திருப்பு முனையில் உள்ளது என்று சொல்ல
முடியும்.
கொஞ்சம் திரும்பிப்
பார்த்தால்,பிரபாகரன் பல ஈழ இன
விடுதலைப் போராளிகளைக் கொன்றவர் என்ற
குற்றச்சாட்டுக்கு ஆளானவர்.சக
போராளிகள் ஆயுதங் காவியவர்களைக்
கொல்வது ஒரு புறம் என்றால்
ஆயுதங்காவாத மிதவாதத் தலைவர்கள்
பலரையும் கொன்று குவித்தவர்.சிங்கள
ராணுவம் கூட இத்தனை தமிழ் தலைவர்களைக்
கொன்றதில்லை.கொல்ல முடிந்ததில்லை. "சகோதர
யுத்தம்''என்று விபரீத முரணாக
அழைக்கப்பட்ட இந்த யுத்தத்தில் புலிப்
படைத்தலைவரின் ஆணைக்குட்பட்டுக்
கொல்லப்பட்ட
ஸ்ரீசபாரத்தினம்,பத்மனாபா,உமா
மஹேஸ்வரன் போன்ற பலரிடமும் நான் ஒரு
பத்திரிகையாளனாகத் தொடர்ந்த தொடர்பில்
இருந்திருக்கிறேன்.
அது போல் ஆயுதம் பாவிக்காத பாரம்பரியத்
தமிழ் தலைவர்களான அப்பாபிள்ளை அமிர்த
லிங்கம்,யோகேஸ்வரன்,தங்கத் துரை,சாம்
தம்பிமுத்து என்று பலரிடமும் தொடர்பில்
இருந்திருக்கிறேன்.இதில் கடவுள்
அருளால் இன்னும் கொலை செய்யப்படாமல்
உயிரோடு இருக்கும் ஈழத்தந்தை
செல்வநாயகம் அவர்கள் புதல்வர்
சந்திரஹாஸன் மற்றும்
ஸ்ரீசபாரத்தினத்தின் சகோதரர் டாக்டர்
கந்தா ஆகியோரிடமும்.இன்று இலங்கையில்
அமைச்சராக இருக்கும் ஈழ மக்கள்
ஜனநாயகக் கட்சி,பழைய ஈ.பி.ஆர்.எல்.எப்
கொரில்லா அமைப்பின் அரசியல்
அவதாரம்,தலைவர் டக்ளஸ்
தேவானந்தாவுடனும் இன்னும் தொடர்பில்
இருக்கிறேன்.
கொல்லப் பட்டவர்களை அநேகமாக பிரபாகனே
கொன்றார்.அதாவது கொல்ல ஆணையிட்டார்.
சொல்லப்பட்ட ஒரே காரணம்"தமிழ்
துரோகிகள்''.அதாவது என் கருத்துக்கு
உடன்படவில்லை யென்றால் நீ என்
விரோதி.கொல்லப்பட
வேண்டியவன்.அதற்கு"தமிழ்
துரோகி''பட்டம் சூட்டப்பட்டு புலிகளின்
மிகப்பிரபலமான டையர் ட்ரீட்மெண்ட்
கொடுக்கப்படும்.
ஸ்ரீசபாரத்தினத்தை போர் தந்திரோபாயம்
குறித்துப் பேச வேண்டும் என்று அழைத்து
கொன்றார்கள் பிரபாகரன்
கூட்டத்தினர்.இந்தப் படுகொலைகள்தான்
இன்றைக்கு ஈழத் தமிழ் ஆயுத அமைப்புகள்
வலுவிழந்து பிரபாகரனே பொறியில்
மாட்டியது எழுந்ததற்குக்
காரணம்.ஏனெனில் ஸ்ரீசபாரத்தினம் தலைமை
தாங்கிய தமிழீழ விடுதலை
அமைப்பு'டெலோ'என்று அழைக்கப்பட்டது ஒரு
சில பகுதிகளில் பலமாக இருந்தது.அது
போல் உமா மஹேஸ்வரனின் ப்ளாட் சில
பகுதிகளில் வலுவாக இருந்தது.ஈராஸ்
ஈ.பி.ஆர்.எல்.எப் சில பகுதிகளிலும்,மறு
பகுதிகளிலும் எல்.டி.டி.இக்கு இணையாக
இருந்தன.இந்த அமைப்புகள் ஒருங்கிணைந்த
போரட்டம் நடத்திய போது தத்தம்
பகுதிகளில் சிங்கள ராணுவத்தை நன்றாக
வலுவுடன் எதிர்க்க முடிந்தது.அரசாங்க
படைகளுக்கும் ஒரே பகுதியில் கவனம்
செலுத்துவதற்குப் பதிலாக பரவலாகப் பல
பகுதிகளில் ஆயுதக் குழுக்களின்
தாக்குதலை எதிர்கொள்வதில்
முழுக்கவனமும் ஒரே பகுதியில் செலுத்த
முடியாத நிலை இருந்தது.எனவே தான்
பிரபாகரன் தன் அமைப்பைத் தவிர்த்த
அனைத்து அமைப்புகளையும் அழித்ததும் ஒரே
குழுவின் கீழ் ஈழம் முழுவதையும் ஒரே
புலிக்கொடியின்-கொடையின் கீழ் கொண்டு
வர முடியவில்லை.அதற்கு இன்னுமொரு
முக்கியக் காரணம் தன் அமைப்பிலேயே
சற்றே பிரபலமடைந்தவர்களைக் கொல்வது
அல்லது அங்கங்களை ஊனமுறவைத்து நடமாடும்
காய்கறிகளாக அவர்களை மாற்றுவது
என்பதைப் பிரபகாரன் செய்து
வந்ததகுமாகும்.மாத்தையா,கிட்டு,கருணா
போன்றோர் இதற்கு உதாரணங்கள்.இதைக்
குறித்துத்தான் ராஜ தந்திரத்தில் நன்கு
ஊறிய தமிழக முதல்வர் கருணாநிதி
இவர்களுக்கிடையே ஒற்றுமையின்மை
முக்கியக்காரணம் என்று சொல்கிறார்.
இவ்வாறு நடந்த பிறகும் 1987-ல்-இலங்கை
ஒப்பந்தத்திற்குப் பிறகு
பிரபாகரனுக்குப் பல வழிகள்
இருந்தன.அப்போது பேட்ரியாட் ஆங்கிலப்
பத்திரிகையில் டெல்லி நிருபராக இருந்த
நான் பின்னாளில் பிரபாகரனால்
கொல்லப்பட்ட தமிழீழத்தலைவர்
தங்கத்துரையுடன் அவரை டெல்லி அஷோகா
ஹோட்டலில்
சந்தித்தேன்.தங்கத்துரை,சந்திர
ஹாஸன்,சாம் தம்பிமுத்து,சூரிய குமாரி,
ஈழ வேந்தன்,டெல்லி விமான நிலையத்தில்
பிடிபட்ட போராளிகள்(ஜாமீனில் வெளி
வந்து)என்று பலர் என் டெல்லி கரோல்
பாக் வீட்டில் தங்குவது
வழக்கம்.சொல்லப் போனால் நாலில் மூன்று
பங்கு வாடகையை அவர்கள் கொடுத்து
வந்தார்கள்.வீடு என் பெயருக்கு
வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.என்
பங்கு நாலில் ஒரு பங்கு.ஏனெனில்
டெல்லியில் அப்போது அவர்கள் 'லாபி'செய்வது
மிக மிக முக்கிய ஈழத்தமிழ்
சமூக-அரசியல் பங்களிப்பின்
இன்றியமையாத பங்காக இருந்தது.
அஷோகா ஹோட்டலில் பிரபாகரனை நானும்
தங்கத்துரையும் சந்திக்கச் சென்ற போது
சந்திரஹாசன் வேலை விஷயமாகச் சென்னையில்
இருந்தார்.முதன் முறையாகப் பிரபாகரன்
'சந்திரஹாஸன் என்ன சொல்கிறார்?அவர்
ஏதாவது செய்ய முடியாதா?'என்று
கேட்டார்.ஏனெனில் பிரபாகரனும்-உமா
மஹேஸ்வரனும் ஒருவரையொருவர் சென்னையில்
சுட்டுக் கொண்ட நிகழ்ச்சிக்குப் பிறகு
இருவருக்குமே வக்கீலாக வாதாட
கொழும்பிலிருந்து வந்தவர்தான் சந்திர
ஹாஸன்.பிறகு அவரால் திரும்பிப்போகவே
முடியவில்லை.
அஷோகா ஹோட்டலில் கிட்டத்தட்ட ஒன்றரை
மணித் தியாலங்கள் நாங்கள்
கதைத்துவிட்டு தங்கத்துரையுடன் என்
பேட்ரியாட் அலுவலகம் வந்து அங்கிருந்து
சென்னைக்கு எஸ்.டி.டி.
போட்டேன்.ஏனெனில் வெளியிலிருந்து போட
எங்கள் இருவருடமும் பணம் இல்லாத நிலை.
அப்போது சந்திர ஹாஸன் சொன்னது
இன்றைக்கும் தீர்க்க
தரிசனமானது:"ஒன்று இந்தியத்
தலையீட்டிற்குப் பிறகு நான் ஆயுதத்தைக்
கீழே போட்டுவிட்டேன்''என்று பிரபாகரன்
வெளி வர வேண்டும்(ஓவர்
க்ரெளண்ட்).அப்போது அவர் கைது
செய்யப்பட்டால்"ஃப்ரீஃப்ரீநெல்ஸன்
மாண்டேலா''போல் உலகளாவிய இயக்கம்
ஒன்றைத்
துவங்கலாம்.இரண்டு,கைதாகாவிட்டால்
இலங்கை சரித்திரத்திலேயே முதன்
முறையாக இணைக்கப்பட்டுவிட்ட
வடக்குகிழக்கு தமிழ் மாகாணங்களின்
ஒருங்கிணைந்த மாநிலத்தின் முதலமைச்சர்
அவர்.பின் தன் இயக்கத்தை அவர் அந்தமா
நிலத்தின் படை போல்
பயன்படுத்தலாம்.இலங்கை சாசன ரீதியாக
இன்னும் உரிமைகள் கோரலாம்.அனைத்துத்
தமிழ் அமைப்புகளும் பல கட்சி ஜனநாயக
ரீதியில் (மல்ட்டி பார்ட்டி டெமாக்ரஸி)
தேர்தலைச் சந்திக்கலாம்.தங்கள்
ஒப்பந்தத்தை பிரபாகரன் மதிப்பதால்
இந்தியாவின் ஆதரவும் அவருக்கு
இருக்கும்.அதன் மூலம் இலங்கை அரசு
தமிழ் இன அழிவு போக்குகளில்
ஈடுபடமுடியாத நிலையை
உருவாக்கலாம்.அல்லது மூன்றாவதாக இந்த
ஒப்பந்தத்தை ஏற்க முடியாது.ஆனால்
இந்தியத் தலையீட்டிற்குப் பிறகு
நாங்கள் ஆயுதம் ஏந்த மாட்டோம் எனலாம்.
பின் போராட்டங்களில் கைதானால்
உலகளாவிய இயக்கம் துவங்கவே துவங்கும்.
ஆனால் பிரபாகரன் எண்ணம் அவரின் குணத்தை
அல்லது அவரது புத்தியைக் காட்டியது.
ஒப்பந்தத்தை ஒத்துக் கொண்டு
கையெழுத்திட்டு பின்னர்
எதிர்த்தார்.தன் ஆட்கள் 13.பேரை சயனைட்
குடிக்க வைத்தார்.எப்படி
ஸ்ரீசபாரத்தினத்தைத் தந்திரோபாய
நடவடிக்கைகள் குறித்துப் பேசும்
போர்வையில் வரவழைத்துக் கொன்றாரோ அது
போல் ராஜிவ் காந்தியுடன்'நட்புக்
கரங்கள்' நீட்டுகிறோம் என்று அவரைக்
கொன்றார்களோ அதற்கு வெள்ளோட்டம் போல்
இருந்தோ-இலங்கை ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டு அதை நடை பெறவிடாது பல
செயல்களைச் செய்தார்.
இந்நிலையில் இன்று என்ன?இதுதான் பெரிய
ராஜ தந்திர வட்டாரக் கேள்வி டெல்லி
ராஜதந்திர, அரசியல்,புவித்தந்திரோபாய
வளாகங்களில்.பிரியங்கா காந்தியின் என்
தந்தையைக் கொன்ற வரை மறக்க முடியாது
எப்படி மன்னிக்க முடியும் என்ற
நிலைப்பாடுதான் இன்றைய இந்திய அரசை
பிரபாகரனை ஆதரிக்க இயலாத நிலைக்குத்
தள்ளியிருக்கிறது.அதே நேரம் ஈழத்
தமிழர்களின் அவலத்தை இந்தியா கண்டு
கொள்ளாமல் விட முடியாது.
ஆனால் இன்றைய நிலையை உணர்ந்து கொள்ள
ஓரு சிறிய பின்னணி தேவை.உலகளாவிய
பயங்கர வாதம் பல்வேறு ஆயுத
இயக்கங்களின் மூலம்,குறிப்பாக
இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் மூலம் மனித
ஜாதியின் கதியை மாற்றிக்
கொண்டிருக்கும் வேளையில்,'விடுதலை
இயக்கம்'
என்பதற்கும்'ஆயுதக்குழு'என்பதற்குமான
எல்லைக்கோடு மங்கலாகிக் கொண்டிருக்கும்
நிலையில் எந்த ஆயுதக்குழுவும் உலக
சமூக ஆதரவைப் பெறுவது கடினமாகிவிட்டது.
'ஆல்டர்நேட் டிஸ்ப்யூட்
மெக்கானிசம்'போல் சச்சரவுகளைத்
தீர்த்துக்கொள்ள உலகக் கருத்தை
உருவாக்கி,அதற்கு எவ்வளவு காலம்
பிடித்தாலும்,அதற்குள் எத்தனை
தொல்லைகளை கொடுமைகளை அனுபவிக்க
நேர்ந்தாலும்,அக்கருத்துருவாக்கத்தின்
வாயிலாக உரிமைகளை வென்றெடுப்பதற்கே
உலக டிப்ளமேட்டிக் சமூகம் ஆதரவு
தருகிறது.இதற்கு உலகத்தின் தாதா
அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள்
தாக்கப்பட்டது ஆரம்பம்.ஓஸôமா பின்லேடன்
தாக்குதலுக்குப் பிறகு ஆஃப்கானிஸ்தான்
அமெரிக்காவால் தாக்கப்பட்டது.உலகப்
பொதுக்கருத்து அமெரிக்க ஆதரவாகவே
இருந்தது.பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு
அத்தாக்குதலுக்கு உதவ வேண்டிய
நிலைக்குத் தள்ளப்பட்டது.
பின் இராக் சதாம் ஹீசைன் மீதான
தாக்குதலுக்கு உலகக் கருத்து பிளவு
பட்டாலும்,அவரும் அவரது மகன் பிறர்
செய்த தீவிரவாதச் செயல்கள் அதை
நியாயப்படுத்தின.பின் லண்டன்
தாக்குதல்.இந்தியப் பாராளுமன்றமே
தாக்கப்பட்டது.மும்பை
தாக்குதல்கள்.ராஜிவ் காந்தி கொலையைத்
தொடர்ந்து எல்.டி.டி.ஈ.தடை
செய்யப்பட்டது.பின்னர் கிட்டத்தட்ட
உலக நாடுகள் அனைத்தினாலும் அவ்வியக்கம்
பயங்கர இயக்கமாக அறிவிக்கப்பட்டு தடை
செய்யப்பட்டது என்று தொடர்ந்த
நடவடிக்கைகள் புலிகளின் போக்கை
ஆதரிக்கும் நிலைக்கு உலக நாடுகளை,உலகப்
பொதுக்கருத்தைத் தள்ளவில்லை.மாறாக
அங்கு வாடும் தமிழினத்திற்கு இன்றும்
ஆதரவு இருக்கிறது.ஆனால் அதை எவ்வாறு
வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பதில்
வேறு பாடுகள். இந்தியா யுத்த
நிறுத்தத்திற்கு வழி
செய்தாலும்,பிரபாகரனை தனது தேசத்திற்கு
எக்ஸ்ட்ராடிக் செய்ய வேண்டிய நிலையில்
உள்ளது.ஏனெனில் ராஜிவ் காந்தி கொலை
தவிர, பத்மனாப கொலை போன்ற வேறு சில
வழக்குகளிலும் பிரபாகரன் இத்தேச
சட்டத்தின் முன் நிறுத்தப்பட
வேண்டியவர்.இங்கு இனி கூட்டணி
ஆட்சிதான் அரசியல்-சமூக நிதர்சனம்
என்பதால், பிஜேபி தலைமை தாங்கும் அணியோ
காங்கிரஸ் தலைமை வகிக்கும் அணியோ
இரண்டுமே இல்லாத ஒரு மூன்றாம் நாலாம்
அணி குழப்ப விபரீதமோ நிகழ்ந்தாலும்
கூட பிரபாகரன்-புலிகள் மீதான ஒரு
நிலைப்பாடும் வாடும் ஈழத் தமிழனத்தின்
மீதான ஒரு நிலைப்பாடும் இந்தியா
எடுக்க வேண்டிய கட்டாயம்
உருவாகிவிட்டது.
இது
இந்திரா காந்தி கால"இந்து சமுத்திர
பிக் பிரதர்''நிலை போல் இல்லை.ஏனெனில்
உலகம் மிகவும் மாறியிருக்கிறது இந்த
25.ஆண்டுகளில்.அது போல் ராஜிவ் காந்தி
கால இந்திய நிலைப்பாடு போலவும் இது
இருக்க முடியாது. ஒரு புதிய அணு ஆயுதத்
தொழில்நுட்பம் பெருகிய டெக்னாலஜி
உலகில்,உலக பயங்கரவாத ஆயுத இயக்க
எதிர்ப்பு நிலையில் எடுக்கப்பட
வேண்டிய புதிய கணிப்பாகத்தான் இது
இருக்க முடியும்.
ஆர்.வெங்கட்ராமன்
|
No comments:
Post a Comment