தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொதுமக்கள் நலன்களில் அக்கறையில்லை – ரெலோ விந்தன்!
தமிழ்
தேசியக் கூட்டமைப்பு எ.பி.க்கள் தமது கட்சியையும், தமது கட்சிசார்
நலன்களையிலுமே அக்கறை கொண்டவர்களாக இருப்பதாக பொதுமக்களின் நலன்களையும்
கருத்தில் கொள்ளாதவர்களாகச் செயற்பட்டு
வருவதாகக் குற்றஞ்சாட்டினார் யாழ் மாவட்ட ரெலோ அமைப்பாளரும் மாநரசபை
உறுப்பினருமான விந்தன் கனகரத்தினம்.
அண்மையில் தமிழ்
தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று யாழ் மாவட்ட
கட்டளைத் தளபதியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது மாநகரசபை
நடவடிக்கைகள் தொடர்பாகவோ, மாநகரசபை உறுப்பினரான என்மீது புலனாய்வுப்
பிரிவினர் அச்சுறுத்தும் வகையிலும் எனது வீட்டினையும் நான் செல்லும்
இடங்களையும் நோட்டமிட்டு வருவதாக பலமுறை தெரிவித்தும் இது தொடர்பாக
கட்டளைத் தளபதியுடன் கலந்துரையாடவில்லை என அவர் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள உள்ளுராட்சித்
தேர்தல் தொடர்பாக நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற வேட்பாளர்கள்
அறிமுக நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பேச்சு ஆற்றலை மட்டும்
வெளிப்படுத்தியுள்ளதுடன் உள்ளுராட்சித் தேர்தல் வேட்பாளர்களை
அறிமுகம் செய்து வைக்கவில்லை எனவும் ரெலோ அமைப்பினரை உரையாற்றுவதற்கு
அனுமதி வழங்கவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
No comments:
Post a Comment