ஐரோப்பிய நாடுகளில் கிளைகளை அமைக்கும் நடவடிக்கைகளில் ரெலோ!
Published on April 18, 2011-7:32 am
கடந்த மாதம் ரெலோ அரசியல் கட்சியின் பிரித்தானிய கிளை புனரமைக்கப்பட்டதை தொடர்ந்து பிரித்தானிய கிளையின் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கருணாகரன் ஐரோப்பிய நாடுகளில் கிளைகளை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை சுவிட்சர்லாந்து ஒல்டன் மாநிலத்தில் கருணாகரன் தலைமையில் ரெலோ அரசியல் கட்சியின் சுவிஸ் கிளை அங்குரார்ப்பணக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சேகர் தலைமையில் 8பேர் கொண்ட நிர்வாககுழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து ஜேர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் தமது கட்சிக்கிளை ஸ்தாபிக்கப்படும் என கருணாகரன் தெரிவித்தார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்குவது, மற்றும் கடந்த காலங்களில் பாதிக்கப்;பட்ட தமது உறுப்பினர்களின் குடும்பங்களுக்கான உதவிகளை வழங்குவது ஆகிய நோக்கங்களை கொண்டே முதற்கட்டமாக தமது கட்சியின் ஐரோப்பிய கிளை செயற்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment